admin
admin's Latest Posts
ஒரே ஒரு சந்திரன் ..
மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன். எத்தனை பேருக்கு இந்தப் பெயரில் இவரைத் தெரியுமோ, அறியேன். ஆனால் அந்தப் பிரபலமான மூன்றெழுத்தைத் தெரியாத, ஐம்பதுகளுக்குப் பின்னர், எண்பதுகளுக்கு முன்னர் பிறந்த தமிழர் கிடையாது என அடித்துச் சொல்லலாம். இவர் இறந்து முப்பதாண்டுகள் நிறைவுறும் தருவாயில் சிலர் இவர் இன்னமும் உயிருடன் இருப்பதாக வாதிட, சிலர் இவரைத் தெய்வமாக எண்ணி பூஜித்து வணங்கி வருகிறார்கள். அரசியல், சினிமா போன்ற துறைகளில் பலரது ஏற்ற, இறக்கங்களுக்கு இவர் காரணமாய் இருந்த போதிலும் அனைவரும் […]
23 வது கற்பாலக்கொண்டாட்டம் (Stone Arch Bridge Festival)
ஸ்டோன் ஆர்ச் ஃபெஸ்டிவல் என்பது மினியாப்பொலிஸ் நகரில் செயின்ட் ஆந்தனி நீர்வீழ்ச்சிக்கருகே மிசிசிப்பி ஆற்றைக் கடக்க உதவும் பண்டைய கற்பாலத்தில் கொண்டாடப்படும் கோடைக்கால விழாவாகும். இது வெள்ளிக் கிழமை ஜூன் 16இல் இருந்து ஞாயிற்றுக் கிழமை ஜூன் 18 வரை நடைபெற்றது. வானம் முகில் பிளந்து மழை பொழிவேன் என மிரட்டினும் மழையினால் கொண்டாட்டங்களிற்குப் பாதிப்பில்லை. இம்முறை மினசோட்டாக் கோடை வெய்யில் உக்கிரம் இல்லாமல் யாவும் இதமான கால நிலை விழாவாக அமைந்தது. இது மிசிசிப்பி […]
வொண்டர் வுமன் – திரை விமர்சனம்
மேற்கத்தியத் திரைப்படங்களில் அதிசய சக்தி வாய்ந்த ஹீரோக்களைப் படைப்பதில் மார்வெல் மற்றும் டீசி காமிக்ஸ் மிகப் பிரபலமான நிறுவனங்கள். டீசி காமிக்ஸின் படைப்பு தான் வொண்டர் வுமன். இந்தப் படத்தைப் பட்டி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார். மிஸ் இஸ்ரேல் பட்டம் வாங்கிய கால் கடாட் வொண்டர் வுமனாக நடித்துள்ளார். கதாபாத்திரத்துக்குப் பொருந்தும் வகையில் இருக்கிறார். இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வெற்றி கண்டுள்ளது. ஆண்கள் ஆதிக்கம் மிகுந்த அதிசய மனிதர்களில் தனக்கெனத் தனியிடம் பிடித்துள்ளார் வொண்டர் வுமன். சிலந்தி […]
சிரத்தை
”ஆச்சு.. இன்னையோட சரியா ஏழு வருஷம் முடிஞ்சுது…. இப்போதான் நடந்ததுபோல இருக்கு…” படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டே நினைவு கூர்ந்தான் கணேஷ்… “ஆமாம்… நேக்கும் அதே நெனப்புத்தான்…” அவன் முழுதாக விளக்கியிருக்காவிடினும், எதைப்பற்றிச் சொல்கிறான் என்று புரிந்து கொண்ட லக்ஷ்மி, அவனுக்கு விடையளித்துக் கொண்டிருந்தாள். படுக்கையில் அருகருகே அமர்ந்துகொண்டு ஒன்றும் பேசாமல் சற்று நேரம் இருந்த அவர்களின் மௌனத்தைக் கலைத்தது அவசர அவசரமாய் உள்ளே ஓடிவந்து படுக்கையில் ஏறிக் குதித்த சிறியவளின் ஆர்ப்பாட்டம். பெற்றோர் இருவரும் பேசாமல் […]
மோகத்தைக் கொன்றுவிடு !!
ஆயிரம் படித்தும் ஆவது அறிந்தும்
ஆலயம் புகுந்தும் ஆன்மிகம் உணர்ந்தும்
ஆசையை மனதில் ஆறாது செய்வது
ஆண்களின் வாழ்வில் ஆகாத செயலோ?
காணுமிடம் எங்கெங்கும் கன்னியரின் கோலம்
காட்சிப் பிழையோ இல்லை கருத்துப்பிழையோ?
காலங் கடப்பினும் கருவளையம் தோன்றிடினும்
காமக் களிப்பது கருத்துவிட்டு அகலாததேனோ?
அ முதல் ஃ வரை …!
அ- அதிசயிக்க மறந்துவிட்டேன் அதிசயமே நீ என்பதால் ஆ- ஆர்ப்பரிக்க மறந்துவிட்டேன் அலைகடல் நீ என்பதால் இ- இரவை ரசிக்க மறந்துவிட்டேன் என் நிலவே நீ என்பதால் ஈ – ஈகை செய்ய மறந்து விட்டேன் ஈகையின் இருப்பிடம் நீ என்பதால் உ- உலகைக் காண மறந்துவிட்டேன் என் உலகமே நீ என்பதால் ஊ- ஊஞ்சலில் ஆட மறந்துவிட்டேன் என் தென்றல் நீ என்பதால் எ- எழுதுகோலைப் பிடிக்க மறந்துவிட்டேன் என் இறகு நீ என்பதால் ஏ- […]
கவிதையாய் நீ ….!!
சேமித்த காதலின் சிதறல்களாய் நீ …. கண்ணீர்க் குவளைகளின் கதறல்களாய் நீ …. எண்ண ஓட்டத்தின் சிறகுகளாய் நீ …. நினைவு அலைகளின் சின்னமாய் நீ …. ஆசைக் கடலின் ஓடமாய் நீ … கனவு ஆலையின் உறைவிடமாய் நீ….. கற்பனை ஊற்றின் பிம்பமாய் நீ ….. என்றுமே எந்தன் காதலாய் நீ ….!! – உமையாள்
கர்நாடக இசை நிகழ்ச்சி
மினசோட்டா மாநிலத்தின் மேப்பிள்க்ரோவ் நகரில் அமைந்துள்ள ஹிந்து தேவாலயத்தில், ஜூன் மாதம் 10ஆம் திகதி கர்நாடக இசைக்கச்சேரி விமரிசையாக நடைபெற்றது. இதில், பிரபல கர்நாடக இசைக் கலைஞர்களான ஸ்ரீசாய் ஸ்ரீனிவாசன், ஸ்ரீ சங்கரன் நம்பூதிரி மற்றும் வயலின் வித்வான் பகல ஜெயப்பிரகாஷ், புல்லாங்குழல் வித்வான் கோ. நடராஜ் மற்றும் தவில் வித்வான் கணேஷன் கஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர். அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில வாசகர்களின் பார்வைக்கு: – புகைப்படம்: இராஜேஷ் கோவிந்தராஜன்.







