Archive for April, 2017
புத்தாண்டு பூத்தது

ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி, 1990 ஆம் வருடம்….. தமிழ் வருடப் பிறப்பு என்பதினால் பூஜைக்குத் தயாராகிக் கொண்டிருந்தது வீடு. .…… வழக்கம் போல அன்று காலையும் வீட்டின் முன் ஹாலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த கணேஷின் முகத்தில் காலைச் சூரியன் தன் கிரணங்களை வீசி, விடிந்துவிட்டது என்பதை நளினமாய் உணர்த்தினான். அடுத்த மாதம் வர இருக்கும் பொறியியற் கல்வியின் நான்காம் செமஸ்டர் தேர்வுகளுக்குத் தயார் செய்வதற்காக, இரவு நெடுநேரம் விழித்திருந்ததால் காலையில் எழுவதற்குத் தாமதமானது. […]
தமிழ்த் தேனீ 2017

மார்ச் 26, 2017 ஆம் தேதியன்று மினசோட்டா தமிழ்ச்சங்கப் பள்ளியின் சார்பில் “தமிழ்த் தேனீ ” போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி, பொதுப் பள்ளிகளில் அவரவர் படிக்கும் நிலைகளை வைத்து பிரிக்கப்பட்ட மூன்று பிரிவுகளில் பல சிறுவர், சிறுமியர் கலந்துகொண்டனர். போட்டியில் பங்கேற்றவர்களுக்கு 200 சொற்கள் கொண்ட பட்டியல் முன்னதாக அனுப்பப்பட்டிருந்தது. அதிலிருந்து எடுக்கப்பட்ட சொல்லை நடுவர்கள் முன்னிலையில் எழுதி அடுத்தடுத்த சுற்றுகளுக்குப் போட்டியாளர்கள் முன்னேறினர். கடுமையான போட்டி நிலவிய பல சுற்றுகளுக்குப் பிறகு, ஒவ்வொரு பிரிவிலும் […]