Archive for April, 2016
எருக்குக் காத்து ஏமாந்த மஞ்சள் குருவி

அழகிய மஞ்சள் வாப்ளர் குருவி எருக்குச் செடிகளின் அருகே உள்ள குளத்துப் புல்லின் மத்தியில் குடியிருந்தது. இளவேனில் காலத்தில் ஒரு நாள் புதிய துளிர்களில் கட்டுக்கட்டான அரும்புகளை அவதானித்தது. அதன்மீது அழகான வண்ணத்துப் பூச்சிகளும், தேனீக்களும் மொய்ப்பதைப் பார்த்துப் பரவசம் அடைந்தது. ஆகா, இவ்வரும்புகள் மலராகிப் பிஞ்சாகிக் காயாகிக் கனியாகினால் அதை நான் உண்பேன் என்று எண்ணி மகிழ்ந்து கொண்டது. எனவே மஞ்சள் பறவை காலையும் மாலையும் அவற்றைப் பார்த்து வாயூறிய வண்ணம் காத்திருந்தது. ஒரு நாள் […]
சித்திரைத் திருமகள்

மானொத்த விழியாளின் மருகிய பார்வையும்
மாலையற்ற கழுத்தும் மலரில்லாக் கூந்தலும்
மாநிறச் சருமமும் மயக்குகின்ற விழிகளும்
மாலைச் சூரியனாய் மலர்ந்ததந்த வதனமும்
மாண்புமிகு நெற்றியின் மத்தியிலிட்ட சுடரும்
மாங்கனியாய்க் குவிந்த மதுததும்பும் அதரமும்
மாறனின் கணைகளுக்கு மடுவான நாசியும்
மாரிக்கால வருடலாய் மந்தகாசத் தோற்றமும்