\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

Archive for April, 2017

வாழையிலை விருந்து

வாழையிலை விருந்து

மினசோட்டா தமிழ் சங்கம் மூன்றாவது ஆண்டாக வாழையிலை விருந்து விழாவை, இந்தாண்டு ஏப்ரல் 8ஆம் தேதியன்று ஹாப்கின்ஸ் கம்யூனிட்டி செண்டரில் நடத்தியது. முந்தைய ஆண்டுகளைப் போல, இந்தாண்டும் தமிழர் பாரம்பரிய உணவு வகைகளை, வாழையிலையில் பரப்பி விருந்து படைத்தனர். முருங்கைக்காய் சாம்பார், மோர் குழம்பு, வேப்பம்பூ ரசம், வெண்டைக்காய் கூட்டு, திணை பாயாசம், அப்பளம் என சுவையான தமிழர் விருந்து, வந்திருந்த விருந்தினரைக் கவர்ந்தது. அன்றைய நிகழ்வின் புகைப்படங்கள், உங்கள் பார்வைக்கு இங்கு. சரவணகுமரன்  

Continue Reading »

இவ்வருடப் புதிய காய்கறி வகை 2017

இவ்வருடப் புதிய காய்கறி வகை 2017

மினசோட்டாவிற்கும் அயல் மாநிலங்களுக்கும் ஏப்ரல் மாதம் மழையும் வந்துவிட்டது இனி மே மாதத்தில் மிருதுவான புற்தரைகளும், பூக்களும் துளிர் விடும். பூச்செடிக் கடைகளுக்குப் போனால் (Garden centers) அப்பப்பா ஆயிரம் ஆயிரம் வகை தாவரங்கள், நமக்கு இருப்பதோ குறுகிய நிலமும் பூச்சாடிகளும் என்பர் இவ்விட வாழ் தமிழ் இயற்கையாளர் பலர். மினசோட்டா , ஒன்ராரியோ கனடா விவசாய திணைக்களம், மற்றும் பூங்கா அமைப்பாளர் குழுமியங்கள் வருடா வருடம்  புதிய, அனுபவமுள்ள பூச்செடி, காய்கறி வளர்ப்பாளர்களுக்கு இளவேனில் ஆலோசனை […]

Continue Reading »

ஆட்டு மூளை வறுவல்

Filed in அன்றாடம், சமையல் by on April 30, 2017 0 Comments
ஆட்டு மூளை வறுவல்

ஊர் கோவில் திருவிழாவிற்கு, படையலுக்கு ஆடு அடித்து உணவு சமைக்கும் போது, ஆட்டின் எந்தப் பாகத்தையும் விட்டு வைக்க மாட்டார்கள். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு உணவு பதார்த்தம் செய்துவிடுவார்கள். மூளையை உப்பு போட்டு வறுத்துக் குழந்தைகளுக்கு, சிறுவர்களுக்குக் கொடுப்பார்கள். சிலர் முட்டை, வெங்காயம் போட்டு பூர்ஜி மாதிரியும் செய்வார்கள். உலகமெங்கும் உள்ள நாடுகளில், விதவிதமான வகைகளில், மூளை சமைக்கப்படுகிறது. இங்குக் கொடுக்கப்பட்டுள்ளது, நம்மூர் வறுவல் வகை. குழந்தைகளுக்குத் தேவையான DHA, மூளையில் மிகுந்து இருப்பதால், அவ்வப்போது சமைத்துக் கொடுக்கலாம். […]

Continue Reading »

எஸ்பிபி 50 – சிகாகோ இசைக் கச்சேரி

எஸ்பிபி 50 – சிகாகோ இசைக் கச்சேரி

“பாடும் நிலா” என்று இசை ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ஐம்பது ஆண்டுத் திரையுலகப் பயணத்தைக் கவுரவிக்கும் விதமாக, எஸ்பிபி 50 என்ற பெயரில் உலகமெங்கும் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார் அவருடைய புதல்வரான எஸ்.பி.பி.சரண். இந்தத் தொடர் இசை கச்சேரிகளின் ஒரு நிகழ்ச்சி, சிகாகோ நகர் ஓடியம் அரங்கில் ஏப்ரல் 15 ஆம் தேதியன்று நடந்தது. இந்த இசை நிகழ்ச்சிக்குத் திரையிசை ரசிகர்கள் குடும்பத்துடன் அக்கம் பக்கத்து மாநிலங்களில் இருந்தும் வந்திருந்தனர். தமிழ், […]

Continue Reading »

தலைக்கு மேல வேல….

Filed in இலக்கியம், கதை by on April 30, 2017 0 Comments
தலைக்கு மேல வேல….

ஞாயித்துக் கெழம காலங்காத்தால……. மனைவியின் “எழுந்திருங்கோ….. எட்டு மணி ஆயிடுத்து” குரல் எங்கோ கிணற்றுக்குள்ளிருந்து கேட்பது போல் ஒலித்தது எனக்கு… அதனை இக்னோர் செய்துவிட்டு புரண்டு படுத்தேன். பாத்ரூமிலிருந்து எட்டிப்பார்த்த சகதர்மிணி, “சொல்லிண்டே இருக்கேன்… அப்டி என்ன இன்னும் தூக்கம்? என்னமோ வெட்டி முறிச்சாப்போல…. நேக்கு மாத்திரம் சண்டே சாட்டர்டே எதுவுமில்ல….” என்று விரட்டிக் கொண்டிருந்தாள். எனக்கு ஏதோ வேலை வைத்திருக்கிறாள் என்பதைவிட, தான் எழுந்துவிட்டோம் இன்னும் இவன் மட்டும் தூங்குகிறான் என்ற பொறாமைதான் அதிகமாய்த் தொனித்தது. […]

Continue Reading »

Harini Drawings

Harini Drawings

 

Continue Reading »

உரிமைகள் மசோதா – 3

உரிமைகள் மசோதா – 3

(உரிமைகள் மசோதா-2) அமெரிக்க உரிமைகள் மசோதாவின் முதல் திருத்தத்தில் பேச்சுச் சுதந்திரத்தின் நீட்சியாக மதச் சுதந்திரமும் சேர்ந்துள்ளது. மதச் சுதந்திரம் – வரைவிலக்கணம் அமெரிக்கச் சட்ட வரைவுகள் அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு, தங்களது சொந்த மத நம்பிக்கைகளை, அல்லது மத நம்பிக்கையின்மையைப் பின்பற்றும் உரிமையுள்ளது. அடிப்படையில் இன்றைய ஐக்கிய அமெரிக்க நாடுகள், பல நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து வந்தவர்களால் உருவாக்கப்பட்டது. இவர்கள் பல்வேறு மதப் பின்னணியிலிருந்து வந்தவர்கள். அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் தேவாலயங்கள் இயங்க வேண்டும் (Separation of Church […]

Continue Reading »

MN தமிழ் பள்ளியின் ஆண்டு விழா  2017

MN தமிழ் பள்ளியின் ஆண்டு விழா  2017

ஏப்ரல் 8ம் தேதி பள்ளியின் 9ம் ஆண்டு விழா ஹாப்கின்ஸ் கம்யூனிட்டி அரங்கில் நடைபெற்றது. மதியம் 3 மணிக்கு பள்ளி ஆண்டு விழா ஆரம்பித்து இரவு 7 மணி வரை நடைபெற்றது. பள்ளி ஆண்டு விழாவை, பள்ளிக்குழுவினர்,  உட்பரி ஆசிரியர்கள், ஷாப்கின்ஸ் ஆசிரியர்கள் மற்றும் 8ம் வகுப்பு மாணவ மாணவியர்கள் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தார்கள். 8ம் வகுப்பு மாணவ மாணவியர்கள் விழாவைத்  தொகுத்து வழங்கினார்கள். சிறப்பு விருந்தினராக பேராசிரியர் திரு. குமார் மல்லிகார்ஜுனன் பங்கேற்று வாழையிலை  விருந்து […]

Continue Reading »

உழவர் சந்தைகள்

உழவர் சந்தைகள்

உலகில் இருக்கும் பனிரெண்டு மண் வகைகளில், ஒன்பது வகை மண்ணைக் கொண்ட மினசோட்டா ஒரு விவசாயப் பூமியாக இருப்பதால், மினசோட்டாவாசிகளுக்கு ஒரு அனுகூலம் உள்ளது. ஃப்ரெஷ்ஷாக உணவு உண்ணலாம். அதுவும், உணவுக் குறித்த விழிப்புணர்வு பெருகியுள்ள இக்காலத்தில், இது போன்ற வாய்ப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. புத்தம் புதியதாக விவசாய நிலத்தில் இருந்து வரும் விளைப் பொருட்கள், மக்களை உடனடியாகச் சென்றடைய உதவுபவை, உழவர் சந்தைகள். அந்த வகையில், மினசோட்டா மாநிலமெங்கும் நடக்கும் உழவர் சந்தைகள் (Farmer’s […]

Continue Reading »

Kids – Color it

Kids – Color it

Continue Reading »

banner ad
Bottom Sml Ad