admin
admin's Latest Posts
உலகச் செம்மொழி – அத்தியாயம் 15
அத்தியாயம் 14 செல்ல இங்கே சொடுக்கவும் மனோன்மணியம் சுந்தரனார் எழுதியது போன்று பல மொழிகள் தமிழில் இருந்து தோன்றின அவற்றில் கடைசியாக தோன்றிய மொழி மலையாளம். இதை ஒத்துக்கொள்ள சிலர் தயங்கினாலும் பெரும்பான்மையானோர் ஒத்துக்கொள்கிறார்கள். திராவிட மொழி வரலாற்றை முதன் முதலில் ஆராய்ந்த அறிஞர் கால்டுவெல் அவர்கள் மலையாளம் தமிழின் ஒரு பிரிவு என அபிப்ராயம் தெரிவித்தார். ஏ.ஆர்.ராஜராஜவர்மாவின் கருத்தின்படி, மலைநாட்டிலே பேசப்பட்டு வந்த தமிழே சம்ஸ்கிருதத்தின் தாக்கத்தினால் மலையாள மொழியானது என்ற கருத்தைத் தெரிவிக்கின்றார். இன்றும் […]
ஓட்டம்
கருவறை முதல் கல்லறை வரை ஒரு பெரு ஓட்டம் நடு நடுவே சிற்சில சில்லறை ஓட்டங்கள் பத்து மாதத்தில் உலகைத் தொட்டுவிட ஒரு ஓட்டம் பிறந்த எட்டு மாதத்தில் அடி எடுத்துவைக்க மறு ஒட்டம் இரட்டை வயதிற்குள் மழலையைக் கொட்டிவிட குட்டி ஒட்டம் பால்குடி மாறா வயதில் பால்வாடிக்கு ஒரு குறு ஓட்டம் பள்ளிக்கு சித்தம் கலங்கிட நித்தம் ஒரு ஓட்டம் கன்னியரும் காளையரும் கரைகாணா பேரின்ப பெரு ஓட்டம் நிலையில்லா மாந்தர்க்கு நிலையான ஆஸ்திக்கு நிகரில்லா […]
மின்னேசோட்டா பள்ளிக்கு கிடைத்த அங்கீகாரம்
மின்னேசோட்டா தமிழ்ச்சங்கப் பள்ளிக்கு கிடைத்த அங்கீகாரம் அட்வான்செட் (Advanced) எனப்படும் கல்விக்கான மிக உயரிய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் மினசோட்டா தமிழ்ப்பள்ளிக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு முழு பரிந்துரையை அண்மையில் வழங்கியிருக்கிறது. அட்வான்செட் (www.advanc-ed.org) எனும் இந்நிறுவனம் கல்வி நிலையங்களின் ஆற்றலைப் பல பரிமாணங்களில் ஆய்வு செய்து தரச் சான்றிதழ் வழங்கும் உலகளாவிய நிறுவனம் ஆகும். இதுவரையில் இந்நிறுவனம் உலகம் முழுதும், ஏறக்குறைய 20 மில்லியன் மாணாக்கர் பயிலும், 32,000 கல்வி நிலையங்களுக்கு அங்கீகாரம் வழங்கி இருக்கிறது. அமெரிக்க நாட்டின் […]
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-9
தகுதிக்கேற்ற தொழிலின்மை தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் நிற-இன ரீதியிலான வேறுபாடுகள் அதிகளவில் உணரப்பட்டன. தாயகத்தில் ஓரளவு படித்த பலரும் புலம்பெயர்ந்து சென்று தமது அந்தஸ்து, தகுதியை விடுத்து அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தின் காரணமாக எந்த வேலையினையும் செய்யத் துணிந்தார்கள். புதிய இடம், அந்நிய மொழியறிவு இன்மை போன்றனவும் புகலிடத் தமிழர்களை மிகவும் பாதித்தது. “தகுதி வேலை ஊதியம் சமன்பாடு குழம்பிய நிலையில் இன்னுமொரு முதலாளித்துவத் தெருவில் நான் ஒரு பிராங்கெனினும் என் […]
இயக்குனர் சிகரத்தின் இறுதிப் பயணம்
தமிழ்த் திரையுலகின் இயக்குனர் சிகரம் திரு. கே. பாலச்சந்தர் கடந்த செவ்வாய், டிசம்பர் 23ம் தேதி காலமானார். கைலாசம் பாலச்சந்தர் 1930 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஒன்பதாம் தேதி தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நன்னிலத்தில் பிறந்தவர். அறிவியலில் விலங்கியல் துறையில் பட்டம் பெற்று ஏ.ஜி.ஸ் (அக்கவுண்டன்ட் ஜெனரல்) அலுவலகத்தில் எழுத்தராக பணி புரிந்து வந்தார். இங்கு அலுவலக நண்பர்களுடன் சேர்ந்து நாடகங்கள் எழுதி, நடித்து அரங்கேற்றி வந்திருக்கிறார். ‘எதிர் நீச்சல்’, ‘நாணல்’, ‘மேஜர் சந்திரகாந்த்’ போன்ற […]
சிவாஜி என்றொரு சிம்மம்
கம்பீரத் தோற்றம், கண்ணியத் தோரணை, கர்வம் கொண்ட கூரிய பார்வை இவற்றின் அடையாளம் ‘சிவாஜி கணேசன்’ என்ற ஏழு எழுத்துக்கள். வி.சி. கணேசன் என்ற துடிப்பான இளைஞன் தனது நடிப்பாற்றலின் திறனால், உலகமெங்கும் வியாபித்திருக்கும் தமிழரின் மனங்களில், செதுக்கிய எழுத்துக்கள். தஞ்சை மாவட்டத்தில் உள்ள வேட்டைத்திடல் கிராமத்தைச் சேர்ந்த சின்னையா மன்றாயர், ராஜாமணி ஆகியோருக்கு பிறந்தவர் கணேசமூர்த்தி. வேட்டைத்திடல் சின்னையா கணேசமூர்த்தி என்பதே பின்னர் வி.சி. கணேசன் என்றானது. ராஜாமணி அம்மையார் விழுப்புரத்திலிருந்த தனது தந்தை வீட்டில் […]
பார்த்ததில் ரசித்தது
”சிவாஜிக்கும் எம்.ஜி.ஆருக்கும் சண்டை வச்சா, ஆரு செயிப்பாக?” – எனக்கும் என் நெருங்கிய நண்பன் வெங்கடேசனுக்கும் சிறு வயதில் அடிக்கடி வரும் தகராறு இதுவே. நாங்களிருவரும் அவ்வளவு ஒற்றுமையான நண்பர்கள், ஆனால் இந்த விஷயத்தில் மட்டும் இருவரும் கீரியும் பாம்பும் போலச் சண்டை போடுமளவுக்கு விரோதிகள். மிகத் தீவிரமான எம்.ஜி.ஆர் ரசிகன் அவன். நான் சிவாஜி கணேசனென்றால் உயிர் கொடுக்கவும் தயார்.. ”எம்.ஜி.ஆர் மாதிரி கத்திச் சண்டை போடமுடியுமாடா சிவாஜியால?” பொதுவாக என் தீர்ப்பு அனைத்தையும் மறு […]







