Archive for February, 2016
தெறிக்க விட்ட சங்கமம் 2016

வருடா வருடம் மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் நடத்தும் பொங்கல் கொண்டாட்டத் திருவிழாவான ‘சங்கமம்‘, இவ்வருடம் ஹாப்கின்ஸ் மேல்நிலைப் பள்ளியில் ஃபிப்ரவரி ஆறாம் தேதியன்று மினசோட்டாத் தமிழ் மக்களின் பேராதரவுடனும், பல தன்னார்வலர்களின் கடும் உழைப்பினாலும், பல்வேறு கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பினாலும் வெகு விமரிசையாக நடைபெற்றது. வழக்கமாகப் போட்டுத் தாக்கும் குளிர், அன்று கொஞ்சம் போல் கருணை காட்டியது. மதியம் இரண்டு மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சிக்கு, அதற்கு முன்பே கூட்டம் குவியத் தொடங்கி இருந்தது. நுழைவு கை வளையம் […]
அமெரிக்கத் தேர்தல் – பகுதி 2

(அமெரிக்க அரசியலிலும் இதெல்லாம் சாதாரணமப்பா..) சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தபடி அயோவா காகஸ் மற்றும் நியூ ஹாம்ப்ஷயர் ப்ரைமரி இரண்டும் நடந்து முடிந்துவிட்டன. அவற்றின் முடிவுகளை அறியும் முன்னர் காகஸ் மற்றும் ப்ரைமரி ஆகியவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். காகஸ் (Caucus) காகஸ் என்பது கட்சியில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் (registered members of a party) கலந்து கொண்டு அதிபர் பதவிக்குப் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளர்களின் கொள்கைகளையும், அரசியல் பலம் மற்றும் செல்வாக்கையும் புரிந்து கொள்ளும் […]
பகுத்தறிவு – பகுதி 3

(பகுத்தறிவு – பகுதி 2) ஹிந்து மதம் குறித்து எழுதுவதாகச் சென்ற பகுதியில் சொல்லி விட்டேன். எழுதலாம் என்று தொடங்கினால் பல கேள்விகள் மனதில் எழுகின்றன. நான் என்ன வேத வியாசரா? வால்மீகியா? ஆதி சங்கரரா? இல்லை ரமண மகரிஷியா? வேதம் அறிந்தவனா? இதிகாசங்களை முழுவதுமாகப் படித்தவனா? சமஸ்கிருதத்திலோ தமிழிலோ கொட்டிக் கிடக்கும் எண்ணற்ற ஞான இலக்கியங்களில் ஏதேனும் ஒன்றையாவது முழுமையாகப் பயின்றவனா? பக்தி இலக்கியங்கள் எழுதியவர்கள் என்று கருதப்படும் உண்மையான ஞானிகளான பட்டிணத்தாரையோ, அருணகிரிநாதரையோ, திருஞான […]
TCTA தமிழர் திருவிழா 2016 கொண்டாட்டம்

பிப்ரவரி 06 , 2016 ஃபிப்ரவரி 6 அன்று TCTA பொங்கல் விழாக் கொண்டாட்டம் நடைபெற்றது. பனிப்பூக்கள் வாசகர்களுக்கு அன்றைய நிகழ்வுகளை விளக்க, எங்களின் வேண்டுகோளுக்கிணங்க எழுதப்பட்ட கட்டுரை: – ஆசிரியர். காலையில் இருந்தே மனம் இறக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்திருந்தது. இன்று டுவின் சிட்டீஸ் தமிழ் அசோசியேசன் மற்றும் பாடசாலையின் பொங்கல் மற்றும் தமிழர் திருவிழா! அனைத்து நண்பர்களையும் குழந்தைகளையும் ஒன்றாகப் பார்க்கும் பெருவிழா!. முகநூலில் வெளியான விழா முன்னோட்டம் எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைத்திருந்தது. […]
திருவிவிலிய கதைகள்: நீதிமானுக்கு சோதனையா?

திருவிவிலியத்தின் (பைபிள்) ஞான இலக்கியங்களுள் ஒன்று பழைய ஏற்பாட்டில் உள்ள யோபு என்னும் நூல். இது இலக்கிய நடையில் அமைந்த நூல். அதுல சொல்லியிருக்கும் ஒரு நிகழ்வை இப்பப் பார்க்கபோறோம். நம்முடைய தின வாழ்க்கையில…. அந்த நல்ல மனுஷனுக்கு இவ்வளவு சோதனையா… கடவுளே எனக்கு மட்டும் ஏன் இந்தச் சோதனை…. நான் என பாவம் செய்தேன்….. எனக்குப் போய் இப்படி நடக்குதே…. இப்படிப் பலரும் சொல்லக் கேட்டிருக்கோம். அவையெல்லாம் சோதனையா?……. தண்டனையா?….. ஒரு காலத்தில யோபுன்னு […]
அவன் அவளில்லை

“எல்லாம் சரி… ஆனா நான் எப்டி….?” “ஏன் உங்களுக்கு என்ன குறைச்சல்….?” “ஹெலோ…. எல்லாமே குறைச்சல்தான்…. ஏதோ ஒரு நாளுக்குதான் நான் ஓகே… வாழ்நாள் எல்லாம் எப்படி…?” என்ற சாய்பல்லவி… தன்னையே ஒரு முறை குனிந்து ஒரு தாழ்வு மனப்பான்மையோடு பார்த்துக் கொண்டாள்……. “எல்லாம் சரியா வரும்… உங்களுக்கு என்ன பிடிச்சிருக்கா… அதுதான் முக்கியம் பல்லவி….” என்றான்.. கண்களைப் பார்த்த… கெளதம்… “அது இல்ல கெளதம்… காதல், கல்யாணம்…. குழந்தை, குடும்பம் இப்படி வெறும் ஆசைகள் மட்டுமே […]
கன்னியும் காதலியும் !

கருணை இல்லாத
காட்டுமிராண்டி
நாட்டுக்குள்ளே
புகுந்தது போல்
விம்மி நிற்கும்
விரதாபம் !
உள்ளே பதுங்கும்
வெண்புலியாய்
அவனது
விரகதாபம் !
மெழுகுவர்த்தி

அப்பா இப்பொழுதல்லாம் அடிக்கடி கனவில வருகிறார். கூடவே அம்மாவும். இயல்பாய் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். பழைய காலத்தைப் பற்றிக்கூடப் பேசிக் கொண்டிருக்கிறோம். அவருடன் பணி புரிந்தவர்களைப் பற்றி, வேலை செய்யும் போது நிகழ்ந்த ஏதேனும் நிகழ்வுகள் பற்றி எனச் சாவதானமாக என்னுடன் உரையாடுகின்றனர். ஒரு சில நேரங்களில் ஏதோ சொல்ல வருகிறார் அது மட்டும் சரியாகக் கேட்க மாட்டேனென்கிறது. திடீரென விழிப்பு வரும்போது யாருமில்லாமல் மனசு கனத்துப் போகிறது. திரைப்படத்தில் மூன்று மணி நேரம் முடிந்த பின்னாலும் திரைப் […]
எங்கேயும் எப்போதும் எம் எஸ் வி – பகுதி 5

(எங்கேயும் எப்போதும் எம்.எஸ்.வி. பகுதி 4) ஃபிப்ரவரி மாதத்துக்கென பல சிறப்புகள் இருந்தாலும், தற்காலத்தில் இம்மாதத்துக்காகவே பலர் காத்திருப்பது வாலண்டைன்ஸ் டே எனப்படும் காதலர் தினத்துக்காகத்தான். அன்பு, எதிர்பார்ப்பு, ஏக்கம் மகிழ்ச்சி, பரவசம் எனப் பல பரிமாணங்களைக் கொண்டு ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒளிந்திருக்கும், எளிதில் விவரிக்க முடியாத மெல்லிய உணர்வே காதல். ‘ஐ ஆம் கமிடட்..’ என ஒப்பந்தமிடும் உறவுகளைப் போலல்லாமல் இதயப்பூர்வமாக உணரப்படும் மிக மிக மெல்லிய உணர்வு காதல். தங்கள் மெல்லிசையால் இசையுலகைக் கட்டிப்போட்ட […]