Archive for March, 2021
இதயத்தில் முள் தோட்டம் (தொடர் கதை – பகுதி 3)

(பாகம் 2) மூன்று மாதங்கள் மிக வேகமாக ஓடிவிட்டது. டி.எஸ்.பி ராஜீவுக்கு எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. எந்தப் பக்கம் சென்றாலும் ஒரு முட்டுச் சுவர்! அவருக்கு மேலிடத்திலிருந்தும், பத்திரிக்கை மற்றும் ஊடகங்களிலிருந்தும் நிறைய பிரஷர் வர ஆரம்பித்தது. அதனால் சந்தேக நபர்களில் சிலரை மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருந்தது. எந்த ஆதாயமும் இல்லை, அவர்கள் அவரை மேலும் குழப்பும் விதமாகப் புதிய “லீட்ஸ்” கொடுத்தனர். அவரது நேரத்தை மேலும் அது வீணடித்தது. அன்று புதன்கிழமை. […]
பெருந்தொற்றுக்கால இந்தியப் பயணம் – 2

(பாகம் 1) அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்த பிறகு, சாதாரணமாக நிகழும் பல விஷயங்கள் முதல் பார்வையில் வித்தியாசமாகத் தெரிந்தன. அனைத்துக் கடைகளும் திறந்து இருக்க, கடைக்காரர்களும் சரி, வாடிக்கையாளர்களும் சரி, மாஸ்க் இல்லாமல், பயம் இல்லாமல் சென்று வந்து கொண்டிருந்தனர். கொரோனா லாக் டவுன் தொடங்கிய காலத்தில், மாஸ்க் போடாத மக்களைப் போலீஸ்காரர்கள் விரட்டி பிடித்து அபராதம் வசூலித்ததை டிவியில் பார்த்திருக்கிறேன். இப்போது போலீஸ்காரர்களே மாஸ்க் போடாமல் கேஷுவலாகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது, கொரோனாவிற்கு […]
சந்தைப் பெறுமதி: உங்கள் பெறுமதி என்ன?

அது சரி நீங்கள் சம்பள வேலை செய்கிறீர்களா, அல்லது ஓய்வு பெற்று விட்டீர்களா? உங்கள் பெறுமதி என்ன? மேலும் நீங்கள் அமெரிக்காவில் வாழுகிறீர்களா? அப்போ நீங்கள் பொருளாதாரச் சந்தையில் பரிமாறப்படும் பண்டமா? இதென்ன கேள்வி அப்படியெல்லாம் கிடையாது என்று சொன்னீர்களானால் வாருங்கள் உங்கள் சனநாயக சுதந்திரம் பற்றி அலசுவோம். உலகின் பணக்கார நாடு என்று கருதப்படும் அமெரிக்க நாட்டில், சாதாரண மக்கள் வாழ்வு பொதுவாக நலமாக இல்லை என்பது அனைவரும் அறிந்த விடயமே. இது 245 ஆண்டுகள் […]