\n"; } ?>
Top Ad
banner ad

Archive for January, 2025

வர்த்தகப் போர் – இறக்குமதி வரி

வர்த்தகப் போர் – இறக்குமதி வரி

“என்னைப் பொறுத்தவரை, இறக்குமதி தீர்வை (Tariff), அகராதியில் உள்ள மிக அழகானதொரு சொல்லாகும். எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை”.  தனது தேர்தல் பிரச்சாரங்களில் ‘இறக்குமதி தீர்வையை’ முக்கிய வாக்குறுதியாக முன்வைத்து வென்று, இரண்டாம் முறை அதிபராகப் பதவியேற்கவுள்ள திரு. டிரம்ப்பின் வார்த்தைகள் இவை. வெற்றிக்குப் பிறகு, அவர் தனது இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார். இதன் முதற்கட்டமாக, சமீபத்தில் ஒரு செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தபோது, மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களுக்கும் ஒட்டுமொத்தமாக  […]

Continue Reading »

‘பண்ணு’ தமிழ் தவிர்ப்போம்

‘பண்ணு’ தமிழ் தவிர்ப்போம்

“இப்ப பாத்தீங்கன்னா பெண்கள் சம்பந்தப்பட்ட ஒரு இஷ்யூ நடந்திட்டிருக்கு.. அதையொட்டி நேத்து அந்த பார்ட்டிலேர்ந்து ஒரு கண்டன கூட்டம் ஆர்கனைஸ் பண்ணியிருந்தாங்க.. அதுல பெர்பார்ம் பண்றதுக்காக சில ஆர்டிஸ்டையும் இன்வைட் பண்ணியிருக்காங்க.. அவங்களும் பல மணிநேரம் டிராவல் பண்ணி நிகழ்ச்சிக்கு வந்திருக்காங்க.. கூட்டம் கொஞ்சம் டல் அடிக்கிறதைப் பாத்துட்டு அவங்க கேஷுவலா பேசலாம், மக்களை கவர் பண்ணி அட்ராக்ட் பண்ணலாம்னு நெனச்சு பேசத் தொடங்கனப்போ ஒரு வார்த்தையை விட்டிறாங்க.. அதைக் கேட்டதும் அங்கிருந்தவங்க ஷாக் ஆகி மைக்கை […]

Continue Reading »

நெருக்கடியில் வீட்டுக் காப்பீடு

நெருக்கடியில் வீட்டுக் காப்பீடு

‘யானை அசைந்து தின்னும், வீடு அசையாமல் தின்னும்’ என்ற பழமொழியைப் பலர் அறிந்திருக்கக் கூடும். வெவ்வேறு பொருள் தரக்கூடிய இப்பழமொழி, வீடு கட்டுவது பெரும்பாடென்றால், அதனைப் பழுதில்லாமல் பராமரிப்பது அதனினும் சிரமம் எனுமொரு கருத்தையும் தெரிவிக்கிறது. தலைக்குமேல் ஒரு நிரந்தரக் கூரை என்பது சாத்தியப்படும்பொழுது, கனவு வசப்பட்ட சந்தோஷம் வழிந்தாலும்,  அரும்பாடுபட்டு கட்டிய அல்லது வாங்கிய வீடு பல ஆண்டுகள் பாதுகாப்பாக நிலைத்திருக்க வேண்டுமென உள்ளுக்குள் அச்சமும் தொற்றிக் கொள்ளும். ஒரு காலக்கட்டம் வரையில், வீட்டுக் காப்பீட்டுத் […]

Continue Reading »

இணைப்பின் வசதி: ஒரு நட்புக் கதை

இணைப்பின் வசதி: ஒரு நட்புக் கதை

அது ஒரு அழகான நட்பாகத் தொடங்கியது. நானும் என் மனைவியும்,பல வருடங்களாக ஒரே கட்டடத்தில் வசித்து வந்தோம். அதே கட்டடத்தில் ஆதவன், யாழினி என்ற கணவன் மனைவி வசித்து வந்தனர். அவ்வப்போது சின்ன சின்ன புன்சிரிப்புகள், விசாரிப்புகள் என்ற அளவில் தான் எங்கள் நட்பு இருந்தது. பின்னர் தொற்றுநோய் தாக்கியது. இரு குடும்பங்களுக்கும் அதிக நேரம் கிடைத்து, நெருக்கம் ஏற்பட்டது. உணவு, பானங்கள், புத்தகங்கள் மற்றும் அன்றாட நிகழ்வுகளைப் பரிமாறிக் கொண்டோம். நாங்கள் உண்மையான நண்பர்கள், கடவுளுக்கு […]

Continue Reading »

கலிஃபோர்னியா பற்றி எரிகிறது

கலிஃபோர்னியா பற்றி எரிகிறது

  இயற்கை சொர்க்கத்தை எரிக்க விரும்பியது கலிஃபோர்னியா பற்றி எரிகிறது பல தசாப்தங்களாக நிலைத்து நின்ற வீடுகளையும் குடும்பக் கதைகளையும்  நேசத்துக்குரிய நினைவுகளையும்  பாதுகாத்த பொக்கிஷங்கள்  ஒரு தீ மூச்சில் அழிக்கப்பட்டன இன்னும் தீ பரவுகிறது தென் கலிஃபோர்னியா ஒரு தீப்பொறியாக மாறிவிட்டது ஒரு கவிஞர் தனது உயிருக்காகத் தப்பி ஓட  தனது காரை கைவிடுகிறார் தீக்காயம் பட்ட தனது குழந்தையை  ஆம்புலன்ஸ் எடுத்துச் செல்ல   பின்னே ஓடுகிறாள் ஒரு தாய்  ஒரு சிற்பியின் கண்கள்  கனவுகளின் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad