admin
admin's Latest Posts
“குத்துக்கல்…!”
அவளும் நானும் ரொம்ப வருஷமா இப்டித்தான் வாழ்ந்திட்டிருக்கோம். ஸாரி, வாழ்ந்திட்டிருக்கோமில்ல….இருந்திட்டிருக்கோம்…சேர்ந்து இருக்கிறவங்கள்லாம் சேர்ந்து வாழ்றதா அர்த்தமாகாதுல்ல…அதுனால அப்டிச் சொன்னேன்….வாழ்றதுங்கிறது ஆத்மபூர்வமானது….அப்டித்தான் நா நினைக்கிறேன்…இதயத்துல ஒருத்தர வச்சு போஷிக்கிறது…பூஜிக்கிறதுன்னு கூடச் சொல்லலாம்…அப்டியிருந்தா பரஸ்பரம் ஒருத்தர் நலத்துல இன்னொருத்தருக்கு அக்கறை பரிபூர்ணமா இருக்கும்…முணுக்குன்னா மனசு சங்கடப்படும்…என்னாச்சோ, ஏதாச்சோன்னு பதறும்…அப்டியெல்லாம் எந்த அதிர்வும் எங்க வாழ்நாள்ல ஏற்பட்டதுல்ல…அவளுக்கும் சரி, எனக்கும் சரி…சிறு சலனங்கூடக் கெடையாது…அதுனாலதான் சேர்ந்து இருக்கிறதுங்கிற பதத்தைப் பிரயோகப்படுத்தினேன். இதுல என்ன விசேஷம்னா, எங்களோட இருப்பு இதுநாள் வரைக்கும் யாருக்கும் […]
தலையங்கம்
வாசகர்கள் அனைவருக்கும் பனிப்பூக்களின் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ! புத்தாண்டில் பலர் பல விதமான தீர்மானங்களைச் செய்திருக்கலாம். அது இன்றிலிருந்து தொடர்ந்து உடற்பயிற்சி செய்வேன் என்பதாக இருக்கலாம். அல்லது ஏதேனும் கெட்ட பழக்கங்கள் இருந்தால் அதனைக் கைவிடுவதாக இருக்கலாம். அது எதுவாக இருப்பினும் அந்தத் தீர்மானத்தை நீங்கள் வாழ்நாள் முழுவதும் உறுதியாகக் கடைபிடித்து மகிழ்ச்சியாக வாழ்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டுமென்று இதன்மூலம் வேண்டிக் கொள்கிறோம். 2015 ஆம் வருட சாதனைகள் என்றும், 2016 […]
அசோகமித்திரனுக்கு அருகாமையில்….
சமீபத்திய இந்தியப் பயணத்தின் போது ஒரு அரிய வாய்ப்பாக, பழம் பெரும் எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான எழுத்தாளர் அசோகமித்திரனைச் சந்தித்து உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த எனது கல்லூரி நண்பன் ஸ்ரீராமிற்கு, இச்சமயத்தில் எனது இதயபூர்வமான நன்றியை உரித்தாக்குகிறேன். எனது சந்திப்பைப் பற்றி எழுதுவதற்கு முன்னால், திரு. அசோகமித்திரன் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுவது பொருத்தமாக இருக்கும். தமிழ்ப் படிக்கும் ஆர்வலர்களுக்கு அவரைப் பற்றிய அறிமுகம் தேவையில்லையெனினும், இந்தக் […]
ஆட்டிஸம் – பகுதி 3
(ஆட்டிஸம் – பகுதி 2) இந்தப் பகுதியில் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான இரண்டு முக்கிய விஷயங்களைப்பற்றி பார்க்கலாம். அவர்களுக்குப் பொருத்தமான உணவு வகைகள் பயோமெடிக்கல் சிகிச்சை முறை பொருத்தமான உணவு வகைகள் ஆட்டிஸம் போன்ற நிலைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தகுந்த உணவு என்னவென்பதில் பல ஆராய்ச்சிகள் நிகழ்ந்துள்ளன என்பதை அறிந்து கொண்டோம். அந்த ஆராய்ச்சியின் விளைவாகக் கண்டுபிடிக்கப்பட்ட GFCF (Gluten Free Casein Free) வகை உணவுகளையே எங்களது மகனுக்குக் கொடுத்துக் கொண்டு வருகிறோம். முதலில் […]
மழலை
நம்முகம் பார்த்து
நயமுடன் நகைக்கையில்
நானிலம் முழுவதும்
நம்வசம் வந்ததன்றோ !
பூமுகம் மலர்ந்து
புன்னகை புரிகையில்
புவிதனில் நம்வாழ்வின்
புளகாங்கிதம் விளங்குதன்றோ !
ஆதாம் ஏவாள்
அந்தகாரச் சூனியத்தில்
அச்சுக் கொண்ட இரண்டாய்
நாம்…
வழியெங்கும் திசை
மாறும் பாதம்
நமக்கானது…
பாலிவுட் டான்ஸ் குழுவினருடன்….
(Click here for English Version) டிசம்பர் 12, 2015; மெல்லிய பனிச்சாரல் கலந்த இதமான மாலைப் பொழுதில் நமது பனிப்பூக்கள் குழுவினர் பாலிவுட் டான்ஸ் சீன் குழுவினருடன் கலந்துரையாட டேபஸ்ட்ரீ ஃபோல்க் டான்ஸ் மையத்திற்கு (Tapestry Folk Dance Center) சென்றிருந்தோம். உள்ளே நுழையும் ஒவ்வொருவரின் முகத்திலும் சுறுசுறுப்புப் பொங்கியது. குழுவின் ஆர்வம் மற்றும் மகிழ்ச்சியைக் காண்கையில் இன்று 2015ன் கடைசி வகுப்பு என நம்ப முடியவில்லை. சில அறிவிப்புகள், நடன ஆசிரியர் அறிமுகம், தயார்ப் […]
அமெரிக்கத் தேர்தல் – பகுதி 1
அமெரிக்க அரசியலிலும் இதெல்லாம் சாதாரணமப்பா.. “அந்த மூஞ்சியைப் பாரு .. யாராவது அதுக்கு ஓட்டுப் போடுவாங்களா? இந்த மூஞ்சிக்கு அடுத்த ஜனாதிபதி ஆகத் தகுதி இருக்கா?” “மெய்யாலுமே என் சொந்த மயிரு தான் .. பாக்கறியா.. பாக்கறியா .. தொட்டு வேணாப் பாக்கறியா?” ‘சும்மா அங்கனக்குள்ளயே எதுக்கு நோண்டிக்கிட்டு இருக்கிற? பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்’ இவையெல்லாம் கவுண்டமணியோ, வடிவேலுவோ பேசிய திரைப்பட வசனங்கள் அல்ல. வல்லரசு நாடான ஐக்கிய அமெரிக்காவில் 2016ம் ஆம் ஆண்டு அதிபர் பதவிக்குப் […]
புத்தக மூட்டை
” அம்மா வலிக்குதே …”
பச்சிளம் குழந்தையாக இருந்தேன்
பார்த்துப் பார்த்து வளர்த்தாய்
மூன்று வயது ஆனேன் என்
முதுகில் சுமையை ஏற்றி வைத்தாய்
பள்ளிப் பாடங்கள், புத்தகங்கள் என்றாய்
பளுவை ஏற்றிக்கொண்டே போனாய்
வலிக்குதே அம்மா என்றேன் வழியெல்லாம்
பழகி விடு என்று ஏற்றாய் என் பழியெல்லாம்
வழிகாட்டும் வள்ளுவம்
உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து வாழ்க்கையின் தத்துவத்தை இக்குறள் மிக அழகாக எடுத்துக் கூறுகிறது. மனித நேயம் என்றால் என்ன என்பதனை மிக உணர்வு பூர்வமாக இக்கட்டுரை வடிவமைத்துள்ளது. என்னுள் ஏற்பட்ட மனமாற்றத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். என்னைக் கவர்ந்த கட்டுரை: ஒரு கல்லூரியில் நடந்த நிகழ்வு: ஒரு மாணவர் கல்லூரி வகுப்பறை நோக்கி நடந்து வருகின்றார்! திடீரென மழைத் துளிகள் விழ ஆரம்பித்தன. வலுத்த மழைத் துளிகளில் மாணவர் நனைந்து […]







