admin
admin's Latest Posts
வபஷா தேசிய கழுகு மையம்

அமெரிக்காவின் தேசியச் சின்னமாக கழுகு இருப்பது, நாம் அனைவரும் அறிந்ததே. என்ன விதமான ஒரு டெரர் பறவையைத் தேசியச் சின்னமாக வைத்து இருக்கிறார்கள் என்று எண்ணுவது உண்டு. ஒருவேளை, அமெரிக்காவில் அதிகமாக கழுகு இருக்கிறதோ என்னமோ என்று நினைத்தால் அதுவும் இல்லை. சமீபகாலம் வரை இது அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் தான் இருந்தது. இப்போது 2007இல் தான், கழுகுகளின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கும் காரணத்தால், அந்தப் பட்டியலில் இருந்து கழுகு நீக்கப்பட்டுள்ளது. எண்ணிக்கை பார்த்துச் சின்னம் அமைப்பது […]
முறிந்த மின் வலயத்தை மாற்றலாமா?

நளினமாக நமது விரல்கள் நம்மையே அறியாது நமது தொலைபேசியில் நர்த்தனம் செய்ய நறுக்குத் துணுக்குகளையும், நல்ல படங்களையும் நன்றாகப் பார்த்துச் சிரித்து, சுவாரஸ்யமான செய்திகளையும் சுவைத்துப் பார்த்துக் கொண்டுள்ளோம். எல்லாம் நல்லபடியாகத்தானே உள்ளது. முறிந்த மின் வலயமா? அது எப்படி? புரியவில்லையே என்று நாம் தலையைச் சொரியலாம். இவ்விடம் நாம் குறிப்பிடுவது உங்கள் கைப்பேசி, தட்டுபலகை தொழிற்பாட்டை அல்ல. அதன் பின்னணியில் நடைபெறும் சமுதாய சம்பிரதாய முடங்கல்களை. மின்வலயங்கள் மற்றும் சமூகவலயங்கள் பல்லாண்டுகள் உள்ளன போனறு நமக்குத் […]
கவண்

ஷங்கரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய எவரும், அவர் பாணியில் படமெடுக்கவில்லை. பாலாஜி சக்திவேல் மட்டும் ஒரு படம் எடுத்தார். ஆனால், அவருடன் ஒரேயொரு படத்தில் பணியாற்றிய கே.வி.ஆனந்த் எடுக்கும் படங்களில் எல்லாம் ஷங்கர் படத்தின் தாக்கம் இருக்கும். அயன், கோ என்று ஹிட்டடித்தவர், சமீபக் காலமாக எங்கேயோ சொதப்பி விடுகிறார். இப்ப,கவண் எப்படி வந்திருக்கிறது என்று பார்க்கலாம். தற்கால ஊடக அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான போராட்டங்கள் கலந்த கதைக்களம். அதனால் நடப்பு நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்திக் கொள்ள […]
ராஜா – SPB – என்னதான் பிரச்சினை?

இந்தியச் சமூக ஊடகங்களின் இப்போதைய ஹாட் டாபிக் இளையராஜா மற்றும் SPB என்ற இரு மிகப் பெரிய ஆளுமைகள் பற்றிதான். பரபரப்புக்கு காரணம் பதிப்புரிமையும்(Copyright) அதைப் பற்றி எந்த விதமான அடிப்படை புரிதலும் அற்ற வீண் விவாதங்களும் என்று சொன்னாலும் சாலப் பொருந்தும். இந்தப் பதிவின் நோக்கம் இசை படைப்பாளிகள் மற்றும் தயாரிப்பாளர்களின் அறிவுசார் சொத்து (Intellectual Property) குறித்த நடைமுறை என்ன என்பதை அலசுவதே! அதற்கு முன்பு ஒரு சிறிய பிளாஷ்பேக்…! “ரெடி! ஒன், டூ, […]
கைப்பந்து விளையாட்டுப் போட்டி 2017

