Archive for May, 2016
ஆணவம் அழிவைத்தரும் – பைபிள் கதைகள்

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். அடக்கம் ஒருவரைப் புகழோடு வாழும் நிலைக்கு மேம்படுத்தும், அதே சமயம் அடக்கமின்மையும் ஆணவமும், கடவுள் மேல் விசுவாசமின்மையும் நம்மை இருளுக்குள் ஆழ்த்தி அழிவைத்தரும். உருவம் பார்த்து யாரையும் ஏளனம் செய்யக் கூடாது. மற்றவர்களைவிட நானே பலமானவன் என்று நினைப்பதே நம்முடைய முதல் பலவீனம். அதே போல எதிரியின் பலம் நமக்கு தெரியவில்லை என்றால் அதுவே நமது பலவீனம். இது எல்லாமே நாம் கேள்விப்பட்டதுதான். இதை நமக்கு உணர்த்தும்படியாக, […]
கவித்துளிகள்

ஜன்னலின் சத்தங்கள்
கவனமற்று எதிர்நோக்கும்
அன்றைய ஒலியின்
ஆறாத் தனத்தின்
அலம்பலைக் கடக்க
வழி வேண்டா, மனம் வேண்டா
கடவுளின் அடி வயிற்று
வழியெனத் திறந்து கொண்டே
நகர்கிறது,
கிராமத்துக் காதல் !!!

ஏரில் பூட்டிய எருதுகள்
களைப்படையும் முன்னமே
உழுது களைத்திருப்பார்
அப்பா …
அவர் வியர்வை நிலத்தில்
விழுமுன்னே முந்தானையால்
ஓற்றியெடுத்து நுகர்வாள்
அம்மா ….
ஹைக்கூக் கவிதைகள்

பவள மல்லியாய்ச்
சிதறிக் கிடக்கின்றன
வானில் விண்மீன்கள்
இரவில் தூங்கி
பகலில் விழித்தது
அல்லி
மணிக்கொடிக் காற்று

ந. பிச்சமூர்த்தி…. இவரைத் தாண்டி நீங்கள் புதுக் கவிதைக்குள் போய்விடவே முடியாது…. மணிக் கொடி காலத்தில் புதுமைப் பித்தன், கு. பா. ரா வுக்குப் பின் வரும் இவரின் ஆளுமை…. அசாத்தியமானது…. 1930ல் மணிக் கொடி இதழில் எழுதத் தொடங்கினார்….குடும்பப் பிரச்சினைகளை நிறைய எழுதினார்….குடும்பம் என்பதே கலவைகளின் கூட்டு..அதில் எல்லாரும் ஒவ்வொரு மாதிரி இருக்கலாம்.. ஒவ்வொருவரும் ஒரே மாதிரியாகவும் இருக்கலாம்.. ஆனாலும் மனங்கள் வேறு படும் தருணங்கள் வந்தே தீரும்.. கருத்துக்கள், அவரவரின் பார்வையில் காட்சியின் பொருள் […]
உலகம் செழிக்கும்

நதி!
நம் உறவுகளின் பாலம்,
ஊற்றாய்ப் பிறந்து!
விதம் விதமாய்ப் பெயர் கொண்டு
பெருக்கெடுத்து ஓடும்.
திரைப்படத் திறனாய்வு – 24

சமீபத்தில், சூர்யா நடித்து வெளிவந்த “24” என்ற தமிழ்த் திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அது குறித்து ஒரு சிறு கட்டுரை எழுதலாம் என்று எடுத்த முடிவின் விளைவே இது. வழக்கமாகக் குறிப்பிடும் ”பொறுப்புத்துறப்பு” (disclaimer) ஒன்றையும் முதலிலேயே கூறிவிட்டுத் தொடரலாம். இதனைத் திரைப்பட விமர்சனமாகவோ, திறனாய்வாகவோ பார்க்க வேண்டாம். தமிழ்த் திரைப்படங்களைத் தொடர்ந்து பார்க்கும் ஒரு சாதாரண ரசிகனின் பார்வை என்றே கொள்ளவும். படத்தின் பெயரை வைத்துச் சற்று எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது என்றே கூற […]
பகுத்தறிவு – பகுதி 4

(பகுதி – 3) கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக இந்தக் கட்டுரையைத் தொடர இயலாததற்கு இதனை எதிர்பார்த்திருந்த வாசகர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். எழுத இயலாததற்கான காரணம் என்று குறிப்பிட்டு எதனையும் சொல்ல இயலவில்லை. மனிதனொன்று நினைக்க இறை – எங்கும் நிறைந்திருக்கும் இயற்கை என்று வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் – ஒன்று நினைக்குமென்பதையே காரணமாகச் சொல்லலாம் என்று விழைகிறேன். இயற்கையில் எதுவுமே தற்செயலாக நிகழ்வதில்லை என்பதை முழுமையாக நம்புவதன் வெளிப்பாடே இது. நாம் பிறந்த இடம், […]
தலையங்கம்

வாசகர்களுக்கு வணக்கம் ! உலகிலேயே மிகவும் பெரியதும், முக்கியமானதுமான ஒரு குடியரசுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவின் நான்கு மாநிலங்களின் சட்டசபைகளுக்கான தேர்தலின் சமீபத்தில் நடந்து முடிந்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டு, வென்ற கட்சிகள் பதவிப் பிரமாணமும் எடுத்துக் கொண்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிகள் சரியானவையா, மக்கள் வேறுமாதிரியாகச் சிந்தித்திருக்க வேண்டுமா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து எழுதுவதற்கு, பனிப்பூக்கள் ஒரு அரசியல் பத்திரிகையன்று. நடந்து முடிந்த இந்த ஜனநாயகத் திருவிழாவில் நம் கண்களுக்குப் பட்ட முக்கியமான சில விஷயங்களை ஒரு தலையங்கமாக […]
உச்சி தனை முகர்ந்தால்

வழக்கம் போல் அந்த அதிகாலை நேரம் விடிந்தது. ஒவ்வொரு நாளும் இதே தான் என்ற ஒரு அலுப்புடன் எழுந்தான் தேனப்பன். வாசலில் செல்வி கோலம் போட்டு கொண்டு இருந்தாள். உள்ளே கோபி ஒருக்களித்து திரும்பி படுத்தான். பழக்கமான உடல் வழக்கமான வேலைகள் செய்தது. ஆனால் மனம் அன்று ஒரு நிலையில் இல்லை. தேதியைக் கிழிக்கும் பொழுது இன்று காலையில் சீனுவை ரயில் நிலையம் சென்று கூட்டி வர வேண்டும். மூன்று நாட்கள் கும்பகோணம், சிதம்பரம், பட்டீஸ்வரம் செல்ல […]