\n"; } ?>
Top Ad
banner ad

Archive for October, 2017

அசௌகரிய வீடு

Filed in கதை, வார வெளியீடு by on October 22, 2017 0 Comments
அசௌகரிய வீடு

இலையுதிர் காலத்தில் ஏரிக்கரை மரங்களின் நிறம் மாறுகின்றது. இலைகள் மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பாக மாறுகின்றன. சில்லென்ற குளிரில் சில புற்களும் உலருகின்றன. ஏரிக்கு அருகே பல குட்டைகளும், வாய்க்கால்களும் உள்ளன. இவற்றில் மிதக்கும் அல்லிப்பூக்களும், அயல் நீர்த் தாவரங்களும் பூத்து ஓய்கின்றன. அல்லிக் கொடிகள் குட்டை மேல் நீர் கடந்து தெரிகின்றன. வட்ட இலைகள் வாடுகின்றன. இது இலையுதிர் கால இறுதியில் குட்டைகளின் தன்மை. நீரில் வளரும் தாவரங்கள் கோடை வெய்யிலில் பெருகும். பின்னர் அடுத்த வருடத்திற்கு உதவும் உக்கல் மண்ணாக […]

Continue Reading »

குற்ற உணர்ச்சி

Filed in கதை, வார வெளியீடு by on October 15, 2017 0 Comments
குற்ற உணர்ச்சி

“சாமிநாதன் நான் டெய்லி சொல்லிட்டு இருக்க முடியாது, உங்களாலே நேரத்துக்கு வர முடிஞ்சா வேலைக்கு வாங்க, இல்லையின்னா வேலைக்கு வர வேண்டாம்” அப்பா அவரிடம் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்ட கண்ணனுக்கு கோபம் ஒரு பக்கம், சிரிப்பு ஒரு பக்கம் வந்தது. இந்தச் சாமிநாதனை இதோடு எத்தனை தரம்தான் இப்படி மிரட்டிக் கொண்டே இருப்பார். அவரும் பதிலுக்கு, ”சரிங்க முதலாளி, இனிமே நேரத்துல வந்துடறேன்” .இதே வார்த்தைகள்தான் இவரிடம் வரும். இவனும் பல முறை அப்பாவிடம் சொல்லி விட்டான், ”அப்பா அவருக்கு ஓய்வு கொடுத்துடலாம், […]

Continue Reading »

சுகமான தீபாவளி

Filed in கதை, வார வெளியீடு by on October 15, 2017 0 Comments
சுகமான தீபாவளி

”ஏன்னா… நான் சொன்னேனே.. ஜிலேபி ரெட் வாங்கிண்டு வந்தேளா?” மங்களம் மாமியின் கேள்வி தொடங்கியது. “நீ சொன்ன எல்லாம் வாங்கிண்டு வந்துட்டேண்டி.. அது ஒண்ணு தவிர… கடைக்காரா யாருக்கும் ரெட்டுனா என்னன்னே தெரியலடி… அது தமிழ் வார்த்தைதானா?” ஒரு சாதாரணத் துணிக்கு பதினைந்து ரூபாய் தர வேண்டுமா என்ற எண்ணத்தில் விட்டுவிட்டு வந்து, அதைச் சமாளிப்பதற்காக இழுத்தார் சுந்தரம் மாமா. “ஆமா.. உங்களுக்கு ஒண்ணு வாங்கிண்டு வர சாமர்த்தியமில்லன்னா, நேக்குத் தெரியாதுன்னு சொல்லிடுங்கோ… ஜிலேபி ரெட்டு தெரியாதவா […]

Continue Reading »

அஹிம்சை தினம் 2017

அஹிம்சை தினம் 2017

மினசோட்டா மாநிலத்தில், இந்திய அசோசியேஷன் ஆஃப் மினசோட்டா மஹாத்மா காந்தியின் பிறந்த தினத்தை ஒட்டி, அக்டோபர் மாதம் 12ஆம் திகதி. அஹிம்சை தினம் (NON-VIOLENCE DAY) கொண்டாடினர். சென்ற ஆண்டைத் தொடர்ந்து, இரண்டாம் முறையாக் கொண்டாடப்பட்ட இந்த தினம், மினசோட்டா மாநிலத்தின் தலை நகரக் கட்டிட அரங்கில் நடைபெற்றது. புருஷ் கோரி இந்திய மினசோட்டா அசோசியேஷன் சார்பில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழக்கினார்.   மினசோட்டா கவர்னர் மார்க் டேட்டன் கையெழுத்திட்ட, மாநிலச் சான்றிதழ் வழங்கப்பட்டு இந்திய அசோசியேஷன் […]

Continue Reading »

