\n"; } ?>
Top Ad
banner ad

admin

rss feed

admin's Latest Posts

ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-6

ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-6

(பகுதி 5) புதிய காலநிலை புலம்பெயர்ந்த நாடுகளின் வேறுபட்ட காலநிலை, புவியியல் தரைத்தோற்றம், சுற்றாடல் என்பன எமது தேசத்தில் இருந்து சென்றவர்களைப் பெரிதும் பாதித்துள்ளன என்பதை அவர்களின் கவிதைகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. புதிய இடம், குளிர் சூழ்ந்த காலநிலை என்பன ஒருங்கு சேர்ந்து அவர்களை மிகவும் பாதித்துள்ளன. “இரவுகள் துயில்கொள்ளா!” என்ற கவிதையில் நார்வே நாட்டின் நீண்ட இரவு கவிஞருக்குப் புதிய அனுபவத்தைத் தருவதாகவும் இருள் சூழ்ந்த அகதி வாழ்வுக்கு அர்த்தம் சொல்வதாகவும் அமைகின்றது. […]

Continue Reading »

முத்தான பழைய திரைப்படங்கள் மற்றும் குறும் படங்கள் – 2

முத்தான பழைய திரைப்படங்கள் மற்றும் குறும் படங்கள் – 2

பன்னிரெண்டு கோபக்கார மனிதர்கள்(12 Angry Men) இந்த இதழில்  பன்னிரெண்டு கோபக்கார மனிதர்கள் (12 angry men) என்ற நாடக வகையைச்  சேர்ந்த ஆங்கிலத்  திரைப்படத்தைப்  பற்றி பார்ப்போம். இந்த திரைப்படம்  யுனைட்டட் ஆர்ட்டிஸ்ட்ஸ் என்ற நிறுவனத்தினரால்   ஏப்ரல் 04 1957ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதை தயாரித்தவர்கள ஹென்றி ஃபொண்டா மற்றும் ரெஜினால்ட் ரோஸ். போன அத்தியாயத்தில்  நாம நிலாவிற்கு சென்று வந்த கதையைப் பார்த்தோம். இந்த படம் ஒரே அறைக்குள்  நடக்கின்ற கதை. இயக்குநர் பாசு […]

Continue Reading »

வயற்காற்று (பாகம் – 02)

Filed in இலக்கியம், கதை by on May 7, 2014 0 Comments
வயற்காற்று (பாகம் – 02)

வயற்காற்று (பாகம் – 01) காற்றில் மிதக்கவிட்ட இலவம் பஞ்சாகி மெல்லிய மேகங்கள் மிதந்துகொண்டிருந்தன. அன்று பழுத்த கொவ்வைப் பழம் போல ஓடிச் சிவந்தது வெட்கத்தால் சுரபியின் கன்னங்கள். “பெரிய சொற்பொழிவு ஆற்றிவிட்டாயத்தான் உனக்கு தேத்தண்ணி வைச்சுக் கொண்டு வரட்டோ… அல்லது கள்ளு கிள்ளு ஏதேனும்…” “விளையாட்டில்லை சுரபி எல்லாம் மெய்…” “ம்…ம்…ஆனால் எது உண்மை எது பொய் எண்டு ஒரு தெளிவில்லாமல் என்ரை மனம் குழம்புதே” “இதிலை குழம்பிறத்துக்கு என்ன இருக்கிது… எனக்கெண்டால் ஒண்டும் தெரியலை…” […]

Continue Reading »

உமா மகேஸ்வரி

உமா மகேஸ்வரி

சங்கமம் 2014 தெருக்கூத்து நிகழ்சியின் அணிகலன்கள் வடிவமைப்பாளரும் ஒப்பனையாளருமான திருமதி உமாமகேஸ்வரி அவர்களை மின் அஞ்சல் மூலமாக ஒரு பேட்டி கண்டோம்.அவர்  வடிவமைத்திருந்த அணிகலன்கள் மற்றும் ஒபனைகள்,  நிகழ்சியை கண்டுகளித்த அனைவரது பாராட்டையும் பெற்றது. 1.      உங்களைப் பற்றியும் உங்கள் ஊர், குடும்பம் மற்றும் வளர்ந்த சூழல் பற்றி எங்கள் பனிப்பூக்கள் வாசகர்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்? என் பெயர் உமாமகேஸ்வரி . எனது ஊர் மதுரை. எனக்கு மூன்று அண்ணன்மார்கள் உள்ளனர். எங்களுக்கு ஒரு மகன் (13 வயது) […]

Continue Reading »

மினசோட்டாவில்  ஆன்மீகம்  

மினசோட்டாவில்  ஆன்மீகம்  

வரலாறு தெரிந்தவரை  மனிதன் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவனாகவே இருந்திருக்கிறான்.  உலக நாடுகளில் மக்கள் பல்வேறு கடவுளரை வழிப்பட்டுத் தங்களது ஆன்மீக உணர்வை வெளிப்படுத்துகிறார்கள். அடிப்படையாக நமக்கு மேலே ஒருவன் நம்மைக் காப்பாற்றுகிறான் எனும் நம்பிக்கை பெரும்பாலான மக்களிடையே உண்டு. வானத்தில் பறந்து வாடிகன் (Vatican) போனாலும் , கால் வலிக்க நடந்து கைலாயம் சென்றாலும் இறைவனை வணங்கும்பொழுது இருகண்கள் மூடி பார்வை உள்நோக்கி இருகரம் கூப்பி வழிபடுவதில் உள்ள ஒற்றுமை  விந்தை தான். மனிதனுக்கு வலி பிறக்கையில் […]

Continue Reading »

யாழ் தமிழ் – சென்னைத் தமிழ் (பாகம் – 2)

யாழ் தமிழ் – சென்னைத் தமிழ் (பாகம் – 2)

ஈழத்திலும் தமிழ் நாட்டிலும் பேசப்படும் மொழி தமிழாக இருப்பினும் இரண்டுக்கும் இடையில் பெரியளவிலான உச்சரிப்பு வேறுபாட்டினை அவதானிக்கலாம். ஈழத்திலும் பிரதேசத்துக்குப் பிரதேசம் இந்த மாறுதல் உள்ளது. அதேபோல் தமிழகத்திலும் உண்டு. ஆனால் ஈழத் தமிழுக்கும் தமிழகத் தமிழுக்கும் இடையில் பல சொற்கள் வேறுபட்டு வழங்கக் காணலாம். எனக்கு நன்கு பரிச்சயமான யாழ்ப்பாணத் தமிழுக்கும், சென்னையில் வசித்த காலத்தில் பேசிய சென்னைத் தமிழுக்கும் இடையிலான சில சொல் வேறுபாடுகளைப் புரிதல் விரும்பி இங்கு பதிவிலிடுகிறேன். ”மொழி என்பது ஒன்றை […]

Continue Reading »

உலகச் செம்மொழி – அத்தியாயம் 12

உலகச் செம்மொழி – அத்தியாயம் 12

அத்தியாயம் 11 செல்ல இங்கே சொடுக்கவும்   “லாந்து” என்ற வார்த்தையின் பொருள் உலவுதல். ஒரு செயல் நடந்த இடத்தை அந்த செயலோடு தொடர்பு படுத்திச் சொல்வது நம் தமிழ் மரபு. உதாரணமாக போர் நடந்த இடங்களைப்  போரூர் என்றும், மன்னர்கள்  அல்லது பெரும் வீரர்கள் போர்களில் வீரமரணம் அடைந்த ஊர்களின் பெயரில் “பட்டு”(பட்டுப் போகுதல்) என்ற  சொல் இணைந்திருப்பதையும்  காணலாம். தாய்லாந்து மக்கள் சுதந்திரமாய் உலவிய இடம் தான் தாய்லாந்து எனப் பெயர் பெற்றிருக்க வேண்டும். […]

Continue Reading »

அம்பேத்கர்

அம்பேத்கர்

வரலாற்றை உற்று நோக்கினால், நாட்டுக்காகத் தன்னலமற்று பணியாற்றிய எத்தனையோ தலைவர்கள், வேறுபட்ட கருத்தைக் கொண்டிருந்த ஒரே காரணத்தினால் வெளிச்சத்துக்கு வராமல் போய்விட்டனர். பரந்த சமுதாயப் பார்வையும், மனிதநேயமும், ஆழமான அறிவாற்றலும் கொண்டிருந்த அம்பேத்கரின் நிலையும் அதுதான். இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சாசனத்தை உருவாக்கியவர் என்ற அளவில் மட்டுமே அறியப்படும் அம்பேத்கரின் பன்முகத் திறன் வியக்கத்தக்கது. மத்தியப்பிரதேச மாநிலம் அம்பாவாதே எனும் ஊரில் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி, ராம்ஜி சக்பால்-பீமாபாய் ஆகியோருக்கு பதினாலாவது பிள்ளையாகப் […]

Continue Reading »

அமுதூட்டிய அம்மா

அமுதூட்டிய அம்மா

மூணு வயசுவர நீதந்த தாய்ப்பாலு
மூளையின் மடிப்பிலே மறைஞ்சே போச்சுதடி ,
முப்பது வருஷம் நீபோட்ட சோறு
மூச்சே நின்னாலும் நினைப்பவிட்டு நீங்காதடி .

Continue Reading »

வேற்றுமையில் ஒற்றுமை

வேற்றுமையில் ஒற்றுமை

திருக்குறளின்வழியே “வேற்றுமையில்ஒற்றுமை” “பிறப்பொக்கும்எல்லாஉயிர்க்கும்சிறப்பொவ்வா செய்தொழில்வேற்றுமையான்” ( குறள் 972) திருக்குறள் முன்னுரை: “தித்திக்கும்  தெள்ளமுதாய், திகட்டாததேன்கனியாய், எத்திக்கும்நிறைந்திருக்கும் செந்தமிழ் மாங்கனியின் சுவையினைத் தோண்டத் தோண்டச் சுரக்கும் நீரூற்றைப்போல வள்ளுவன் உரைத்த இரண்டடித் திருக்குறளின் சிறப்பினைப்பற்றிச் சிறிது காண்போம். பெருமை: “யாமறிந்தமொழிகளிலேதமிழ்மொழி போல்இனிதாவதுஎங்கும்காணோம்.” -பாரதியார் – தமிழ்மொழியின் சிறப்பினைப் பற்றிக் கூறிட வார்த்தைகள் போதாது, வாழ்ந்து பார்த்தால் தான் உணர்ந்திட முடியும். அத்தகைய வாழ்வினை சிறப்பாக வாழ்ந்திடவும், வாழ்வின் பொருளுணர்ந்து செயல்படவும் வள்ளுவன் தனது நூலில் இயற்றிய குறள் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad