admin
admin's Latest Posts
எழில் அரசி எஸ்தர் பெற்றுத் தந்த விடுதலை
திருவிவிலியம் பழைய ஏற்பாடு எஸ்தர் ஆகமத்தில பார்த்தீங்கனா இந்தியா என்று தொடங்கும். என்ன வியப்பாயிருக்கா? ஆமாங்க… 2500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா தொடங்கி எத்தியோப்பியா வரைக்கும் 127 மாநிலங்களையும் சூசான் என்ற தலைநகரிலிருந்து அகஸ்வேர் என்ற பாரசிக மன்னன் மிகுதியான செல்வச் செழிப்போடு ஆண்டுவந்தார். அந்தக் காலத்தில அரசியல், அதிகாரம், மதிமயக்கும் அழகு, செல்வச் செழிப்பு இவற்றோடு அடிமைப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்த நிகழ்வைத்தான் இப்ப பார்க்கப்போறோம். கிராமத்துல சொல்லுவாங்க “அற்பனுக்கு வாழ்வு வந்தா, அர்த்த ராத்திரியில […]
குறை ஒன்றும் இல்லை
“கோகி வீட்டில பிறந்த நாள் அழைப்பு குடுத்திருக்காங்க மனோ ” கணிப்பொறித் திரையைப் பார்த்தபடி மனோவிடம் பேசினாள் பிருந்தா. “யாருக்குப் பிறந்த நாள் ?” ” அவங்க பெரிய பையன் ஆகாஷ்க்கு 9 வது பிறந்த நாள்”. “எப்போ?, எங்கே?”. “வர சனிக்கிழமை , ஒரு விளையாட்டுத் திடலில் “. “எங்கே?” மறுபடியும் மனோ வினவ, ஒரு பெரிய விளையாட்டு அரங்கம் பெயரைக் குறிப்பிட்டாள் பிருந்தா. “அங்கே என்ன இருக்கு?” “மினி golf, அப்புறம் குதிக்கறதுக்கு ஒரு […]
அப்பாவை காணவில்லை
அப்பா காலையில் வாக்கிங் சென்றவர் இன்னும் வீடு வந்து சேரவில்லை என்பது இவனுக்கு அலுவலகம் கிளம்பும்போதுதான் தெரிந்தது.அதுவும் அவன் மனைவி அதை ஒரு குறையாகச் சொன்னாள் ” கரண்ட் பில் கட்டறதுக்கு உங்கப்பாவை அனுப்பலாமுன்னா காலையில வெளிய போன மனுசன் இன்னும் காணல” என்றவளிடம் அப்பா இன்னும் வரலயா? ஆச்சர்யமுடன் கேட்டவன் இந் நேரத்துக்கு வந்திருப்பாரே, குரலில் கவலையைக் காட்டினான். நீங்க கிளம்புங்க, அவர் வந்துட்டாருன்னா உங்களுக்கு ஃபோன்ல சொல்றேன், அவன் மனம் ஊசலாட ஆரம்பித்துவிட்டது. இப்பொழுது அப்பாவைத் தேடிக் கிளம்பினால் அலுவலகத்துக்கு அரை நாள் லீவு […]
மறவாத அந்த நாள் !
அன்னையின் மடியில்
தவழ்ந்த நாள்
தந்தையின் வேட்டியில்
தொட்டிலில் தூங்கிய நாள் !
மலர் மெத்தையில்
புரண்டு சிரித்த நாள்
மயில் தோகை விரித்து
விசிறி விட்ட நாள் !
கவித் துளிகள்
மலரொன்று
மலராமல்
மணம்வீசி
மயக்குகிறது ….
அவளின் இதழ் மடல்கள் !!!
இதழில் உழன்று
மயங்குகிறேன் ….
அவள் மடல் விரிக்கையில்
நான் வீழ்கிறேனே ….
எழ மனமின்றி!!!
சொற்சதுக்கம் 6
கீழே கட்டத்துக்குள் இருக்கும் ஒன்பது எழுத்துக்களைக் கொண்டு சொற்களை உருவாக்குங்கள். சொற்கள் இரண்டெழுத்தாகவோ அல்லது அதற்கு மேற்பட்டதாகவோ இருக்கலாம். ஒரே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கலாம். சொற்கள் பொருள் பொதிந்தவையாக இருக்க வேண்டும். இருபது சொற்களுக்கு மேல் உருவாக்கினால் நீங்களே உங்களுக்கு தமிழ்ப் புலி என்ற பட்டமளித்துக் கொள்ளலாம் சொற்சதுக்கம் 6 – விடைகள்
மழைத் துளிகள்
மழையின் கேள்வி !!!
விவசாயி :
வானம்
மும்மாரி பொழிய விதைத்தவன்
தொழுதான் …!!!!
மழை :
டேய் மானிடா…..
நீ என்று தான்
என்னைப் போற்றுவாய்?
நான் பெய்யனப் பெய்தாலும்
வைகிறாய் ; பெய்யாமல் பொய்த்தாலும் வைகிறாய் .
என் செய்வேனடா …?
எசப்பாட்டு – ஆண்களின் அவலம்
தேர்வு பலர் எழுதினாலும் தேர்ச்சி பெற்றுச் சிறப்பது தேன் போன்ற மகளிரே தேடிப் பார்த்துப் புடிச்சாலும் தேசம் முழுதும் சலிச்சாலும் தேருவது ஆண் மகனின் தேக்க நிலை எங்குமே ! தேங்கும் நிலை தவிர்த்து தேம்பி அழுவது தொலைத்து தேர்ச்சி பெறுவது எந்நாளோ? வெ/ மதுசூதனன்.
அந்த நாள் ஞாபகம் நெஞ்சினில் வந்ததே……….
சமீபத்தில் சென்னையில் அண்ணா சாலையில் பிரயாணிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. சென்னையிலேயே மிகவும் உயரமான கட்டிடம் என்ற பெருமையைப் பல வருடங்களாகத் தக்கவைத்துக் கொண்டிருந்த எல்.ஐ.சி கட்டிடம் இருந்த திசையிலிருந்து தியாகராய நகர் நோக்கிப் பயணம். சென்னையின் கம்பீரமாகப் பல திரைப்படங்களில் காட்டப்படும் அண்ணா மேம்பாலத்தில் ஏறுகையில் தற்செயலாகக் கண்கள் காரின் கண்ணாடி ஜன்னல்களுக்கூடாக வெளியே பார்த்தன. அமெரிக்கன் கான்சுலேட்… அதன் காம்பவுண்ட் சுவர். அதை ஒட்டிய பிளாட்ஃபார்ம்…. கொளுத்தும் வெயில்.. நூற்றுக்கணக்கான இளைஞர்கள், இளைஞிகள்… தங்களின் வாழ்வே […]