ஆப்பிள் டோநட் பணியாரம்

ஆப்பிள் டோநட் பணியாரம்

வட அமெரிக்காவில் இலையுதிர் காலம் வந்து விட்டது. இதனால்  இவ்விடம் இலை தழைகள் நிறம் மாறுவது ஒரு புறம்; சுவையான பழ அறுவடைகள் மறுபுறம். தமிழர் பிறந்த நிலங்களில் கறுவாப்பட்டை, ஏலக்காய் வாசம் இயல்பாகவே உள்ளது. ஆயினும், அமெரிக்காவுக்கு வருகை தந்த  ஐரோப்பியக் குடிகள் கொண்டுவந்து அறிமுகப்படுத்திய  ஆப்பிள் பழச் சோலைகளின் பாரம்பரியமோ தனி வகை. மென்மையான ஆப்பிள் பழ நறுமணம்  கறுவாப்பட்டையுடன் கலந்து மூக்கை மொய்த்து வயிற்றையும் நாக்கையும் ஊற வைக்கும் வாசம், வட அமெரிக்காவில் […]

Continue Reading »

நக்கல் நாரதரின் நையாண்டி – 8

நக்கல் நாரதரின் நையாண்டி – 8

Continue Reading »

சொற்புதிர்

சொற்புதிர்

Continue Reading »

ஹாலோவீன் கார்த்திகை கவர்ச்சி விளக்குகள்

ஹாலோவீன் கார்த்திகை கவர்ச்சி விளக்குகள்

ஊருசனம் ஓய்ந்திருக்கு; ஊதல் காற்றும் அடிச்சிருக்கு. வெட்ப தட்ப மாற்றம் வழமை போல் வருகிறது வட அமெரிக்காவிற்கு. பகலவனாகிய சூரியன் பருவகாலம் தொட்டுப் பதுங்குகையிலும் பாங்காக வருகிறாள் இயற்கையன்னை. இலையுதிர்காலத்தை , அவள் தன் இயல் வண்ணத் தூரிகைகளுடன் வரைகிறாள். பனிப்பூக்கள் எழுத்தாளர் சரவணக்குமரன் அவரது வர்ணஜாலக் கட்டுரையில் வர்ணித்தது போல் மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு,  செவ்வூதா நிறங்கள் வட அமெரிக்கக் காடுகள், மேடுகள், ஏரிக்கரைகள், ஆற்றோரங்கள் என அனைத்தையும் எழிலோடு மின்ன வைக்கின்றன.   இயற்கையன்னை […]

Continue Reading »

வீரத்துறவி சுப்பிரமணிய சிவா

வீரத்துறவி சுப்பிரமணிய சிவா

Courtesy: Wikipedia.org அக்டோபர் மாதம் இந்திய சுதந்திரத்திற்கும், நாட்டின் மேம்பாட்டிற்கும் ஒரு பெரிய புண்ணிய காலம் என்றே சொல்ல வேண்டும். இந்திய நாட்டிற்காகச் சேவை புரிந்த ஒப்புயர்வற்ற பலர் உதித்த சிறந்த மாதம் இதுவென்றே தோன்றுகிறது. அண்ணல் காந்தியடிகள் அக்டோபர் இரண்டாம் நாள் உதித்தது உலகம் அறிந்த ஒன்று. பெருந்தலைவர் என்றும், கர்ம வீரர் என்றும் போற்றப்பட்ட காமாராஜரின் நினைவு நாளும் இந்த இரண்டாம் திகதியே. இவர்களிருவர் தவிர, சுதந்திர இந்தியாவின் இரண்டாவது பிரதமராகப் பதவி வகித்து, […]

Continue Reading »

பண்டிகைகள் – அங்கேயும் இங்கேயும்

பண்டிகைகள் – அங்கேயும் இங்கேயும்

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கலாச்சாரம் உள்ளது. அதற்கேற்ப வழிபாடுகள், தெய்வங்கள், பண்டிகைகள் போன்றவை வேறுபடும். ஆனால், யோசித்துப் பார்த்தால் இந்தப் பண்டிகைகளிடையே சில ஒற்றுமைகளைக் கவனிக்கலாம். ஹாலோவீன் (Halloween) – ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் கொண்டாடப்பட்டு வந்த இந்தப் பண்டிகை, தற்சமயம் உலகமெங்கும் பரவி வருகிறது. உலகமயமாக்கத்தால் இந்திய நகரங்களுக்கும் இது அறிமுகமாகி உள்ளது. இது குளிர்காலத்தை வரவேற்பதற்கான, இறந்தவர்களை நினைவுகூர்வதற்கான, குழந்தைகளிடம் பயத்தைப் போக்குவதற்கான ஒரு பண்டிகை. அக்காலத்தில் மக்கள் பழங்களை இத்தினத்தில் பரிமாறிக் கொள்வர். […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad