admin
admin's Latest Posts
கோமகன்
சிவகங்கை மாவட்டம் சின்னாளப்பட்டி கிராமத்துப் பெரிய கோவில் பரபரத்துக் கொண்டிருந்தது. பூசாரி சுப்ரமணிய ஐயரும் அவரின் வளர்ப்பு மகன் மணிகண்டனும், சிவனுக்கும் அம்மைக்கும் அலங்காரம் செய்துக்கொண்டிருந்தனர். சுப்ரமணிய ஐயர் செய்கின்ற சந்தனகாப்பு அலங்காரம் சுத்துப்பட்டுப் பதினெட்டு கிராமத்திலும் பிரபலம். பதினெட்டு கிராமத்திலும் எல்லா கிராமத் திருவிழாக்களிலும் சுப்பிரமணிய ஐயரின் சுவாமி அலங்காரமே பேசும் பொருளாக இருக்கும். கடந்த இரண்டு வருடமாகத்தான் அவரின் வளர்ப்பு மகன் மணிகண்டனைக் கோவிலில் சுவாமி கைங்கரியங்களுக்கு அனுமதித்திருக்கின்றார். “மணி இத கவனமா பார்த்துச் […]
ஜெயகாந்தன்
இரு வாரங்களுக்கு முன்னர், ஏப்ரல் 8 ஆம் திகதி, தமிழ் எழுத்துலகச் சூரியன் ஒன்று அஸ்தமித்தது. தமிழ் எழுத்துலகில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் பற்பல சூரியன்கள் ஒளிர்ந்து பிரகாசமுறச் செய்தன என்பது நாமறிந்ததே. எனினும், ஒவ்வொரு சூரியனுக்கும் ஒவ்வொரு விதமான ஒளிக்கிரணங்கள் உண்டென்று , அதன் ஒளிக்கிரணங்களினால் அனுதினமும் மலர்ச்சியுறும் தாமரை போன்ற தமிழ் நெஞ்சங்களுக்கு அத்துபடி. தனது நிலவுலகப் பயணத்தைச் சமீபத்தில் முடித்துக் கொண்ட, ஒப்பாரும் மிக்காருமற்ற, இன்னொரு ஒளிக்கிரணம், ஜே.கே. என்று சமகாலத்தவர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட […]
தலையங்கம்
வாசகப் பெருமக்களுக்கு அன்பான வணக்கங்கள் ! நம்மில் பலர் – குறிப்பாக கீழை நாடுகளில் – உழைக்கும் தோழர்களை இன்றும் பெருமளவில் சமமாக நடத்துவது இல்லையென்பதே கசப்பான உண்மை. பொதுவாக, நன்கு படித்து உலகம் “ஒய்ட் காலர்ட்” (White Collared) என்று குறிப்பிடும் மேல்தட்டு வேலைகளில் இருப்பவர்கள் உயர்வு என்றும், படிப்பறிவு தவிர்த்து உடலுழைப்பை முன்னிறுத்தி வாழ்க்கை நடத்தி “ப்ளூ காலர்ட்” (Blue Collared) என்று குறிப்பிடப்படும் தொழில்கள் புரியும் உழைப்பாளிகளைச் சற்றுத் தாழ்வு என்றும் கருதுவதே […]
அழியும் மானுடம்
உயிரினம் அனைத்தும் ஒப்பிட்டு நோக்கின்
உயரினம் எம்மினமென ஓலமிடும் மானிடா!
தன்னினம் அழித்துத் தரித்திரம் சமைக்கும்
தனியினம் மனிதயினம் மட்டும் தானடா!
பழிக்குப் பழியெனப் பகைதனைத் தீர்த்து
பசியாறிப் புசித்திடும் முரட்டுக் கூட்டமடா!
விழிக்கு விழியென வீம்புடன் வாழ்ந்து
விடியலைத் தேடிடும் குருட்டுக் கும்பலடா!