மினசோட்டா மலையாளி அசோஸியேஷன் சார்பில் மார்ச் மாதம் 25ஆம் நாள், கைப்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பல்வேறு அணிகள் பங்கேற்றன. இந்த போட்டி திரு. சீதா காந்த டேஷ், திரு. ப்ருஸ் கோரி மற்றும் மலையாளி அசோஸியேஷன் நிர்வாக உறுப்பினர்கள் தலைமையில் நடைபெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு பனிப்பூக்கள் சார்பாக வாழ்த்துகள். அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்களுக்காக. ராஜேஷ்
CONNECT INDIA 2017

இந்தியா அசோஸியேஷன் ஆஃப் மினசோட்டா (IAM) சார்பில் பிப்ரவரி 11ம் தேதி அன்று “CONNECT INDIA 2017” நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மினசோட்டாவில் உள்ள அனைத்து இந்திய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் பங்கேற்றனர். அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு. ராஜேஷ்
ஹைக்கூ கவிதைகள்

முதல் காதல் …! முகப் பொலிவோடு நான் முதலாய் அவன் …! முகமறியாக் காதலில் முழுவதுமாய் அவன் …! முப்பொழுதும் அவன் நினைவால் முழுநிலவாய் நான் …! முதல் காதல் முகவுரை ஆகுமா..? முடிவுரை ஆகுமா …?! மூர்ச்சையாகிறேன் நானே…!! **** உலகமயமாக்கல் ! முதுகெலும்பை முறித்து முடக்கியது விவசாயம் உலகமயமாக்கல் …! **** கருக்கலைப்பு கல்யாண நாளன்று கருக் கலைப்பு செய்தாள் தன் காதலை பெற்றோருக்காக…! **** மது – மாது …..! […]
ஃபேஸ்புக் புர்ச்சியாளர்கள்

அதென்ன புர்ச்சி? எந்நேரமும் களத்தில் நின்று போராடினால், அது புரட்சி. டைம்பாஸுக்காக, இணையத்தில் உட்கார்ந்து அன்றைய தினத்தின் ஹாட் டாபிக்கிற்குச் சவுண்ட் விட்டுக் கொண்டிருந்தால், அது புர்ச்சி. 🙂 சமீப ஆண்டுகளில், இத்தகைய புர்ச்சியாளர்களின் புகலிடமாக, ஃபேஸ்புக் இருந்து வருகிறது. சமயங்களில், நம்ம சுற்று வட்டாரத்திலேயே இவ்வளவு புர்ச்சியாளர்களா என்று மலைக்க வேண்டியிருக்கிறது. இவர்களை அடையாளம் காண்பது எப்படி? கண்டிப்பாக, டெய்லி போஸ்ட் போடுவார்கள். போடாட்டி? ஆபீஸ்ல புழிஞ்சு எடுத்துட்டு இருக்காங்க’ன்னு புரிஞ்சுக்கோங்க!! சொந்தக் கதை, வீட்டு […]
உரிமைகள் மசோதா-2

முதல் சட்டத் திருத்தம் முதல் திருத்த வரைவிலக்கணத்தின் தமிழாக்கம் (உரிமைகள் மசோதா – 1) அமெரிக்க அரசு, எந்தவொரு மத அமைப்பையும், அவற்றைக் கடைபிடிப்பதையும் ஏற்கவோ, மறுக்கவோ எந்தச் சட்டமும் இயற்றாது. இது பேச்சுச் சுதந்திரம், பதிப்பகச் சுதந்திரம், அமைதியாக இயங்கக் கூடும் இனக்குழுக்களின் சுதந்திரம் மற்றும் தங்களது குறைகளை அரசிடம் முறையிடும் சுதந்திரம் ஆகியவற்றுக்கும் பொருந்தும். மேலேயுள்ளவற்றில் பேச்சுச் சுதந்திரம் (freedom of speech) என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் அது கருத்துச் சுதந்திரம் என்ற பொருளிலேயே கையாளப்படுகிறது. […]