Archive for February, 2016
ஆத்ம சாந்தி

காஷ்மீர், அதற்கு இரண்டு தலை நகரங்கள். குளிர் காலத்தில் ஜம்மு மற்றும் வெயில் காலத்தில் ஸ்ரீநகர். அந்த ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியைச் சுற்றிப் பார்த்து விட்டுத் தன் அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தான் செல்வம். பசி வயிற்றைக் கிள்ளியது. தால் ஏரிக்கு அருகிலிருந்த கடையில் சப்பாத்தியும், பன்னீர் சாமனும் வேண்டுமென்று சொல்லி விட்டு ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தான். நண்பன் சங்கரும், அவனும் குளிர்கால ஆடை ஏற்றுமதி வியாபாரம் செய்கிறார்கள். இன்று சங்கர் வியாபார விஷயமாக வேறு நண்பரைக் […]
இதழ்

உன் இதழெனும் மடலில்
கவிதை தீட்டி
இளைப்பார …
என் மனம் துடிக்கிறதே!
உன் இதழோரம்
கவியாயிரம் பாட உன்
கதவோரம் நான்வர
என் மனம் எத்தனிக்கிறதே!
சென்ரியு கவிதைகள்

கூட்டிப் பெருக்கிக் கழித்தாலும்
தீரவில்லை போகவில்லை மன வீட்டின்
குப்பை
பட்டமரமும் துளிர்த்தது
எம் எஸ் சுப்புலட்சுமியின்
கான மழையால்
மழைப்பாட்டு

பெருநிலத்தின் பரந்த வெளியில் நிறைந்திருந்த பதமழையின் வாசம் அவனை ஏகாந்த நிலைக்கு இட்டுச் செல்கிறது உழவு மாடுகள் இழுத்துச் செல்கிற ஏர்முனை கலப்பை சலசலப்போடு நகர்ந்து வழுக்கேறிய வண்டல் மண்ணை பதப்படுத்தத் தொடங்குகிறது தென்திசை வரப்பு முனை இறுதி வெளிச்சுற்றின் போது வெறித்திருந்த மழை பொழியத் தொடங்கி வியர்வை உமிழ்ந்திருந்த அவனுடலில் இறங்குகிறது மழைக்குளிர்ச்சியில் மனம் கிளர்ச்சியுற்ற அக்கணத்தில் மழைப்பாட்டைப் பெருங்குரலெடுத்து அவன் இசைக்கத் தொடங்குகிறான் அக்குரலில் அவனது அப்பாவின் சாயலிருப்பதை இனங்கண்டு கொண்டு அசை போட்டவாறு […]
சிகாகோ பொங்கல் விழா 2016 கொண்டாட்டம்

வருடாவருடம் பொங்கல் விழாவைக் கொண்டாடி வரும் சிகாகோத் தமிழ்ச்சங்கம், இவ்வாண்டும் ஏறத்தாழ ஆயிரம் தமிழன்பர்களுடன் கொண்டாடினார்கள். பொங்கல் விழாவானது.சனவரி மாதம் 23ம் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் தொடங்கியது. சிகாகோ தமிழ்ச்சங்கம் வட அமெரிக்கத் தமிழ்மக்களின் முன்னோடிகளில் ஒன்று என்றே நாம் கூறலாம். இச்சங்கம் 46 வருடம் பழைமை வாய்ந்தது. இந்தச் சங்கம் தமிழ்க் கலாச்சார நிகழ்ச்சிகள், பல்கலைக்கழகத் தொடர்புகள், மற்றும் தமிழ் மொழிப்பாட சாலைகள் போன்ற சேவைகளை அளித்து வளர்ந்து வருகிறது. இம்முறை பொங்கல் விழா […]
கணிதன் இயக்குனர் T.N. சந்தோஷ் – நேர்முகம்

கேள்வி: உங்கள் முதல் படம் கணிதன், எந்த வகையைச் சேர்ந்தது. ? படத்தைப் பத்தி கொஞ்சம் சொல்லமுடியுமா? பதில்: ஒரு ஹீரோ ஒரு வில்லன். இரண்டு பேரும் பெரிய புத்திசாலிகள். அவர்களுக்குள் நடக்கும் போராட்டம் தான் கணிதன். இதுல அதர்வா ரிபோர்ட்டரா நடிச்சிருக்கார். ஒரு ரிபோர்ட்டர் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதுதான் கதை. எந்த வகைன்னு சொலனும்னா, இது சோசியல் ஆக்ஷன் த்ரில்லர் படம். கேள்வி: இந்தப் படத்துல நீங்க திரைக்கதையும் எழுதியிருக்கீங்க, டைரக்டும் செய்திருக்கீங்க. அந்த […]
Bollywood Dance Scene – Interview

On the evening of December 12, 2015, the Panippookkal team arrived at Tapestry Folkdance Center to chat with the Bollywood Dance Scene Twin Cities. All sorts of colors and shades came into view as the energetic team entered the dance area. I understood that it was their last class for 2015, but I wouldn’t have […]