பழமொழிகளும் மரபுத் தொடர்களும்
மொழி என்பது ஒரு சமூகத்தின் பண்பாட்டு நெறிமுறைகளைப் பிரதிபலிக்கும் இயல்புடையது. தலைமுறை தலைமுறையாக இயற்கையுடன் பின்னிப் பிணைந்த நிலையில் அன்றாட வாழ்வில் சாதாரணமாகப் பேசப்படும் அனுபவ மொழிகளின் தொகுப்பினை நாம் பழமொழிகள் என்று அழைக்கிறோம். அதுபோல தொன்று தொட்டு மரபு பிறழாமல் ஒரு பண்பாட்டினரின் நடைமுறை வாழ்வியலில் உள்ள சொற்களின் திரட்சியை மரபுத் தொடர்கள் என்கிறோம். சிலர் இவை இரண்டுக்குமான வேறுபாட்டை உணரத் தவறுகின்றனர். சிலரோ பழமொழிகள் மற்றும் மரபுத் தொடர்கள் என்பன வழக்கிழந்துவிட்ட மொழிகள், எனவே […]
சர்வம் தண்ணீர் ம(மா)யம்
இந்தத் தலைப்பைப் பார்த்துட்டு நான் ஏதோ பஞ்சபூத தலங்களில் நீருக்கு உரிய தலமான திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஜம்பு லிங்கம் என்கின்ற அப்புலிங்க சுவாமியைப் பற்றி எழுதப்போறேன்னு நெனச்சா அது என் தவறல்ல. நான் சொல்லப்போவது ஒன்றும் புதிதல்ல. இது எங்க பாட்டன் G.T நாயுடு காலத்திலேயே கண்டுப்பிடிக்கப் பட்டதுதான். ஆனா இப்ப சமீப காலமாப் பார்த்தீங்கன்னா, ஜப்பான்ல அடுப்பில்லாமல் போண்டா சுட்டதாகவும் ,பாக்கிஸ்தான்ல பருப்பில்லாமல் சாம்பார் வச்சதாகவும் பீத்திக்கிறாங்க. அதாங்க தண்ணீர்ல தேர் (CAR) […]
காணாமல் போன வாழ்வு
இன்றைய மாலைப் பொழுதில்
விசாரணைக்கென வந்திருந்த
இராணுவ அதிகாரியின்
அதட்டல் நிறைந்த விசாரணையில்
நான் ஆடிப்போய் விட்டேன்
வழமை போலன்றி
தமிழனென்று சொல்லடா – கவிமணி
”தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என்ற பாரதியின் வரிகளைப் பின்பற்றி, நம்மைத் தலை நிமிர்ந்து வாழவைத்த இன்னொரு தமிழ்ப் பெருந்தகை கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையாகும். பாட்டுக் கொருபுலவன் பாரதியடா! – அவன் பாட்டைப் பண்ணோடொருவன் பாடினானடா! கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா! – அந்தக் கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா! சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமேயடா! – கவி துள்ளும் மறியைப்போலத் துள்ளுமேயடா ! கல்லும் கனிந்துகனி யாகுமேயடா ! – பசுங் கன்றும் பால் உண்டிடாது கேட்குமேயடா! […]
கடவுளுமில்லை… கர்மமுமில்லை..
‘கடவுள் இல்லைன்னு இப்ப சொல்லு பாக்கலாம் ..’ அவன் பேசிய பாஷை புரியாவிடினும் இதைத்தான் சொல்கிறான் என்று ஊகிப்பதற்குள், கைத்துப்பாக்கியின் பின்புறத்தால் தலையைக் குறி வைத்து அடித்தான் அவன். அவனது கை பின்னுக்குப் போன வேகத்தில் முகத்தை லேசாகத் திருப்பினார் தீனா. தலையைக் குறி வைத்த அந்த அடி சற்றுக் கீழிறங்கி நெற்றிப் பொட்டுக்கும் கண்ணுக்கும் இடையில் கிழித்துக் கொண்டு சென்றது. இருட்டிக் கொண்டு வந்தது தீனாவுக்கு. ஏதோ சொல்ல முனைவது தெரிந்தது. முடியவில்லை அவரால். கையால் […]
வசீகர வஞ்சி
கன்னல் மொழி பேசும் காரிகை
கவிஞன் எழுதிடப் பிறக்கும் பேருவகை
கரும்பென இனித்திருக்கும் அவள் இடை
கைதேர்ந்த ஓவியன் காமுறும் தூரிகை
வாய்திறந்து பேசிட உதிர்ந்திடும் நன்முத்து







