Archive for June, 2016
இந்திய தரிசனம்

நான் அமெரிக்காவில் கம்பெனி மாறியவன். பெங்களுர் ஏர்போர்டில், என்னை அமெரிக்காவிற்கு அனுப்பிய, நான் பணிபுரிந்த முந்தைய நிறுவனத்தின் வரவேற்பு விளம்பரத்தைப் பார்த்த போது, “வாடா மவனே வா” என்று எனக்காகவே வைத்ததைப் போலவும், வைவதை போலவும் இருந்தது. பெங்களூர் ஏர்போர்ட்டில் வை–ஃபை தேவையென்றால், அதற்கு நாம் நமது மொபைல் நம்பரைக் கொடுத்து, அதில் அவர்கள் அனுப்பும் OTPயை எடுத்து எண்டர் செய்து, அதை அவர்கள் சரி பார்த்து, பிறகு இலவச வை–பை கொடுக்கிறார்கள். எந்த நாட்டு மொபைல் […]
உண்மையான அன்பே உலகிற்கு விளக்கு – பைபிள் கதைகள்

“உலகில் வெறுப்பது யாரக இருந்தாலும், நேசிப்பது நீங்களாக இருங்கள்”, என்றார் அன்னை தெரசா. எத்தனை யுகங்கள் கடந்து சென்றாலும் அன்பின் வடிவமாகப் போற்றப்படுவது மாசற்ற தாயன்பே என்பது மிகையல்ல. காரணம்…… வார்த்தைகளே இல்லாத வடிவம் அளவுகோலே இல்லாத அன்பு சுயநலமே இல்லாத இதயம் வெறுப்பைக் காட்டாத முகம் ……………… அதுதான் அம்மா கிறிஸ்துவ மறையின் புனித நூலாம் திருவிவிலியத்தின் (பைபிள்) பழைய எற்பாட்டில் கூறப்பட்டுள்ள ஒரு நிகழ்வில் நீதியின் தேவன் பொய்மையின் கொடூரத்தை வெளிக் கொணர்ந்து உண்மையான […]
பிள்ளைகளும் பெற்றார்களும் புத்தகம் வாசித்தல்

சின்னஞ்சிறு சிட்டுக்களாகிய எமது குழந்தைகளின் மூளைகள் துரிதமாக வளரும் உடல் அங்கமாகும். புத்தகம் வாசித்தல் பயிற்சியானது சுகாதீனமான மூளை வளர்ச்சியின் அத்திவாரம். சிறு பிள்ளைகள் மூளையின் வளர்ச்சியில் 90 சதவீதமானது தாயார் தன்னுள்ளே சுமக்கும் தறுவாயிலிருந்து 5 வயது வரை நடைபெறும். மூளையானது மற்றைய உடல் தசைகள் போன்று பயிற்சியால் வலிமையடையும் பாகம். ஆயினும் ஒரு வித்தியாசம் என்னவென்றால் அது தனது பிரதான வளர்ச்சியைப் பிள்ளையின் முதல் 60 மாதங்களிலேயே பூர்த்தி செய்து கொள்ளுகிறது. உடலின் வெளிப் […]
அமெரிக்கத் தேர்தல் – பகுதி 6

(அமெரிக்கத் தேர்தல் – பகுதி 5) ஒரு வழியாக ஜூன் மாதம் பதினான்காம் தேதியோடு அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ப்ரைமரிகள் முடிவடைந்தன. குடியரசுக் கட்சி சார்பில், அனைத்து போட்டியாளர்களும் சில வாரங்களுக்கு முன்னர் விலகிக் கொண்டுவிட டானல்ட் ட்ரம்ப் மட்டுமே எஞ்சியிருந்தார். ஹிலரி கிளிண்டன் கடைசி நேர பலத்த போட்டிக்குப் பின்னர், பெரும்பான்மையான பிரதிநிதிகளின் ஆதரவோடு ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் என்ற நிலையை எட்டியுள்ளார். தான் அதிபர் பதவிக்குப் போட்டியிடப் போவதைத் தன்னந்தனியாக வந்து செய்தியாளர்கள் முன் […]
சுதந்திர தேவி

