admin
admin's Latest Posts
மாற்றமே உலக நியதி
அதிகாலை மணி நான்கு. திடீரென்று யாரோ உசுப்பியது போல எழுந்தார் சதானந்தன். ஒரு விநாடியில் முழுவதுமாக விழித்தும் விட்டார். இனம் புரியாத ஒரு சங்கடம் அவர் மனதில் உருவானது. அது என்னவென்று புரியவில்லை. சிறிது நேரம் கண் மூடி உறக்கம் செய்ய முயற்சித்தார். பலன் இல்லை. அருகில் வித்யா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். சிறிது நேரம் அவளைப் பார்த்தபடி அமைதியாகப் படுத்திருந்தார். உடல், மனம் இரண்டும் உறங்க மறுத்தது. இன்று அவர் வாழ்வின் முக்கியமான நாள். அவரது […]
பெண்ணின் பெருந்தக்க யாவுள
யாரோ தன் அறைக் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டு ,தூக்கம் கலைந்து , கண்களை மெல்லியதாய்த் திறந்தாள் காவ்யா. வார்டு பாய் வந்து பாலும் ரொட்டியும் வைத்துவிட்டுச் சென்றான். மெல்ல கட்டிலில் இருந்து எழுந்து ,தாங்கித் தாங்கி நடந்து சென்று முகம் கழுவி மீண்டும் வந்து கட்டிலில் அமர்ந்தாள் . இரவு நன்றாக மழை பெய்திருக்க வேண்டும். ஆஸ்பத்திரியின் மெல்லிய திரைச்சீலைகள் விலகி, கொஞ்சம் குளிர்ந்த காற்றைத் தந்தது. சூடான பாலைக் குடித்தபடியே திரைச் சீலைகளை ஒதுக்கியபடி […]
பொய்க்கால் குதிரை ஆட்டம்
கடந்த வருடம் அலுவலகப் பணி காரணமாக தமிழகத்திற்கு பயணப்பட வேண்டி இருந்தது. அமெரிக்காவிலிருக்கும் எங்கள் கணிப்பொறிக் குழுவின் தலைவரிடம் பேசிப் பாண்டியர்களின் தலைநகராக விளங்கிய, மல்லிகைக்குப் பெயர் பெற்ற, தூங்கா நகர் என்று புகழ் பெற்ற, தமிழிற்குச் சங்கம் வைத்து வளர்த்த, நான் பிறந்த (இது முக்கியம்) பெருமைமிகு ஊரான மதுரையில் இருந்து பணி செய்யும் ஒரு வாய்ப்பினைப் பெற்றேன். தினமும் கிடைத்த காலை நேர வேளையில் ஏதேனும் ஒரு தமிழர் கலையை நமது ஊரிலேயே பயின்றால் […]
என்னை அறிந்தால்
மாசி 2015 இல் வெளிவந்து, இன்றுவரை உலகெங்கிலும் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் “என்னை அறிந்தால்” திரைப்படத்தை திரையில் பார்த்து இரசித்த எனது சுய அனுபவத்தை, இங்கு பரிமாறிக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். வழமைபோல இங்கும் திரையின் கதையை விவரிக்காமல் அதே நேரத்தில் திரைப்படத்தில் உள்ள குறை நிறைகளை எந்தவித பாரபட்சம் இல்லாமல் எனது சுய கருத்தை, குறிப்பாக இரசித்த காட்சிகளை, இங்கே சுருக்கமாக கூற விரும்புகிறேன். பொதுவாக ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது திரையில் பங்கு பெறும் […]
ஐ பட விமர்சனம்
ஷங்கர் இயக்கத்தில் உருவான, திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிரம்மாண்ட திரைப்படமான ஐ படத்தை திரையில் பார்த்த எனது அனுபவத்தை இங்கு பரிமாறிக் கொள்ள விரும்புகிறேன். “யானை வரும் பின்னே ;மணியோசை கேட்கும் முன்னே” என்பதற்கிணங்க, சங்கரின் திரைப்படமாகிய ஐ வெளிவருவதற்கு முன்பே பரபரப்புகளும் பேட்டிகளும் படக்காட்சிகளும் இணையத்தளத்தில், வலம் வர தொடங்கி விட்டன. இது மேலும் எனது ஆவலைப் பெருமளவில் தூண்டிவிட்டது என்னமோ உண்மைதான். திரைப்படம் வெளிவரும் நாளும், தமிழர் தைப்பொங்கல் நாளும் ஒன்றாக அமைந்துவிட நாட்களை எண்ணத் […]
