Archive for October, 2016
சிம்சோனின் வலிமை எங்கே … ? பைபிள் கதைகள்

திருவிவிலியத்தின் (பைபிள்) பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள நிகழ்வைப் பார்போம். அந்தக் காலத்தில் கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு எல்லாக் கொடைகளையும் கொடுத்திருந்தார். வசதி வந்தால் வழிமாறும் மனிதர்கள் போல இஸ்ரயேல் மக்களும் கடவுளை மறந்து தீய வழிகளை நாடிச் சென்றனர். அதன் பலனாகத் தங்களுடைய உரிமைகள் இழந்து பெலிஸ்தியர்களுக்கு அடிமையானார்கள். அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரயேல் மக்களைக் காப்பாற்ற கடவுள் சிம்சோன் என்பவரைப் படைத்தார். சிம்சோன் வளர்ந்து அழகான, வலிமையான வாலிபனாக உருவெடுத்தார். சாதாரண வலிமையல்ல, ஒருநாள் அவரை […]
கணனிக் கணிப்புக்குக் கொத்தடிமையாலாகாது

இன்று கணனித் துறையில் கற்சிலைக்கும் கற்பூர வாசனையறியாத கழுதைக்கும் கதர் வேட்டி கட்டியது போல ஏந்திரக் கற்றல் (அனுமானிப்புக் கற்றல்) Machine Learning எனப்படும் பல்லாண்டு கால அனுமானிப்பு புதிய பொலிவைப் பெற்றுள்ளது. சேவை வர்த்தகத்தில் புதிய மென்பொருள் உருவாக்குதலிலும், புதிய வர்த்தக, சூழல் புதிர்களை புதிய – புதிய அறிவியல் சிந்தனைகள், கண்டுபிடிப்புக்கள் மூலம் தீர்க்காமல் வழித் தேங்காயை எடுத்து தெருச்சாமிக்கு அடிக்கும் பலரையே வர்த்தகக் கணனித் துறையில் காணக்கூடியக் கூடியதாகவுள்ளது. ஆடம்பர உடை உடுத்தலில் […]
வீணாக்கப்படும் உணவுப் பொருட்கள்

வட அமெரிக்காவில் வாழும் நாம் அனைவரும் வேளாவேளைக்கு மளிகைக்கடை, காய்கறிக்கடை போய் வருகினும் நாம் வாங்கும் நான்கு காய்கறி பொட்டலங்களில், பைகளில் ஒன்றை வழக்கமாக குப்பையில் எறிந்து வருகிறோம் என்றால் நம்புவீர்களா? மேலும் நாம் வருடத்தின் பண்டிகை காலங்களை அனுகுகிறோம். எனவே நாம் பல்வேறு கொண்டாட்டங்களையும் கோயில், தேவாலயங்கள், மண்டபங்கள், உணவகங்கள், வீடுகளிலும் விருந்தாளிகளை வரவேற்று களிப்புடன் விருந்துணவில் பங்குபற்றிக் கொள்வோம். எனவே சூழல் – சுகாதாரம் பேணுவதையும், நடைமுறை எரிபொருள் உற்பத்திச் செலவுகளையும் எவ்வாறு பொறுப்பறிவுடன் […]
பேராசை கொண்ட போக்கிரி ரக்கூன்

சூப்பீரியர் காட்டில் ஒரு போக்கிரி ரக்கூனிற்கு நீண்ட நாட்களாக ஒரு பேராசையிருந்து. அது தான் எப்படியாவது ஒரு நாள் காட்டிற்கு தலைவனாக வேண்டும் என்று ஆசைப்பட்டது. இதற்காக எத்தனையோ திட்டங்களையெல்லாம் தீட்டியது. தனது போக்கிரித்தனத்தினால் பல குறுக்கு வழித்ததந்திரங்கள் எல்லாம் செய்தது. ஆனால் அவையொன்றுமே பயனளிக்கவில்லை. காரணம் காட்டின் சமூகத்தின் நலன்கருதி வாழும் ஓநாய் மூதாட்டியையே வனவிலங்குகள் தலைவியாகக் கருதின. எனவே காட்டு ஓநாய் மூதாட்டி உயிரோடு இருக்கும் வரை தனக்கு வழியேயில்லை என்று புரிந்து கொண்டது. […]
அமெரிக்கத் தேர்தல் – பகுதி 10

