admin
admin's Latest Posts
உரிமைகள் மசோதா – 3

(உரிமைகள் மசோதா-2) அமெரிக்க உரிமைகள் மசோதாவின் முதல் திருத்தத்தில் பேச்சுச் சுதந்திரத்தின் நீட்சியாக மதச் சுதந்திரமும் சேர்ந்துள்ளது. மதச் சுதந்திரம் – வரைவிலக்கணம் அமெரிக்கச் சட்ட வரைவுகள் அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு, தங்களது சொந்த மத நம்பிக்கைகளை, அல்லது மத நம்பிக்கையின்மையைப் பின்பற்றும் உரிமையுள்ளது. அடிப்படையில் இன்றைய ஐக்கிய அமெரிக்க நாடுகள், பல நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து வந்தவர்களால் உருவாக்கப்பட்டது. இவர்கள் பல்வேறு மதப் பின்னணியிலிருந்து வந்தவர்கள். அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் தேவாலயங்கள் இயங்க வேண்டும் (Separation of Church […]
MN தமிழ் பள்ளியின் ஆண்டு விழா 2017

ஏப்ரல் 8ம் தேதி பள்ளியின் 9ம் ஆண்டு விழா ஹாப்கின்ஸ் கம்யூனிட்டி அரங்கில் நடைபெற்றது. மதியம் 3 மணிக்கு பள்ளி ஆண்டு விழா ஆரம்பித்து இரவு 7 மணி வரை நடைபெற்றது. பள்ளி ஆண்டு விழாவை, பள்ளிக்குழுவினர், உட்பரி ஆசிரியர்கள், ஷாப்கின்ஸ் ஆசிரியர்கள் மற்றும் 8ம் வகுப்பு மாணவ மாணவியர்கள் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தார்கள். 8ம் வகுப்பு மாணவ மாணவியர்கள் விழாவைத் தொகுத்து வழங்கினார்கள். சிறப்பு விருந்தினராக பேராசிரியர் திரு. குமார் மல்லிகார்ஜுனன் பங்கேற்று வாழையிலை விருந்து […]
உழவர் சந்தைகள்

உலகில் இருக்கும் பனிரெண்டு மண் வகைகளில், ஒன்பது வகை மண்ணைக் கொண்ட மினசோட்டா ஒரு விவசாயப் பூமியாக இருப்பதால், மினசோட்டாவாசிகளுக்கு ஒரு அனுகூலம் உள்ளது. ஃப்ரெஷ்ஷாக உணவு உண்ணலாம். அதுவும், உணவுக் குறித்த விழிப்புணர்வு பெருகியுள்ள இக்காலத்தில், இது போன்ற வாய்ப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. புத்தம் புதியதாக விவசாய நிலத்தில் இருந்து வரும் விளைப் பொருட்கள், மக்களை உடனடியாகச் சென்றடைய உதவுபவை, உழவர் சந்தைகள். அந்த வகையில், மினசோட்டா மாநிலமெங்கும் நடக்கும் உழவர் சந்தைகள் (Farmer’s […]
அன்பின் அகிலம்

அன்றலர்ந்த தாமரையாய் அந்தமுகம் விலகவில்லை…..
அன்பிற்கு நிரூபணமாய் அன்னையன்றி வேறொன்றில்லை !!
அளவில்லாப் பெருவலியும் அவளுக்குப் பொருட்டில்லை
அவதிகளைத் தாங்கியன்றோ அருமையுடன் ஈன்றாள்பிள்ளை !!
அவள்பட்ட துயரமெல்லாம் அன்றோடு நிற்கவில்லை
அக்கறையாய் வளர்த்தெடுக்க அவள்துயர் எல்லையில்லை
அரும்பாகத் தானுதித்து அரசாளும் யோகமில்லை
அதனாலே கிள்ளையதை அவளென்றும் விலக்கவில்லை !
நாட்டிய மஞ்சரி நடனப் போட்டி 2017

ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி ஸ்ரீ நாட்டியமஞ்சரிக் குழுவினரின் நடனப் போட்டி மினசோட்டா மாநிலத்தில் ப்ளூமிங்க்டன் நகரிலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வு தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட ஒன்று. கடந்த ஆண்டு இப்போட்டியில் பல குழுக்கள் இடம் பெற்றிருந்தனர். எனவே இந்த ஆண்டு போட்டியை 11 மணிக்குத் துவங்கி இரவு 7 மணி வரை நடத்தி, போட்டியில் பங்கேற்றவர்களுக்குப் பரிசளித்து சிறப்பித்தனர். இந்த ஆண்டும் பரதநாட்டியம், பாலிவுட் மற்றும் நாட்டுப்புற நடனங்கள் […]
தொழிலாளர் தினம் – கவிதை