பிள்ளைகளும் மின்நுகர்கருவி உபயோகங்களும்
முன்குறிப்பு – இந்தக்கட்டுரை பயம், பூச்சாண்டி காட்டுவதற்காக எழுதப்படவில்லை. மாறாக பெற்றோர்களைச் சற்றுத் தட்டியெழுப்பி சிந்திக்க வைக்கவே எழுதப்பட்டுள்ளது. கண் இமைக்கவே காட்டாறு மாதிரி ஓடும் மின்தகவல் நூற்றாண்டில் பிள்ளைகளின் கைத்தொடர்பு சாதனங்களைத் தவிர்ப்பதா? மட்டுப்படுத்துவதா? இது நடைமுறைக்கு நேர்மாறாக அல்லவா இருக்கிறது என்றும் நினைப்போம் நாம். ஆயினும் வளரும் மூளைக்கும் அதி மின்தகவல் நுகர்தலுக்கும் இடையே பிரதி விளைவுள்ள தொடர்புகள் உள்ளன என்கின்றன பத்து வருடங்களிற்கு மேற்பட்ட ஆராய்ச்சிகள். இதற்கான காரணங்களை மருத்துவ, சுகாதாரப் பணியாளர்கள் […]
போண்டா தயாரிக்கும் முறை
1 lb உருளைக்கிழங்கு 1 இருவிரல் பிடியளவு மஞ்சள்தூள் (pinch) ½ தேக்கரண்டி மிளகாய்த்தூள் ½ தேக்கரண்டி உப்பு ½ தேக்கரண்டி சீரகத்தூள் (fennel) 1 தேக்கரண்டி கடுகு போண்டாவின் உள்ளிருக்கும் கலவைக்கு 1 தேக்கரண்டி சமையல் எண்ணெய் 10 நறுக்கிய பச்சை மிளகாய் 1/4 கோப்பையளவு சிறிதாக வெட்டிய சின்ன வெங்காயம் 1 சின்னவிரல் அளவு நறுக்கிய இஞ்சி 1 சிறு கறிவேப்பிலைக் கொத்து போண்டா பொரிக்கத் தோய்த்து எடுக்கும் போண்டா […]
பணயம்
பார்க்கிங்கிற்குள் நுழையும் போது ஏழு இருபத்தி நான்காகிவிட்டிருந்தது. போச்சு. இன்று சரியான நேரத்தில் ட்ரெயினைப் பிடிக்க முடியாதெனத் தோன்றியது சாரிக்கு. வழக்கமாக பிடிக்கும் ட்ரெயினைப் பிடித்தாலே நார்த் ஸ்பிரிங்கிலிருந்து ஏர்போர்ட் போய்ச் சேர ஒரு மணி நேரமாவது ஆகிவிடும். ஏழு இருபத்தியாறை விட்டால் அடுத்த வண்டி ஏழு முப்பத்தி எட்டுக்குத் தான். எல்லாம் அந்த வால்வோ சண்டாளனால் வந்தது. வீட்டை விட்டு சரியான நேரத்துக்குத் தான் கிளம்பினான் சாரி. இத்தனைக்கும் வைஷூ ஸ்கூல் பஸ்ஸுக்கு லேட்டாகி […]
நிதர்சனம்
சரமென பொழிந்த நீர்த்துளி ஓடையில்
சுகித்து மகிழ்ந்து நீராடி ஓய்கையில்
சிப்பியென் இதழோரம் தங்கிய ஓர்துளியை
சிதறாது துடைத்திட ஓர் பணிப்பெண்!
குறுக்கெழுத்துப் புதிர் – உழவுத் தொழில்
22 பயிர்களுக்கு இடையே விளையும் தேவையில்லாத செடிகள் (2) உழவுத் தொழில் புதிர் (Americana) இடமிருந்து வலம் 1. நெற்பயிர் வளர விதைக்கப்படுவது (4) 2. சக்கரை தரும் பொங்கல் பண்டிகையின் அடையாளம் (4) 3. விளை நிலங்களுக்கு இடையேயுள்ள, நடந்து செல்லக்கூடிய மண் தடுப்புகள் (4) 4. விதைத்து, வளர்த்து, அறுப்பதைக் குறிக்கும் சொல் ; மொத்த உழவுத்தொழிலின் குறிக்கோள் (4) 5. மங்கலகரமான நிகழ்ச்சிகளுக்கு முன் நிற்கும் கிழங்கு (4) 7. காளை […]







