Archive for April, 2016
அன்னைக்கு ஓர் அன்னையாக !

மழை நீரில் நான் நனைந்தால் ஜலதோஷம் வந்துவிடும் எனத் தன் முந்தானையால் தலை துவட்டினாயே… தாயே ! தோஷம் உனக்கு வராதா? கையளவு சோறு பானையில் இருக்க ஒருகவளம் தண்ணீரை தான் முழுங்கி – உன் பசியை மறந்து என் பசி போக்கினாயே … தாயே ! பசி உனக்கு வராதா? காய்ச்சலில் இரவெல்லாம் நான்பிதற்ற காத்துக் கருப்பு அண்டியதோ எனத் தன் குலதெய்வதிற்கு காசு முடிந்தவளே …. தாயே ! காய்ச்சல் உனக்கு வராதா? கல்தடுக்கி […]
அன்பை நேசியுங்கள் !

அன்பு
எல்லா பரிசுகளையும்
ஏற்றுக் கொள்கிறது
குண்டூசியைக் கூட.
அன்பு
எல்லா கடிதங்களையும்
படித்து ரசிக்கிறது
சோகமாக இருந்தால் கூட.
அமெரிக்கத் தேர்தல் – பகுதி 4

ஏப்ரல் மாதத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சில பிரைமரி, காகஸ் நடந்து முடிந்து விட்ட நிலையில் அமெரிக்க அதிபர் வேட்பாளர்களில் இன்னும் குழப்பங்கள் நீடிக்கின்றன. குறிப்பாக, குடியரசுக் கட்சியின் சார்பிலான அதிபர் வேட்பாளரை அடையாளம் காண்பதில் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் விடை தெரியவில்லை. ஏப்ரல் ஐந்தாம் தேதி விஸ்கான்சின் மாநில பிரைமரியில், டெட் க்ரூஸ் வென்று 36 பிரதிநிதிகளின் நம்பிக்கையைப் பெற்றார். இதுவரையில் அக்கட்சியில் முன்னிலை வகிக்கும் டானல்ட் ட்ரம்ப், 6 பிரதிநிதிகளின் நம்பிக்கையையே பெற முடிந்தது. […]
அடிமைத்தனத்திலிருந்து விடுதலை ….. பைபிள் கதைகள்

ஆதி காலத்தில் இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டில் பாரோன் மன்னனிடம் அடிமைகளாய்த் துன்புற்றனர். இஸ்ரயேல் மக்கள் பலுகிப் பெருகி எண்ணிக்கையில் உயர்ந்ததால், அஞ்சிய பாரோன் மன்னன் இஸ்ரயேல் மக்களை எதிரி நாட்டினரோடு போரில் ஈடுபடுத்தினார். அதோடு பிறக்கும் ஆண் குழந்தைகளைக் கொல்வதற்கும் அரசனால் ஆணையிடப்பட்டது. அப்போது இஸ்ரயேல் லேவி குலப் பெண்ணொருத்தி கருவுற்று அழகான ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். மூன்று மாதங்களாக அதனை மறைத்து வைத்திருந்தாள். இதற்கு மேல் அதனை மறைத்து வைக்க இயலாததால், கோரைப்புல்லால் […]
அம்மா அப்பா’ விளையாட்டல்ல

‘அம்மா அப்பா’ விளையாட்டல்ல! எதிர் வீட்டுப் பெண் நின்றிருந்தார். “எங்க வீட்ல வேலை செய்றவங்க நின்னுட்டாங்க. உங்க வீட்ல செய்றவங்க வருவாங்களான்னு கேக்க வந்தேன்.” இன்று கிளாரா அக்கா விடுமுறை. சிங்க்கில் கிடந்த பாத்திரங்களை நானே தேய்ப்பதற்கு நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். சொன்னேன். “நம்பர் இருக்கா…ஃபோன் பண்றீங்களா? எனக்கு இப்போவே யாராவது வந்தா தேவலை. ரென்டு நாளாச்சு எங்க வீட்ல வேலை செய்றவங்க வந்து. ரொம்பக் கஷ்டமா டயர்டா இருக்கு.” அழுது விடுவாள் போலிருந்தது. நான்கு […]
மூன்றெழுத்து

