admin
admin's Latest Posts
மனையடி மரபுகள்
தமிழர் பண்டைய பிறப்பிடங்களில் குடிமனை கட்டுவதற்கு சான்றோர் பல வரையறைகளைத் தந்துள்ளனர். இவை மக்களின் அடிப்படை நடைமுறைகளை வைத்து அமைந்திருப்பினும் ஒருகாலத்தில் கடவுளர் வழிப்பாட்டைக் கொண்டு அமைந்தது என்றும் விளக்கம் தரப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையில் நாம் மனையடி மரபுகள் யாவை, முடிந்தளவு அவற்றிற்கான விளக்கங்கள் என்னவென்று பார்ப்போம். தமிழர் வாழ்ந்த இடங்கள் இடைவெப்பப் பிரதேசங்கள், வட அமெரிக்க வாழ்மக்கள் குளிர் பிரதேங்களில் வாழுகின்றனர். எனவே சில வரையறுப்புகளை நேரடியாக உபயோகிக்க முடியாமலும் போகலாம். எனினும் அவற்றின் பொதுவான […]
பொங்கக் காசு
பொங்கலோ பொங்க… பொங்கலோ பொங்க… ஊரு செழிக்க, ஊத்த, மழை பெய்ய.. பொங்கலோ பொங்க… நாடு செழிக்க, நல்ல மழை பெய்ய.. பொங்கலோ பொங்க… தனது கர்ண கொடூரக் குரலுடன் சத்தமாய்ப் பாடிக் கொண்டே, கையிலிருந்த தட்டு ஒன்றில் சிறு குச்சியால் தட்டிக் கொண்டே வீட்டு முற்றத்தில் பொங்கி வழியும் பொங்கல் பானையைச் சுற்றிக் கொண்டு நடந்து சென்றார் ராமச்சந்திர அம்பலம். அவரைப் பின்பற்றி அவரின் மனைவி, மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் மற்றும் முதல் மருமகள், […]
புதுமைப் பதுமை
வழிமீது விழிவைத்துக் காத்திருந்தாள், கன்னல்
மொழிபேசி மனங் கவரும் ஏந்திழையாள்
களிபாடிச் சேர்ந்திருக்கப் பார்த்திருக்கும், சிற்பி
உளிபேசும் சிறப்பான கற்சிலையாய்…
பண்டானா சதுக்கப் புகையிரத நூதனசாலை
மினசோட்டா மாநிலத்தில் பிள்ளைகளும், ஆர்வமிக்க பெற்றோரும் சேர்ந்து மகிழ இயங்கும் மாதிரி உருவகப் புகையிரத நுதனசாலை ஒன்று உண்டு. இவ்விடத்தில் மூன்று தலைமுறைகள் வந்து போவது சகசமான விடயம். பாட்டன், பாட்டி தொட்டு, அப்பா, அம்மா குழந்தைகள் குழுவினர் பலரை அவதானிக்கக் கூடியதாக இருக்கும். இது செயின்பால் (St Paul) நகரில் உள்ள 1880களில் கட்டப் பட்டு மீண்டும் பழமை பேணி மீள் சீரமைக்கப்பட்ட பண்டானா சதுக்கத்தில் (Bandana Square) இரண்டாம் மாடியில் அமைந்துள்ளது. இந்த நூதனச் […]
நீ இங்கு நிஜமானால்…
ஒத்தயில நிக்கும் புள்ள
ஒளிவிளக்கில் ஒளிரும் முல்ல
சித்தமெல்லாம் கலங்கிப் போக – என்
சிந்தையிலே வந்தாய் பெண்ணே
டுவின் சிட்டீஸ் தமிழர் திருவிழா
சனவரி மாதம் 17ம் திகதி சனிக்கிழமை மதியத்திலிருந்து மாலைவரை டுவின்சிட்டீஸ் தமிழ் அசோசியேசன் Twin Cities Tamil Association (TCTA) தைப்பொங்கல் தமிழர் திருவிழாவை தமிழன்பர்களுடன் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சி ரிச் ஃபீல்ட் நடுநிலைப் பள்ளியில் Rich Field Middle School நடைபெற்றது. தமிழர் திருவிழாவில் பள்ளி செல்லும் பாலகர்களிலிருந்து துள்ளி விளையாடும் சிறுவர் சிறுமியர் தொட்டு பெரியவர்கள் வரை யாவரும் மேடையிலும் அவையிலும் பங்குபெற்று சிறப்பு சேர்த்தனர். தமிழர் திருவிழாவானது தமிழ்த்தாய் வாழ்த்தின் பின்னர் திரு […]