இலக்குகளை நோக்கிய பயணத்தில்
அடி சறுக்கி மூச்சு முட்டி வாய் மண்தொட்டு
உதடு சிதறுண்டு செங்குருதி சிந்திடினும்
இலக்கே கொள்கையென்று நேர்வழியில் வீறுகொண்டு
தொழில் முடித்து காத்திருப்போம் தொழிலாளர் நாங்கள்
மழை – வெயில் – மூடு பனி தாண்டி வரிசைகள் நீண்டாலும்
காத்திருத்தல் ஒன்றே நேரிய வழியென்று காத்திருப்போம் கூலிக்காய்
‘செய்யாதே’ என்றால் செய்யாமல் இருப்பதற்கும்
‘செய்’ என்றால் செய்வதற்கும் பழக்கப்படுத்தப்பட்டு
பலமாய் சபிக்கப்பட்ட பூமிப் பந்தில் நாதியற்று நாட்கள் கழிப்போம்
துரதிர்ஷ்டவசமாக எம் வாழ்வை உம்மிடம் ஒப்படைத்து
உமக்கான பயணத்தில் எம்மை நாம் தொலைத்து
ராஜமெளலி – இந்தியாவின் நம்பர் 1 இயக்குனரா?

எந்தவொரு மனிதனும் அவன் சார்ந்த பிராந்தியத்தில், மக்களின் மனங்கவர்ந்து வெற்றிகளைப் பெற்ற பின், தனது அடுத்த இலக்காகத் தனக்கான எல்லைகளை விரிவாக்க எண்ணுவான். அரசியலோ, சினிமாவோ அல்லது அது எந்தவொரு துறையாக இருந்தாலும் வளர்ச்சி என்பது இப்படியே அடையப்படும். சினிமாவிலும் இப்படி ஒரு மாநிலத்தில் பெயர் பெற்ற கலைஞர்கள், புகழ் ஏணியில் மேலும் ஏற, தங்கள் மாநில எல்லையைக் கடப்பார்கள். அதனால் தான், ஒரு மொழியில் நன்கு வெற்றியடைந்த ஹீரோக்கள், அடுத்துப் பக்கத்து மாநிலத்தைக் குறி வைப்பார்கள். […]
தொழிலாளர் தினம்

வட அமெரிக்காவில் தொழிலாளர் இயக்கம் 1886, மே 1ஆம் திகதி தொடங்கப்பட்டது. ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் மட்டுமே வேலை தரவேண்டும் எனக் கோரி வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதன்விளைவாகத் தொழிலாளர்களின் தினசரி வேலைநேர அளவு நிர்ணயிக்கப்பட்டது. இதன் பயனாக ஒருநாளில் எட்டு மணிநேரம் வேலை எட்டு மணிநேரம் பொழுதுபோக்கு மற்றும் எட்டு மணிநேரம் ஓய்வு ஆகியவற்றை வாதிட்டு வரையறுக்கப் பட்டது. உலக சமவுடமையின் தந்தையான கார்ல் மார்க்ஸ் மற்றும் அவரது நண்பன் எங்கெல்ஸ் (Karl […]
பகுத்தறிவு – பகுதி 5

(பகுதி – 4) நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்தத் தலைப்பைத் தொடர்வது என்ற முடிவுக்கு வந்துள்ளேன். சென்ற பகுதிகளுக்கு வந்த விமரிசனங்களும், கருத்துக்களும், கேள்விகளுக்கும் மனதுக்கு மிகவும் உற்சாகமூட்டுவதாக அமைந்தது. என் கருத்தோடு உடன்படாதவர்களின் கேள்விகளும் உற்சாகமூட்டுவதாகவே அமைந்தன. நிச்சயமாக, மாற்றுக் கருத்துள்ளவர்களின் மன ஓட்டத்தையும் அறிந்து கொள்ள வேண்டுமென்பதே எனது ஆசையும்கூட. பின்னூட்டங்கள் உற்சாகமாக அமையும் அதே சமயத்தில், நேரடியாக அனுப்பப்பட்ட சில கேள்விகளும், சந்தேகங்களும், மேலும் பொறுப்புணர்ச்சியோடு எழுத வேண்டுமென்ற எண்ணத்தைத் தூண்டுவதாக […]