admin
admin's Latest Posts
மன்மத வருட மாத பலன் – ஆவணி மாதம்
(இது தமிழ்ப் பஞ்சாங்கத்தைத் தழுவி, வடஅமெரிக்கப் பகுதிகளுக்காகக் கணிக்கப்பட்டுள்ளது) தமிழ் ஆவணி மாதம்: ( ஆங்கில மாதங்கள்: ஆகஸ்ட்-செம்டெம்பர்) மேடம் (மேஷம்) – பெரும்புகழ் எதிர்பார்க்கலாம், உடல் சுகம் குறைவு, உணவு உட்கொளல் குன்றுதல், வியாதி பீடைகள், காய்ச்சல், மற்றும் துர்செயற்பாடுகளில் இருந்து அவதானம் தேவை, துணைவி, பிள்ளைகள் எதிர்ப்புக்களால் கஷ்டங்கள் ஏற்படலாம், இடபம் (ரிஷபம்) – பொருள், காசு பண இலாபங்கள் வரும், தொழிலில் முட்டுக்கட்டை ஏற்படலாம், வாழ்க்கைத் துணையிலான தடைகள் வரலாம், எதிராளிகளினால் மனப்பயம் […]
மரணம் மகத்தானது
மரணமே, நீ மரிக்க மாட்டாயா?
மண்டிக் கிடக்கும் ஊடக மெங்கும்
மடலாய்ப் பிறந்து மலையாய் வளர்ந்து
மனதை அரித்த மடமை வரிகள்!
உண்டோ இல்லையோ என்ற சர்ச்சையில்லை!
உயர்குலம் இழிகுலம் என்ற பேதமில்லை!
உலகில் பிறப்பது எதுவும் நிலையில்லை!
உன்னதத் தத்துவமிதை உணர்த்தா வேதமில்லை!
மரண தண்டனை
தவறும் மானுடர்க்குத் தண்டனை சரியோ
திருந்தத் தரும் சந்தர்ப்பம் பெரிதோ….
தரணியின் இண்டு இடுக்கெலாம் இடியாய்
தகர்த்திடும் விவாதம் இஃதே இன்று……
கடவுள் தந்த உயிரைப் பறிக்க
கனம் கோர்ட்டாருக்கு உரிமை உளதோ…
களவு செய்தாலும் கலகம் செய்தாலும்
கொடுந் தீவிரத்தால் கொலைகள் புரிந்தாலும்….
மாலையில் யாரோ மனதோடு பேச
”மாலையில் யாரோ மனதோடு பேச” என்று பாடிக்கொண்டிருந்த யாழினியின் பாடலுக்குக் கடலலைகள் இசை மீட்டின. தனது காதலனின் வருகைக்குக் காத்திருக்கும் யாழினியைத் தென்றல் தழுவிக் கொண்டிருந்தது. அமுதனின் வருகையைக் கண்டதும் யாழினியின் விழிகள் சூரிய ஒளியாகப் பிரகாசித்தது. தனது வருகையின் ஆனந்தத்தால் யாழினியின் மனதில் பூக்கள் பூத்துக் குலுங்குவதை அவளது விரிந்த உதடுகளின் வழியாக கண்ட அமுதன் மயங்கி அவளைக் கட்டியணைத்தான். கடலலையின் ஓசையோடு தங்கள் காதல் காவியங்களைப் பேசத் தொடங்கினர் இந்த இளஞ்சிட்டுக்கள். நான்காம் […]
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-14
(ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-13) எதிர்பார்ப்புக்களும் ஏமாற்றங்களும் புலத்தில் எந்தவிதமான சிக்கலுமின்றி உறவுகளுடன் வாழக்கூடிய சூழல் இருந்திருந்தால் புலம்பெயரும் தேவை இருந்திருக்காது. யுத்தம், உழைப்பு ஆகியன ஒன்று சேர்ந்து விரட்டியடிக்க, சமூகத்தில் தானும் உயர்வான நிலையினை அடைய வேண்டும் என்ற ஆவலுடன் பல இளைஞர்கள் கடல் கடந்து சென்று பணம் பெருக்கி வாழ்ந்தனர். ‘அகதி’ என்ற பதிவுரிமை பெற்றபின்னர் நல்ல வேலை, கை நிறையச் சம்பளம் எனக் கனவுகளுடன் அலைந்தனர். “அகதியென்று ஆன பின்னால் ……………………….. ‘ஐம்பதால் […]
அமெரிக்கத் தமிழ் பெற்றோர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது!! – சுமதிஸ்ரீ
தமிழக இளைய தலைமுறைப் பெண் மேடைப் பேச்சாளர்களில் முக்கியமானவரான திருமதி. சுமதிஸ்ரீ அவர்கள் சமீபத்தில் தனது அமெரிக்கச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, மினசோட்டா வருகை தந்தார். சிரிக்க வைத்து, கூடவே சிந்திக்கவும் வைக்கும் மேடைப்பேச்சுக்குச் சொந்தக்காரரான இவருக்கு எழுத்தாளர், கவிஞர், சினிமாப் பாடலாசிரியர் என வேறு பல முகங்களும் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேல், அனைவரிடமும் எளிமையாகப் பழகும் பண்புள்ள பாசமிகு சகோதரி. நமது பனிப்பூக்களுக்கு, இவர் அளித்த பிரத்யேகப் பேட்டி இங்கே. உங்கள் வாழ்வில் மேடைப்பேச்சு எங்கு […]
பேச்சே எங்கள் மூச்சு
உலகத்தில் ஏறத்தாள 77 மில்லியன் மக்களால் பல வட்டார வடிவங்களில் தமிழ் பேசப்படுகின்றது. காலம், புவியியல், மதம், சாதி போன்ற பல்வேறு காரணிகளினால் ஒவ்வொரு பிராந்தியத்திலும் தமிழ் பல்வேறு முறைகளில் உச்சரிப்பு மாற்றத்துக்கு உள்ளாவதை வட்டார வழக்கு என்கிறோம். எங்கள் தமிழ் மொழிக்கென்று மிகச் சிறந்த இலக்கண நூல்கள் உள்ளன. தமிழ் எழுத்துக்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதற்கான தெளிவான விளக்கத்தினை அவை எமக்குத் தருகின்றன. தமிழை எப்படிச் சரியாக எழுதுவது? எப்படிச் சரியாகப் பேசுவது? என்ற […]
பாபநாசம்
புத்திசாலித்தனம் ஒவ்வொரு நிமிடமும் இழையோடி, முழுவதுமாய்ப் பின்னிப் பிணைந்து, இணைந்து நிற்கும் கதை, அடுத்த நிமிடம் என்ன நடக்குமோ என்று இருக்கையின் நுனிக்கு இழுத்துச் செல்லும் திரைக்கதை, நேர்த்தியான ஒளிப்பதிவு, இயற்கையும், முதிர்ச்சியும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் தெளிவாய்க் காட்டும் நடிப்பு, தேவையான அளவு உணர்ச்சிப் பிழம்புகளை வெளிப்படுத்தும் அழகான உரையாடல்கள், நெல்லைத் தமிழை மண்மணம் மாறாமல் வெளிப்படுத்தும் சற்றும் மிகைப்படுத்தலில்லாத வசனங்கள், இப்படிப் பல உயர்வான, போற்றுதலுக்குரிய விஷயங்களைக் கொண்ட வெற்றித் திரைப்படம் பாபநாசம். மலையாளத்திலிருந்து இறக்குமதி […]