சாண்டாலாந்து … (மேசிஸ் கிறிஸ்துமஸ் கோலாகலம்)
சாண்டாலாந்து … (மேசிஸ் கிறிஸ்துமஸ் கோலாகலம்) குளிரும் இருள் சாரலும் அதிகமாகும் மார்கழிப்பனியிலே யாவரையும் குழந்தைகளாக்கி மனதார அனுபவிக்க வைக்கும் ஒளி மயமான கோலாகலமே மினசோட்டா மாநில மேசிஸ் அலங்காரம். இம்முறை சாண்டாவின் உதவியாளர்களாகிய எல்வ்ஸ் எனும் கற்பனை மனிதர்களின் வாழ்க்கை அடிப்படையில் அலங்காரக் கண்காட்சி அமைக்கபெற்றது. இதற்காக சாண்டா, அவரது பாரியார், மேலும் 76 எல்வ்ஸ்களின் அசையும் உருவகங்கள் அமைக்கப்பட்டதாம். மினியோப்பொலிஸ் நகரி்ல் 52 வருடங்களாக டெயிட்டன் மார்ஷல் ஃபீல்ட் தாபனங்கள் (தற்போதைய மேஸிஸ் நிறுவனம்) […]
என் காதலி
தூரிகையில் தோன்றிய தேவதையே!
சிலர் காதலிக்க கவிதை எழுதுவர்!
சிலர் காதலித்து கவிதை எழுதுவர்!
நான் கவிதை எழுத உனைக் காதலித்தேன்!!!
யோகியின் சித்ததில் உதித்து
கணினியில் வளர்ந்தவளே!
கனை எடுத்து உனை வெல்லேன்!
என் கவி கொண்டு உனைக் கொள்வேன்!!!
உறைபனியில் மீன் பிடித்தல்
அமெரிக்காவிலுள்ள மினசோட்டா மாகாணம், மற்றும் கனடாவிலுள்ள ஒன்டாரியோ மாகாணங்களில் வாழும் மக்கள் பனிக்காலத்தில் பல்லாயிரம் ஏரிகள், ஆறுகளில் இந்நாட்டு மக்கள் பலர் உல்லாசமாகப் பனிக் கொட்டில் (icehouse/tent) கட்டி மீன் பிடிப்பதைப் பார்த்திருப்போம். உஷ்ணப் பிரதேசத்தில் இருந்து வந்த மக்களாகிய எமக்கு உறைபனியில் குளத்திற்கு நடுவில் போவது பாதுகாப்பானதா என்றும் தோன்றும். ஆயினும் வடஅமெரிக்க மாநிலங்கள், மாகாணங்கள் உறைபனியை அதிகம் பெறுவதால் இவ்விடம் வாழும் மக்கள் நீர் உறையும் தட்ப வெப்பங்களை அறிந்து, உறைபனிப் பருமனையும், மற்றைய […]
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-10
விசாச் சிக்கல் புலம்பெயர்ந்து உலகெங்கும் வாழும் தமிழர்களில் பலர் தாம் சென்று குடியேறிய நாடுகளில் தங்குவதற்கான சட்டரீதியிலான அனுமதிப் பத்திரம் (எளைய) இன்றியே பயணங்களை மேற்கொண்டிருந்தனர். இதனால் அந்தந்த நாட்டிற்குரிய சட்டங்களின்படி புலம்பெயர்ந்து சென்ற பலர் நாடு கடத்தப்பட்டனர். வேறு சிலர் சிறை வைக்கப்பட்டனர். பலர் அபராதத் தொகையுடன் அனுமதிக்கப் பட்டனர். இன்னும் பலர் அகதி முகாம்களில் அடைக்கப்பட்டனர். தாம் எண்ணி வந்த எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றங்களாகிப் போக, புலம்பெயர்ந்த நாடுகளிலும் இவர்களுக்கான சுதந்திரம் மறுக்கப்பட தமது எதிர்காலக் […]







