Archive for June, 2016
சலங்கை பூஜை

மினசோட்டாவில் வசிக்கும் குமாரி கிரன்மாயி அவர்களின் சலங்கை பூஜை ஹாப்கின்ஸ் கம்யூனிட்டி அரங்கில் ஜூன் 4 ம் தேதி நடைபெற்றது. 12 வயதே நிரம்பிய கிரன்மாயி மேபிள் குரோவ் பள்ளியில் ஆறாம் நிலையில் படிக்கிறார். கிரன்மாயி தனது ஐந்தாம் வயதிலிருந்து பரத நாட்டியம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தாராம். ஆசிரியர் திருமதி பத்மஜா தாமிபிரகாடாவிடம் தொடங்கி, பின்பு ஆசிரியர் திருமதி சுசித்ரா சாய்ராம் அவர்களிடம் தொடர்ந்து பரத நாட்டியம் கற்றுக் கொண்டுள்ளார்.– ”கலா வந்தனம்” எனும் இந்த பரதநாட்டியப் […]
குறுக்கெழுத்துப் புதிர்

கோடை விடுமுறையைக் கழிக்க ஏதாவதொரு ஊருக்குக் குடும்பத்துடன் சென்று வரலாமெனப் பலரும் முனைந்து கொண்டிருக்கும் வேளையில், உங்களுக்கு உதவ உலக நகரங்கள் சில குறுக்கெழுத்துப் புதிராக பட்டியலிடப்பட்டுள்ளன. புதிரை விடுவித்து, உங்களது பயணத்தை முடிவு செய்யுங்களேன்!! குறிப்புகள் மேலிருந்து கீழ் 1. ஸ்கொயர் மைல் நகரம் என்றழைக்கப்படும் ஐரோப்பிய நகரம். (4) 3. மூன்றாவது ரோம் எனப்படும் நகரம்.(3) 4. ஹாலிவுட், கோலிவுட் வரிசையில் சாண்டல்வுட் திரைத்துறை நகரம்.(5) 8. சிங்கநகரம் எனப்படும் ஆசிய நகரம்.(6) 9. […]
பூந்தோட்டம் பராமரித்தல்: களிமண்

மினசோட்டா மாநிலத்தில் பலவகையான மண்வகைகள் காணப்படுகின்றன. ஆறு, ஏரிகள் அதிகமுள்ள மினசோட்டாவில் தாவரவகைகள் எமது வடமேற்கில் இருந்து தென்கிழக்கு வரை வெவ்வேறாக காணப்படுகின்றன. இவை ஒருபுறம் பிரதேச வெட்ப தட்ப நீடிப்புக்களைப் பொறுத்து அமைந்தாலும் வீட்டுத் தோட்டங்களையும், விவசாயங்களையும் பொறுத்தளவில் அவை மண்ணின் தன்மையைக் கொண்டும் அமையும் எனலாம். பண்டைக் காலத்தில் தமிழர் வாழ் ஊர்களில் நீர் நிலைக்கருகாமையில் கிண்டியெடுக்கப்படும் களிமண்ணானது வீடுகட்ட செங்கட்டிகளையும், கூரை வேய ஓடுகளையும், உணவைச் சமைத்துக்கொள்ளவும், நீரைச் சேகரித்துக் கொள்ளவும் உதவியாக […]
அப்பா…

மவுண்ட் ரோட் தேனாம்பேட்டை சிக்னல் அருகே உள்ள அப்பல்லோ மருத்துவமனை…. முப்பது மணி நேர விமானப் பயணத்திற்குப் பிறகு, நேரடியாக ஏர்போர்ட்டிலிருந்து ஹாஸ்பிடல் வந்திருந்த கணேஷ் கண்ணீர் விழிகளும், களைப்புத் தேகமுமாய் ஐ.சி.யூ. வாசலில் ட்யூட்டி டாக்டரின் வருகைக்காகக் காத்திருந்தான்… ஐ.சி.யூ.வின் உள்ளே அப்பா உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார், வெண்டிலேட்டரின் தயவில் சுவாசம் நடந்து கொண்டிருக்கிறது….. ஐ.சி.யூ கதவிலிருந்த வட்டமான சிறு கண்ணாடி வழியே உள்ளே பார்க்க, சுயநினைவில்லாமல் மருத்துவ உபகரணங்களுக்கும், குழாய்களுக்கும் நடுவே ஒரு திடப்பொருளாய்ப் […]