\n"; } ?>
Top Ad
banner ad

admin

rss feed

admin's Latest Posts

புத்தொளி பிறந்தது !

Filed in போட்டிகள் by on July 28, 2015 1 Comment
புத்தொளி பிறந்தது !

வாசலில்  இருசக்கர வாகனத்தின் ஓசை சற்றே உயர்ந்து பின் மெல்ல மெல்லக் குறைந்து பின் மெளனமானது. வண்டியிலிருந்து இறங்கி, கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தை ஒற்றை விரலில் நிறுத்தி தட்டாமாலை சுற்றியவாறு வீட்டினுள் அடியெடுத்து வைத்தான் நிவாஸன். கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தை அங்கிருந்த மேசையின் மீது வைக்கக் குனிந்தவனுக்கு, அங்கு ஏற்கனவே இருந்த நோட்டுப் புத்தகத்தைக் கண்டதும் சற்று தூக்கிவாரிப் போட்டது. வேகவேகமாக தன் கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தையும், மேசை மீதிருந்த நோட்டின் பக்கங்களையும் படபடவென்று திருப்பிப் பார்த்தான். […]

Continue Reading »

உத்தம வில்லன்

உத்தம வில்லன்

ஒரு ரசிகனின் பார்வை ”அம்மாவும் நீயே அப்பாவும் நீயே” பாடலை அறியாத தமிழர்களே கிடையாது என்று சொல்லிவிடலாம். அந்தப் பாடல் காட்சியில் நடித்த குழந்தையை அறியாத தமிழ்த் திரைப்பட – ஏன் இந்தியத் திரைப்பட ரசிகர்களே இல்லை என்றும் கூறிவிடலாம். குறுகுறுத்த கண்களுடனும், துடிப்பான முகபாவங்களுடனும், வெடுக்கான வசனம் பேசும் தன்மையுடனும் “களத்தூர் கண்ணம்மா”வில் களம் புகுந்து, ஐம்பது ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகத் திரைப்படத் துறையில் முடிசூடா மன்னனாய்த் திகழும் நடிகர் கமலஹாசனுக்கு அறிமுகம் தேவையில்லை. நடிக்காத […]

Continue Reading »

கைப்பேசிக் காதல்

Filed in இலக்கியம், கவிதை by on July 28, 2015 0 Comments
கைப்பேசிக் காதல்

முந்தியெல்லாம் நான்
சிக்கனத்தில் வாழ்ந்த போது
சொப்பனத்தில் மிதந்திருந்தேன்
காசைச் சேர்த்து நல்ல
கனவானாய் வாழ எண்ணிக்
கனவில் மிதந்திருந்தேன்.
கைப்பேசி வந்த பின்னர் – என்
கனவெல்லாம் ஓடிப் போச்சு – இனி
எப்போது பணம் சேர்த்து
பந்தாவாய் நான் வாழ்வேன்?

Continue Reading »

மாவுப் பண்டம்

Filed in இலக்கியம், கதை by on July 28, 2015 0 Comments
மாவுப் பண்டம்

அன்று வேலை முடிந்து வீட்டுக்கு வரும் பொழுதே ஒரு யோசனையாக வந்தாள் கலை. வீட்டிற்கு வந்தவுடன் வீட்டின் மையப் பகுதியின் வாசலில் பாண்டி விளையாடிக் கொண்டிருந்த செல்வியை வீட்டுக்கு வருமாறு சைகை செய்தவாறு, மையப் பகுதியின் அருகில் இருந்த சிறிய குறுக்குச் சந்தில் நடந்தாள். வீட்டின் பின் புறம் ஒரு சிறு அறை போல் காணப்பட்ட, அந்த அறையின் கதவினைத் தன்னிடம் உள்ள சாவி கொண்டு திறந்தாள். அந்தச் சிறிய அறை போல இருந்த வீட்டில் உள்ளே […]

Continue Reading »

இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 10

Filed in இலக்கியம், கதை by on July 28, 2015 0 Comments
இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 10

முன்கதைச் சுருக்கம்: கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணாமூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணாமூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. அந்த எஸ்.டி கார்டைக் கேட்டு மிரட்டல் தொலைபேசி அழைப்பு வர, கணேஷ் அதனைப் […]

Continue Reading »

குறுக்கெழுத்து (பழமொழி) – விடைகள்

Filed in பலதும் பத்தும் by on April 27, 2015 0 Comments
குறுக்கெழுத்து (பழமொழி) – விடைகள்

Continue Reading »

நிறம் தீட்டுக

நிறம் தீட்டுக

Continue Reading »

வாழையிலையும் 26 வகைகளும்

வாழையிலையும் 26 வகைகளும்

“கல்யாணச் சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம் என்ற பாடல் “ஐம்பது ஆண்டுகளையும் கடந்து, இன்றும் நம்மிடையே பிரபலமாகவும் சுவை மாறாமலும் இருப்பதற்கு முக்கியக் காரணம், இந்தப் பாடலில் உணவை மையப்படுத்தி வரும் வரிகளும், காட்சிகளில் காண்பிக்கப்படும் உணவு வகைகளேயாகும். உணவிற்குத் திருவிழா எடுப்பது, பருவகாலத்திற்கு ஏற்றாற்போல்உணவை உண்பது, எதற்குப் பின் எதை உண்பது என்ற வரைமுறை வகுத்து , உணவே மருந்து என்று வாழ்ந்து, உணவைக் கொண்டாடிய சமூகம் நம் தமிழ்ச் சமூகம்,   நம்மில் பலருக்குப் […]

Continue Reading »

குறுக்கெழுத்து – பழமொழி

குறுக்கெழுத்து – பழமொழி

  இடமிருந்து வலம்  தலை சாய்க்க மடி தரும் பஞ்சு நண்பன். யார் அவன்? (4)  தண்ணீரில் பிறந்தாலும், தண்ணீரினால் மடியும். அது என்ன? (3)  இரண்டு பக்கமும் காடு ; நடுவிலே ஒரு பாதை. அது என்ன? (3)  ஊரெல்லாம் சுற்றினாலும் வீட்டுக்குள் மூலையில் முடங்கும். அது என்ன? (4)  ஊர் உண்டு மக்களில்லை; மலையுண்டு மரங்களில்லை; ஆறுண்டு நீரில்லை. வண்ணமுண்டு உயிரே இல்லை – அது என்ன? (5) 12.வாயில் கடிபடாது. கையில் பிடிபடாது. […]

Continue Reading »

நேர்மைக் காதல்

Filed in இலக்கியம், கவிதை by on April 27, 2015 0 Comments
நேர்மைக் காதல்

கன்னியிவளைக் காதலிக்கும் வேளையிலே
கண்களிரண்டிருந்தும் காட்சியிலாக் குருடனாயிருந்தேன்
கண்ணொத்த கன்னியவள் காதலினால்
கருத்தொருமித்துக் கண்களாயிருப்பாளென்ற கற்பனையால்.

அகம்புறமென அறுபதுக்குமேல் செய்யுளறிந்தும்
அறிவிலியாய் இருப்பதே அவளின்கவனமென
அமைதியாய் வாழ்ந்திருந்தேன் அந்நாளில்
அணங்கவளின் கடைப்பார்வை என்மேல்விழுமென…

Continue Reading »

ad banner
Bottom Sml Ad