admin
admin's Latest Posts
காத்திருப்பு
காத்திருப்பு சுகமானது காதலில்
காதலியின் வரவை எதிர்பார்த்துக் காதலனும்
காதலனுக்காக அவளும் காத்திருப்பாள்
கருவாச்சி மனதினுள் பொங்கிடுவாள்….!
கட்டிய கணவனைக் கனிவோடு வரவேற்றிட
கட்டைவிரலால் கோலமிட்டே வாசலிலே நின்றிடுவாள்
அட்சய பாத்திரம்
எண்ணங்கள் நினைவுகள்
கற்பனைகள் கவலைகள்
காதல்கள் மோதல்கள்
பழக்கங்கள் வழக்கங்கள்
சிந்தனைகள் சிரிப்புகள்
உறவுகள் பிரிவுகள்
மினசோட்டாவில் “கறி விருந்து”
உண்டிக் கழகு விருந்தோ டுண்டல்! (நறுந்தொகை) இனி வரும் தை(சனவரி) திங்கள்கள் தமிழ் மரபுத் திங்களாகக் கொண்டாடப்படும் என்ற கனேடிய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து “வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை” அனைத்துத் தமிழ்ச் சங்கங்களையும் தமிழ் மரபுத் திங்களைக் கொண்டாடுமாறு அறிவுறுத்தியுள்ளது. நமது மரபுகளும் பல தலைமுறைகளாக ஒன்றிலிருந்து மறு தலைமுறைக்குக் கடத்தப்பட்டுத் தழைத்து, இன்று மரபு எச்சங்களாக நம்மிடம் புழக்கத்தில் இருப்பவற்றில் முதன்மையானதான விருந்தையும் விருந்தோம்பலையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சொல்லவேண்டியது ஒவ்வொரு தமிழரின் […]
மினியாபொலிஸில் இருந்து யாழ்ப்பாணம் வரையான பயணப் பாதையில்…
( பயணக் கட்டுரை) மிகவும் நெருக்கடியான ஒரு மாலைப் பொழுதில் அன்றொருநாள் எனது தாய் நிலத்தை விட்டு நீங்கியே ஆக வேண்டிய கட்டாயச் சூழலில் இரவோடு இரவாக ஊர்விட்டு நீங்கினோம். எனது தாய்நாட்டையும் உறவுகளையும் பிரிந்து சரியாகப் பத்து வருடங்கள் கழித்து மீண்டும் தாயகம் நோக்கிய எனது பயணம் மினியாபொலிஸ் விமான நிலையத்தில் இருந்து தொடங்கியது சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு தான் ஆண்டுப் பலன் நன்றாக எனக்கு வேலை செய்திருக்கின்றது போல.… இந்தப் […]
அமெரிக்க நன்றி நவிலல் நாளும் அதன் சரித்திரமும்
ஆண்டுகள் புரண்டு ஓட ஆளுபவர், நாடுபவர், நடுவில் திளைத்தவர் எனப் பல்வேறு மக்களும் தமக்கென வழிமுறைக் கதைகளை உருவாக்கிக் கொள்ளுவர். வரலாறுகள் பெருமளவில் வெல்பவர்களால் எழுதப்படுபவை. இவையே காலகாலத்தில் சமூக இதிகாசங்களாக மாறுகின்றன; மேலதிக சிந்தனையின்றி நடைமுறை உண்மைகள் என்றும் திரிபுற்று மாறுகின்றன. ஆயினும் வரலாற்றுத் தகவல்களை தொடர்ந்தும் ஆய்வு செயப்பட்டு இது ஒரு சாரார்க்குச் சாதமானதோ இல்லையோ அடிப்படை உண்மைகளை பன்முனை ஆய்வு தரவு தகவல்கள் மூலம் வெளிக்கொண்டு வர முனையும். எனினும் சமூகங்கள் அந்தந்தக் […]
பகுத்து ஆராய்தல் வல்லமை
முக்கிய குறிப்பு :இது உங்களிற்கு ஏற்கனவே அறிந்து கொண்டுள்ள ‘ தெரிந்து கொண்டுள்ள அறிவியல் தகவல்களைத் தவிர்த்து – தரப்பட்டுள்ள தகவல்களை மாத்திரம் உபயோகித்து, பகுத்து அறிந்து, ஆராய்ந்து முடிவுகளைப் பெற்றுக் கொள்ள முனையவும். கீழே உள்ள கூற்றுக்களை நீங்கள் அடிப்படை என்று எடுத்துக் கொண்டால் அதை வைத்துக் மிகுதித்தரவுகளில் உண்மையானது எது என்று கூறவும். உதாரணம்: தானியங்கள் எல்லாம் புல் விதைகள் . நெல்லு ஒரு தானியம். ஆகவே, (1) தானியங்கள் எல்லாம் நெற்கள். (2) […]







