admin
admin's Latest Posts
கிழித்தெறியப்படும் கவிதைகள்
இந்தக் கவிதைகளை எங்கள் பண்பாடென
ஒருகாலத்தில் நாங்கள் உறுதி பூண்டிருந்தோம்
புழுக்கத்தில் கசியும் இரவுகளில் கூட
நெறி தவறாமல் – நாம்
எம் கவிதைகள் படித்தோம்
லேக் சுப்பீரியர் – ஏரிகளின் ராணி
மினசோட்டாவில் ஒரு வருடத்திற்கு மேல் இருந்தவர்கள் அனைவரும் கண்டிப்பாக டுலுத்‘திற்கு (Duluth) ஒரு விசிட் அடித்திருப்பார்கள். ‘என்னது, மினசோட்டாவில் இருந்துவிட்டு டுலுத் போனதில்லையா?’ என யாராவது கேட்டுவிடுவார்களா என பயந்தே பலரும் போய்விட்டு வந்திருப்பார்கள். போலவே, லேக் சுப்பீரியரும். லேக் சுப்பீரியரின் கரையோரத்தில் இருக்கும் டுலுத்திற்கு செல்பவர்களின் கண்களில் இந்த சுப்பீரியர் ஏரி படாமல் போவதில்லை. அமெரிக்காவில் இருக்கும் ஒவ்வொரு பகுதியிலும், இலையுதிர் காலத்தில் இயற்கையின் வர்ண ஜாலத்தைக் காண சில இடங்கள் இருக்கும். Fall color […]
சொற் சதுக்கம்
கீழே பெட்டிக்குள் இருக்கும் எழுத்துக்களைக் கொண்டு பொருளுள்ள சொற்களை அமையுங்கள். சொற்கள் எத்தனை எழுத்துக்களை வேண்டுமானாலும் கொண்டிருக்கலாம். எ.கா. மனம். 25 சொற்களுக்கு மேல் கண்டுபிடித்தால் நீங்கள் தமிழ் வித்தகர் என்று சொல்லிக்கொள்ளலாம். ட வ ம த ம் ன வே க ர (சொற் சதுக்கம் – விடைகள்)
சீதா எலிய
இலங்கையின் கண்டியில் உள்ள பெரதனியா தாவரவியல் பூங்கா மிக அழகான பூங்காக்களில் ஒன்று பார்த்திபன் கனவு படத்தில் வரும் “ஆலங்குயில் பாடிவரும்….” என்ற பாட்டு இங்கேதான் படப்பிடிப்பு நடத்தியாதகச் சொல்கிறார்கள். இலங்கையில் உள்ள இன்னொரு மிகச் சிறப்பான தாவரவியல் பூங்கா நுவரேலியாவில் இருக்கும் “ஹக்கல” என்ற இடத்தில் உள்ளது. இந்தப் பூங்காவுக்கு மிக அருகில்தான் சீதையம்மன் கோவில் ஒன்று உள்ளது. உயர்ந்த மரங்கள் நிறைந்த மலையைப் பின்னணியாகக் கொண்டு இது அமைக்கப்பட்டுள்ளது. “சீதாஎலிய” என்பது அந்த ஊரின் பெயர். இராவணன் […]
எச்சம் (ஒரு சிறு விளக்கம்)
தமிழில் சொல்லோ, சொல்லின் பொருளோ முழுமை பெறாமல் குறைந்து நிற்பதை “எச்சம்” என்னும் சொல்லால் குறிப்பிடுகிறது. எச்சத்துக்குத் தொல்காப்பியம் தரும் குறியீடு ‘’எஞ்சுபொருட்கிளவி ‘’ என்பதாகும். பொருள்எஞ்சிநிற்கும் சொல் என்பது இதன் விளக்கம். பிரிநிலை எச்சம் வினை எச்சம் பெயர் எச்சம் ஒழியிசை எச்சம் எதிர்மறை எச்சம் உம்மை எச்சம் என எச்சம் சொல் எச்சம் குறிப்பு எச்சம் இசை எச்சம் எனப் பத்து வகையான எச்சங்களைத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. “பிரிநிலை வினையே பெயரே ஒழியிசை எதிர்பறை […]
உலகம்
இயற்கையெனும் இனிய அன்னை
இளம்பொன் சூரியக்கதிர் கொண்டு
இருள்நிறைக் கருப்பைக் கிழித்து
இன்னொரு நாளை ஈன்றெடுத்தாள்!
சொற் சதுக்கம் – விடைகள்
தவம் வேடன் வேதம் வேகம் வேடம் தரம் தனம் தடம் தவம் வரம் வரன் வனம் வடம் வதம் வதனம் தனம் தடம் தவம் தகனம் தகரம் தரம் மரம் மகம் மதம் மனம் ரதம் ரகம் கரம் கவனம் கனம்
திருக்குறளும் இளஞ்சிறகுகளும்
உலகத்து மொழிகளுள் முதன்மையான செம்மொழியாம் தமிழ்மொழியின் மகுடத்தை என்றுமே அலங்கரிக்கும் அழகான சிறகு திருக்குறளாகும். திருக்குறள் வள்ளுவரால் உலக மக்களுக்காக கட்டித் தரப்பட்ட அறிவுக் களஞ்சியமாகும். விவிலியத்தைத் தொடர்ந்து அதிகமான உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதும் திருக்குறளே. எந்த மண்ணில், எந்தக் காலத்தில், எவர் படித்தாலும் படிப்பவருக்கும் படிக்கும் காலத்திற்கும் ஏற்புடையதாக அமைவது திருக்குறளின் பெருஞ்சிறப்பு. இத்தனைச் சிறப்புகள் வாய்ந்த திருக்குறள், வெறும் மதிப்பெண்ணிற்காக மனப்பாடம் செய்யும் வரிகளாக மாறிவிடுமோ என்ற அச்சம் நம்மில் பலருக்கு உண்டு. இந்த […]
இந்தியா 69
29 மாநிலங்கள் தமிழ் உட்பட இருபதிற்கும் மேற்பட்ட அலுவலக மொழிகள், சில மதங்கள், பல சாதிகள், கணக்கில் அடங்கா கடவுள்கள், இயற்கை மற்றும் இன வேறுபாடுகள், அனைத்து இடங்களிலும் ஏற்றத் தாழ்வுகள் , இத்துணை வேற்றுமைகளையும் வைத்துக்கொண்டு, உலகத்தின் மிகப்பெரிய மக்களாட்சி நாடாகக் கடந்த அறுபத்தி ஒன்பது ஆண்டுகளாக வெற்றிநடை போட்டுக்கொண்டு இருப்பது நம் இந்திய நாடாகும். பல தலைவர்களின் வழிகாட்டுதல்கள், பல்லாயிரக் கணக்கில் களபலிகள் மற்றும் தொடர்ச்சியான தியாகங்களின் பயனாக நம்மை ஆண்டு வந்த அங்கிலேயர்களை […]
வேலை
கொரியர் பையன் கொடுத்துவிட்டு போன கவர் சாவித்ரியின் அருகில் கிடந்தது. சாவித்திரி அதை கவனித்ததாக தெரியவில்லை . பார்வை எங்கோ நிலைத்திருக்க சிந்தனை அப்பாவை சுற்றி வந்ததது. அப்பா எப்படி இருந்தார் இந்த வீட்டில் எல்லாமும் அவரே என்ற நிலை… ஆறு மாதத்துக்கு முன் அந்த விபத்து அவரை அள்ளிக்கொண்டு போனதும் குடும்பம் தத்தளித்து விட்டது .இன்றோடு ஆறு மாதம் முடிந்து விட்டது . அப்பாவின் மறைவு ஏற்படுத்திய தாக்கம் அவளிடம் இருந்து இன்னும் மாற வில்லை… […]







