\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

குளிர்காலப் பொழுதுபோக்கு விளையாட்டு

 

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலம் குளிர் மிகுந்திருக்கும் பிரதேசமாகும். பனிப்பொழிவும் இங்கு அதிகம். குளிர்காலங்களில் தொடர்ந்து சில நிமிடங்கள் வெளியில் நின்றாலே உறைந்துபோய்விடக் கூடிய அளவுக்கு வெப்பநிலை, பூஜ்யத்துக்கு 50 டிகிரி (-50 F) குறைவாகயிருக்கும் தினங்களும் இங்குண்டு.

குளிர்காலங்களில், சிறுவர்களுக்கு வெளியே சென்று விளையாட முடியாத நிலையில் பொழுதைக் கழிப்பது மிகப் பெரிய சவால். ஆனால் இங்குள்ள நிறுவனங்கள் சில, சிறுவர்களின் இந்தத் தவிப்பைப் போக்கும் வகையில் புதிய வகையான, பனிக்காலங்களுக்கேற்றதான விளையாட்டுகளை உருவாக்கிய வண்ணம் உள்ளனர்.

இந்த மாதம், ஸ்ட்ரைடர் நிறுவனத்தினர் பனிச்சரிவில் இரு சக்கர வாகனம் ஓட்டும் வகையிலான போட்டியை அறிமுகப்படுத்தியிருந்தனர். 2 வயதுள்ள குழந்தைகள், 3,4 வயதுடைய சிறுவர்கள், 5 வயதுடைய சிறுவர்கள் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்த போட்டியில், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்கெடுத்துச் சிறப்பித்தனர்.

இப்போட்டிக்கான விதிமுறைகளை பக்ஹில் எனும் தளத்தில் காணலாம்.

இப்போட்டி நடைபெற்ற சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில  உங்களுக்காக –

  • ராஜேஷ் கோவிந்தராஜன்

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad