Archive for October, 2016
அனோகா ஹாலோவீன் அணி வகுப்பு

96 ஆண்டுகால பாரம்பரியம் கொண்டது, மினசோட்டாவின் அனோகாவில் (Anoka) நடக்கும் ஹலோவீன் கொண்டாட்டங்கள். 1920 ஆம் ஆண்டில், அனோகாவின் இளைஞர் பட்டாளம், ஹலோவீனின் போது நடத்தும் வேடிக்கை விளையாட்டுகள், மக்களிடையே திண்டாட்டத்தை ஏற்படுத்த, அனோகா நிர்வாகத்தினர் கூடி, எவ்விதப் பிரச்சினைகளுக்கும் இடமில்லாமல், ஒருமித்த திட்டத்துடன் நடத்தத் தொடங்கியவை, இக்கொண்டாட்ட நிகழ்வுகள். இங்கு அக்டோபர் மத்தியில் இருந்தே ஹாலோவீன் நிகழ்வுகள் தொடங்கிவிடுகின்றன. குழந்தைகள், பெரியோர்களுக்கான விளையாட்டுகள், வேடிக்கையாக திகில் ஏற்படுத்தும் வீடுகள், ஒப்பனை நிகழ்வுகள், திரைப்பட ஒளிபரப்பு என […]
காதல் பிசாசே ..

ஒன்பது மணிக்கே வெயில் சுட்டெரித்தது. பரங்கிமலை ரயில் நிலையத்தில் வெயிலைப் பொருட்படுத்தாது கூட்டம் நிரம்பி வழிந்தது. நீலப் புடவை கட்டிய பெண் ஒருத்தி ‘பரக் .. பரக்’ என்று இரண்டு கைகளிலும் தென்னந் தொடப்பத்தைப் பிடித்து பெருக்கிக் கொண்டிருந்தார். யாரோ சாப்பிட்டுவிட்டுப் போட்ட கொய்யாப் பழத்தின் ஒரு பாதி உருண்டோடியது. எங்கிருந்தோ விர்ரென்று பறந்து வந்த காகம் அரை செகண்ட் அமர்ந்து, தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்து, கா கா என்று கரைந்து பழத்தைக் கொத்திக் கொண்டு […]
வாசகர்களுக்கு வணக்கம் !

இந்த இதழ் வெளிவரும் நாளிலிருந்து கிட்டத்தட்ட ஒரு வாரங்களில், உலக ஜனநாயகத்தில் மிகப்பெரிய ஒன்றான அமெரிக்க நாட்டிற்கான அதிபர் தேர்தல் நடந்து முடிந்திருக்கும். பண்டைய காலத்து குடவோலை முறை தொடங்கி இன்றைய காலத்து நவீன இயந்திரங்களின் உதவியுடன் நடத்தப்படும் தேர்தல்கள் வரை, இவை அனைத்தின் எதிர்பார்ப்புகளும் சாதாரண மனிதர்கள் தங்களுக்குத் தேவையான தலைமையைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்வது என்பதுதான். நாட்டின் பல துறைகளும் நாணயம் குறைந்து விட்டது என்பது உண்மைதான் என்றாலும், இன்றும் சாதாரணக் குடிமக்கள் வாக்களித்து […]
ஆட்டிஸ அன்புத் தம்பியுடனான அன்றாட வாழ்க்கை

பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டது. ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட என் தம்பி சஞ்சித் எனக்குக் கிடைத்ததை ஆசிர்வதிக்கப்பட்டதாகவே கருதுகிறேன். இந்தப் பத்து வருட காலத்தில், பல ஏற்றத்தாழ்வுகள் வாழ்க்கையிலே, ஆனால் எந்தச் சந்தர்ப்பத்திலும் இது போன்ற ஒரு தம்பி கிடைத்தது தவறு என்று எண்ணியதில்லை, இனிமேலும் எண்ணப்போவதில்லை என்பது உறுதி. அன்பான, அறிவான, பாசம் மிகுந்த அற்புதக் குழந்தை என் தம்பி, வாழ்க்கையில் ஒரு நாள் மிகவும் உயர்ந்த நிலைக்கு வருவான் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. […]
மனிதத் தத்துவம்

மனிதனே…
உன்னையே திரும்பிப் பார்
உள்ளம் சென்ற வழியில்
துள்ளித் திரிந்தாய்
இளமையில்….
இருப்பது பொய்
போவது மெய்
உணர்ந்து கொண்டாய்
முதுமையில்….
கவித்துளிகள்

இயற்கையின் சாரல் வறட்சியின் வெற்றி மழைத்துளி மண்ணைத் தொடும் வரை… வந்தபின் வறட்சியின் சுவடு மறைந்தே போய்விடும்…. மண்ணின் வாசமும் மழையின் சாரலும் மகிழ்ச்சியில் மனம் இலேசாகி நம் நாசித் துவாரங்களை ஊடுருவும் ….!! தளிர்கள் செழித்து செடியாகி செடி நுனியில் வண்ணமிகு மொட்டுக்கள் நாணி மலர்ந்து தலை துவட்டும் …..!! மொட்டுக்கள் நனைந்திடக் கூடாதென இலைகள் கேடயக் குடைகளாகும் காற்றின் சலசலப்பில் இலைக் குடைக்குள் மறைந்தபடி கண்ணாமூச்சி விளையாடும் மழைத்துளிகளோடு…..!! மனம் கமழ் பூமணங்கள் காற்றில் […]
க்ளோத்திங் ஆப்ஷனல்

ட்ரிங் ட்ரிங் ட்ரிங்….. என்று அசுர தொனியில் அலாரம் அடித்துக் கொண்டிருந்தது…. எதிர்பாராத நேரத்தில், தலையில் பெரிதாக ஏதோ விழுந்தது போல துள்ளிக் குதித்து எழுந்தாள் ஷாலினி. எழுந்து இருட்டில் சுற்று முற்றும் பார்த்தாள். இருட்டு கண்களுக்குப் பழகும் வரையில் ஒன்றும் புரியவில்லை. படுக்கைக்குப் பக்கத்திலிருக்கும் நைட் ஸ்டாண்டில் உள்ள அலாரம் க்ளாக் ஆறு மணி பதினைந்து நிமிடம் என்று நீல நிற நியான் ஒளியில் கண்களைக் கூசிக் கொண்டு, கூச்சல் போட்டுக் கொண்டிருந்தது…. இப்பதான் படுத்த […]
அமெரிக்கத் தேர்தல் – பகுதி 9

அமெரிக்கத் தேர்தல் – பகுதி 9 கடந்த சில வாரங்களாக, ஏணிகளும், பாம்புகளும் கொண்ட பரமபத விளையாட்டைப் போன்று அமைந்திருந்தது அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர்களின் நிலை. இந்தக் கட்டுரைத் தொடரின் முந்தைய பகுதியில், ஜனநாயகக் கட்சியின் ஹிலரி கிளிண்டன் கணிசமான வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதாகவும், இந்நிலை எப்போது வேண்டுமானாலும் மாறக் கூடும் என்றும் முடித்திருந்தோம். செப்டம்பர் மாத மத்தியில் நிலைமை மாறி, டானல்ட் ட்ரம்ப் வெகுவாக முன்னேறி, இரண்டு புள்ளிகள் வித்தியாசத்திலேயே பின்தங்கியிருந்தார். பின்னர் நடந்தேறிய […]
மினசோட்டாவின் பாப் டிலனிற்கு Bob Dylan நோபல் இலக்கிய விருது

மினசோட்டாவின் பாப் டிலனிற்கு நோபல் இலக்கிய விருது மினசோட்டா மாநிலத்தின் மைந்தரான ஆங்கில இசைக் கவி திரு. பாப் டிலன் அவர்கட்கு, சுவீடிஷ் அக்காடமி, 2016ம் ஆண்டு அகில உலகப் புகழ் வாய்ந்த நோபல் இலக்கிய விருதினை அக்டோபர் மாதம் 13ம் திகதி 2016 வழங்கியுள்ளது. பாப் டிலனிற்கு வயது 75. நோபல் இலக்கிய விருதினை வாங்கிய இரண்டாவது இசைக் கவிஞர் இவரே. இதன் முன்னர் 1993ம் ஆண்டு இலக்கியப் பரிசினைப் பெற்றவர் திரு ரோனி மோரிசன். […]
ரெமோ

ரெமோ வளரும் இளம் கதாநாயகன் என்பதில் இருந்து முன்னணி இளம் கதாநாயகன் நிலைக்குச் சென்று விட்டார் சிவகார்த்திகேயன் எனலாம். காமெடி, நடனம் போன்றவற்றில் மட்டும் திறமை காட்டிக் கொண்டிருந்த சிகா, அவரின் ஒன்பதாவது படமான ரெமோவில் மேக்கப், நடிப்பு, டப்பிங் போன்றவற்றிலும் தனது திறமையைக் காட்டியிருக்கிறார். அவருக்கான ரசிகர் கூட்டம் கூடிக்கொண்டே செல்கிறது. கூடவே, கடுப்பில் பிற முன்னணி நடிகர்களது ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதும் சமூக ஊடகங்களைச் சுற்றி வரும் போது தெரிகிறது. தமிழர்களுக்கு ஒரு நடிகர் […]