Archive for April, 2025
அமெரிக்க விருந்தாளி – நூல் விமர்சனம்

உலக நாடுகளின் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், புவியியல், இனம், உரிமை என்ற எதோவொரு காரணத்துக்காகப் போர்கள் தொடுக்கப்பட்டதையும், அதனால் ஏற்பட்ட அழிவுகளையும் அறிய முடியும். அவற்றில், மனித இனம் நாகரிகமடைந்த பின்பு நிகழ்ந்த இரண்டாம் உலகப் போர் மிகக் கொடூரமான பேரழிவுகளை உண்டாக்கியது. ஏறத்தாழ ஏழு மில்லியன் மக்களின் உயிரை மாய்த்த இந்தப் போரில் பல நாடுகள் சுயத்தை இழந்தன; பல தலைமுறை கடந்தும் அதன் பாதிப்புகளிலிருந்து விடுபடாத குடும்பங்கள் ஏராளம். கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில், […]
செர்ரி பூக்கள்

அன்பான வாசகர்களே, செர்ரி பூக்களை நான் இப்படித்தான் விவரிப்பேன். அழகான நீல வானத்தின் கீழ், மென்மையான செர்ரி மலர்கள் தங்கள் வெளிர் இளஞ்சிவப்பு இதழ்களை விரித்து, சாதாரண தெருக்களையும் பூங்காக்களையும் அழகின் கனவு நடைபாதைகளாக மாற்றுகின்றன. இது போன்று மினசோட்டா மாநிலத்தில் குங்கும பூக்கள் சித்திரை அல்லது ஏப்ரலில் மாதத்தில் மலரும். செர்ரி பூக்கள் இயல்பாக ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்கு அற்புதமாக பூத்து, பின்னர் மென்மையான இளஞ்சிவப்பு , நாவல், வெள்ளை, மஞ்சள் நிறங்களில் […]
தரங்கினி நடனப் பள்ளியின் சமூக பணி

கற்கும் காலத்திலிருந்தே சிறந்த அர்ப்பணிப்புள்ள மாணவியாகவும், ஆசிரியப் பணியை உணர்ச்சி பூர்வமாகவும், ஆக்கப் பூர்வமாகவும் செய்து வரும் அமிர்தா சிறந்த நடன கலைஞர் என்பதில் ஐயமில்லை. தாம் பெற்ற நடனக் கலையை, வருங்கால இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில், அவரின் குருவாகிய உயர்திரு. கிட்டு ஐயாவின் ஆசியுடன் 2005 ஆம் ஆண்டில் பெங்களூரில் தொடங்கப்பட்டது தான் “ தரங்கினி நடனப் பள்ளி “(“Taraangini school of dance”) கடந்த 2016 ஆம் ஆண்டு மினசோட்டா மாகாணத்தில் […]
ஹோலி 2025

வட அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் உள்ள மிலன் மந்திரில் மார்ச் மாதம் 16ஆம் தேதி அன்று அன்று ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத பௌர்ணமி தினத்தில் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும், மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதைக் குறிக்கோளாக் கொண்டும் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹோலிப் பண்டிகையன்று ஒருவரை ஒருவர் சந்தித்து, வாழ்த்துக்களைத் தெரிவித்து, கலர்ப் பொடிகளைத் தூவியும், வண்ண நீரைப் பீய்ச்சி அடித்தும், திலகமிட்டும் […]
தவக்காலம் மனிதம் மலரும் ஓர் வசந்த காலம்!

அனைவருக்கும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய பெயரால் வணக்கமும் வாழ்த்துக்களும்…! நம் கத்தோலிக்க தாய்த் திரு அவை, இந்த 2025ஆம் ஆண்டினை ‘புனித ஆண்டு’ ஆண்டாக அறிவித்து, “நம்பிக்கையின் திருப்பயணிகள்” என்ற நோக்குடன் கடந்து செல்ல, நம்மை இறைவழியில் ஒருங்கிணைத்து அழைத்துச் செல்கிறது. கத்தோலிக்க திரு அவை, மன்னிப்பு மற்றும் நல்லிணக்கத்திற்கான சிறப்பு ஆண்டுகளை புனித ஆண்டாக (ஜூபிலி) கொண்டாடுகிறது. இத்தகைய புனித ஆண்டில், திருப்பயணிகளாகிய நாம் பயணிக்க ஆரம்பித்த நிலையில், இறைமகன் இயேசுவின் மீது […]