ஆரவார மில்லா அட்சன் ஆற்றில்
ஆர்பாட்டா மில்லா அலைகள் நடுவே
அகிலம் போற்றும் விடுதலைச் சின்னமாய்
அகவை மறுத்து நிற்கிறாள் அந்நங்கை.
ஆணவமிகு ஆதிக்க ஆட்சியாளர் ஒழிந்திட
ஆற்றல்மிகு ஆதவனின்கீழ் அனைவரும் சமமெனும்
ஆவணமதை ஒருகையிலும் அடிமையிருளைப் போக்கிட
ஆழிகாற்றும் அணைக்காவிளக்கை மறுகையிலும் ஏந்தியிருப்பாள்.
வெள்ளரிக்காய் சம்பல்

பட்டப் பகல் வெய்யிலில் உடலும் உள்ளமும் குளிர்மையடைய இனிய வெள்ளரிக் காய் இதமான இன்பம் தரும் காய்கறி. பிஞ்சு வெள்ளரிக் கொடியில் இருந்து கொய்து, கொறித்துச் சாப்பிடலாம். வெள்ளரிக்காயைப் பலவிதமாகவும் பக்குவப்படுத்தி நம்மூர் மக்களும், இவ்வூர் மக்களும் சாப்பிடலாம். இதோவொரு இலகுமுறை தேவையானவை 1 பெரிய வெள்ளரிக் காய் 1 காரட் 1 தேக்கரண்டி சிறிதாக நறுக்கிய புதினா இலைகள் ½ தேக்கரண்டி உப்பு 2 சிறிய வெங்காயம் 2 கட்டித் தயிர் (Greek Yogurt) 1 […]
கவித்துளிகள்

தன்னுள் பெண்மையை
உணர்ந்தாள் …
முதலாய் வெட்கப்பட்ட
பெண் !
தன்னுள் பெண்மையை
உணர்ந்தாள் ….
முதலாய் காதல் வயப்பட்ட
பெண் !
சாலையோர அனாதையாய் நான்

கண்டதும் காதல் கொண்டேன்!
கள் குடித்த மந்தி போல்!
இல்லான் உனை ஏற்க!
என் இல்லத்தார் எதிர்ப்புரைக்க!
உற்றோறும் பெற்றோறும் உறங்கும்
ஓர் இரவில் இல்லம் நீங்கி!
எங்கிருந்தோ வந்த நட்பு

எல்லா இடங்களிலிருந்தும் விரட்டப்பட்டு, எங்காவது சாப்பிடக் கிடைக்குமா என ஏக்கத்திலிருந்த அந்த தெரு நாய், அது படுத்திருந்த இடத்தில் மற்றொரு குட்டி நாய் படுத்திருப்பதைப் பார்த்து உர்… என உறுமி இது என் இடம் என்று எதிர்ப்பைக் காண்பித்தது. இதனைக் கண்டவுடன் அந்த இடத்தில் இருந்த நாய் வாலைப் பின் கால்களில் நுழைத்து வளைந்து குழைந்து மெல்ல அந்த இடத்தை விட்டு நகர்ந்தது. போகும்போது கூட ஓரக்கண்ணால் இது எங்காவது தன் மீது பாய்ந்து விடுமோ எனப் […]
இளையராஜா சல்யூட்ஸ் தியாகராஜா

மேப்பிள் குரோவ் ஹிந்து கோவிலில் மே 27ம் தேதி இளையராஜா சல்யூட்ஸ் தியாகராஜா என்ற தலைப்பில் சைந்தவி பிரகாஷ், நிரஞ்சன், கார்த்திக், அனுஷ், ஸ்ரீராம் ரமேஷ் மற்றும் செல்வா ஆகியோர் பங்கு கொண்ட இசை நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது. இதற்கு சுபஸ்ரீ தணிகாச்சலம் தலைமை ஏற்றார். இந்த நிகழ்ச்சியை மினசோட்டாவில் கர்நாடக சங்கீதப் புகழ் திருமதி நிர்மலா ராஜசேகர் சிறப்பாகத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் புகழ் பெற்ற கர்நாடக சங்கீத கீர்த்தனைகளை இளையராஜா எவ்வாறு அவரது […]