(பகுதி 9) மாதக்கணக்கில் திரும்பிய பக்கமெலாம் பரபரப்பான விவாதங்களும், சர்ச்சைகளும், அறிக்கைகளும், திருப்பங்களும் கொண்டிருந்த அதிபர் தேர்தல் இன்னும் பத்து நாட்களுக்குள் நடைபெறவுள்ளது. பல மாநிலங்களில் முன்கூட்டியே வாக்களிக்கும் வசதிகள் இருப்பதால் லட்சக்கணக்கானோர் ஏற்கனவே வாக்களித்து விட்டனர். (மினசோட்டா, மினியாபோலிஸ் நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் இவ்வசதியைப் பயன்படுத்த விரும்பினால், https://vote.minneapolismn.gov/www/groups/public/@clerk/documents/webcontent/wcmsp-185726.pdf என்ற சுட்டியில் விவரங்கள் அறியலாம்). இருந்தாலும், கடந்த சில நாட்களில் நடைபெற்ற விஷயங்கள், நாம் சரியான முடிவைத் தான் எடுத்தோமா என்ற சந்தேகத்தை இவ்வாக்களர்களுக்கு எழுப்பக் கூடும். […]
தீபாவளி ஃப்ளாஷ்பேக்

கொளுத்திப் போட்ட பட்டாசு கதைகள் பலவும் சொல்லிடுது….. குழந்தைப் பருவ தினங்களிலே குதூகலம் நிறைந்த தீபாவளி…. மாதம் இரண்டு முன்னமேயே மாறாது மலர்ந்திடும் கனவதுவே…. முழுதாய் நீளும் கால்சட்டையோ முன்னம் போலே அரைக்காலோ தந்தை சற்று மனம்வைத்து தனக்குப் பிடித்ததைத் தருவாரோ? விரும்பி வாங்கிய துணிமணியை விரைவாய் டெய்லரும் தைப்பாரோ… தினமும் அவரின் கடைசென்று திரும்பி வந்தோம் வெறுங்கையாய் !! முந்தைய தினத்தின் நள்ளிரவில் முடித்தே கொடுக்க, மகிழ்ந்தோமே !! தெருவில் முதலாய் நம்வீட்டில் தெறிக்க வேண்டும் […]
அன்பின் பெருமை

அன்பு என்பது நாம் சுவாசிக்கும் மூச்சுக் காற்று போல அவசியமானது. “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது “ என்பது வள்ளுவர் வாக்கு. இல்லறம் நல்லறம் ஆக அன்பு இன்றியமையாதது அன்பினால் கிடைக்கக்கூடிய பலன்கள் எண்ணிலடங்கா. நமது ஆற்றல், மன வலிமை, உடல் வலிமை, அறிவாக்கம் இவற்றுக்கு உறுதுணையாக நிற்பது அன்பே. நமது வாழ்க்கை ஒரு கணித மேடை போன்றது. நமது நண்பர்களையும், சுற்றத்தாரையும் கூட்ட வேண்டும் (+) பகைவரை விலக்க வேண்டும் (-) […]
வன்முறை மறுப்பு நாள் – NON VIOLENCE DAY

இந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி இந்தியாவின் தேசத் தந்தை ஆன காந்தியின் 147 ஆவது பிறந்த நாளை “வன்முறை மறுப்பு நாள்” (NON-VIOLENCE DAY) முதன் முறையாக மினசோட்டா மாநிலத்தின் தலைநகரக் கட்டிட அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவை இந்திய மினசோட்டா அசோசியேஷன் மற்றும் மினசோட்டா இந்துக் கோவில்இரண்டும் இணைந்து ஏற்பாடு செய்து இருந்தனர். புருஷ் கோரி இந்திய மினசோட்டா அசோசியேஷன் சார்பில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழக்கினார். மினசோட்டா மாநில அமைப்பு சார்பில் மாநில உறுப்பினர்கள் […]
கேனன் காட்டாற்று வெள்ளம்

மினசோட்டா மாநிலத்தின் நாட்டுப்புறமும், பட்டினங்களும் இலையுதிர் காலத்திலே பல அடைமழைகளினால் அல்லல் பட்டவாறுள்ளன. செயின்ட்பால் தலைநகரத்தின் தென்கிழக்கில் நார்த்ஃபீல்ட் எனும் அமைதியான விவசாய நிலங்கள் மற்றும் சிறிய பல்கலைக் கழகங்கள் கொண்ட ஊர் ஒன்றுள்ளது. கால்ரன் கல்லூரி, மற்றும் செயின்ட் ஓலஃப் பல்கலைக் கழகங்கள் நூற்றாண்டுகளாக நார்த் ஃபீல்ட் ஊரை இருப்பிடமாகக் கொண்டுள்ளன. வளமான இலைகள் கோலாகலமாக ஒருபுறம் நிறம் மாற அதேசமயம் கேனன் (Cannon River) எனும் பட்டினத்தூடு செல்லும் காட்டாறு மடை கடந்து பாய்ந்தவாறுள்ளது. […]