மூன்றெழுத்துச் சொல் அந்தச் சொல் காட்டிய நல்ல பாதையிலே நம்மவர் வாழ்க்கையே ஓடிக் கொண்டேயிருக்கிறது ! முழுநிலவின் ஒளியில் புத்துயிர் புத்துணர்வு பெறுவது போல. ஆடும் மயில்கள் பாடும் குயில்கள் பரவசம் அடைவதுபோல் ! அந்தச் சொல்லில்தான் அகிலமும் சுழல்கிறது இயற்கையும் செயற்கையும் கைகோர்த்துச் செல்கிறது ! இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்தி வேளையில் அந்தச் சொல்லை நாமும் உணரமுடியும்! மதங்களும் சாதிகளும் அந்தச் சொல்லைத் தாங்கிக் கொண்டுதான் ஒற்றுமையாக இருக்கின்றன ! அந்தச் சொல் […]
நீங்களும் பிஎம்பி (PMP) ஆகலாம்!!

முதலில், தலைப்பின் நடு வார்த்தையை விவரித்து விடலாம். பிஎம்பி (PMP) என்பதன் விரிவாக்கம் ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் ப்ரொஃபஷனல் (Project Management Professional) என்பதாகும். எந்தத் துறையிலும் ப்ராஜக்ட் மேனேஜராக இருப்பவர்கள், தங்கள் தகுதியை நிரூபித்துக் கொள்வதற்கான தேர்வைப் பற்றிய கட்டுரை இது. ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் இன்ஸ்ட்டிட்யுட் – பிஎம்ஐ (PMI), இதை நிர்வகிக்கிறது. ”மேனேஜராக வேலை பார்க்க ஏதாவது கத்துக்க வேணுமா” என்று நக்கல் அடிப்பவரா? நீங்களும் இதை வாசிக்கலாம். சரி, நிரூபிப்பது இருக்கட்டும். ப்ராஜக்ட் மேனேஜராக […]
நிஜம் நிழலாகும்

“பெட்டி எல்லாம் எடுத்து வெச்சாச்சா ? கேள்வி கேட்டபடி நடந்து வந்தான் ராஜு . சந்த்யா ஆமோதிக்கும் விதம் தலையை அசைத்தாள் . அவனுடைய அடுத்த கேள்வி என்ன என்று அவளுக்குத் தெரியும். கேட்காமல் இருந்தால் நல்லது என்று மனதிற்குள் நினைத்தாள். “கேமரா எடுத்து வெச்சாச்சா?. சார்ஜ் போட்டாச்சா? “ பதில் சொல்லாமல் மழுப்ப நினைத்தாள் சந்த்யா . ஆனால் அவள் மௌனமே ராஜுவிற்கு இன்னும் ஆர்வத்தைத் தூண்டியது. “கேமரா எடுத்து வெச்சாச்சா? புதிசா வாங்கின DSLR […]
யக்ஷகானம்

கடந்த ஏப்ரல் 2ம் தேதி யக்ஷகானம் (Yakshagana) என்ற நாட்டிய நாடகக் குழு மேபிள் க்ரோவில் உள்ள ஹிந்து கோவிலில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. . குரு கீரமானி சிவானந்த் ஹெக்டே தலைமையில் பத்து நபர்கள் கொண்ட இக்குழு “சீதா புராணம்” என்ற நாட்டிய நாடகத்தை மேடையேற்றியது. உடை, ஒப்பனை துவங்கி உரையாடல், நடனம், நாட்டிய நடிப்பு என்ற பல அம்சங்களும் பார்வையாளர்களின் கண்ணைக் கவர்ந்து, மனதைச் சுண்டியிழுத்தது என்றால் மிகையில்லை. இந்தக் குழுவை கர்நாடகா […]