admin
admin's Latest Posts
தமிழே அமுதம்
மலைகடைந்த மலையமுதம் அருவி தன்னில்
மனங்குளிர மாந்திநின்று குளித்துப் பார்த்தேன்
மலைமுகட்டில் கொம்புத்தேன் அமுதம் மொத்தம்
மலையளவு நான்பருகி சுவைத்து உண்டேன்
மினசோட்டாவில் ஆன்மீகம் – பாகம் 2
பாகம் 1 இந்தியாவில் தோன்றிய மதங்களில் பலரால் பின்பற்றப் பட்டுவரும் மதங்களில் இந்து மதத்தை அடுத்து புத்த மதத்தை சொல்லலாம். மத்திய, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் புத்த மதத்தை பெரும்பான்மையோர் பின்பற்றி வருகிறார்கள். சீனாவில் ஜென் (Zen) புத்த வழியைப் பின்பற்றுகின்றனர். இந்துக்களும் புத்த பகவானை விஷ்ணுவின் அவதாரமாக கொண்டு வணங்கி வருகின்றனர். மிகப்பெரிய புத்த சிலைகள் கொண்ட கோயில் எல்லாப் பெரிய நகரங்களிலும் உள்ளது. புத்த மதத்தின் ஈர்ப்பு உலகம் முழுவதும் காணப்படுகிறது. மினசோட்டா மாகாணமும் […]
உறைபனியில் ஒரு வசந்தம்
‘உன்னுடைய ரகசியங்களைக் காற்றிடம் சொல்! ஆனால் அவற்றை மரங்களிடம் சொன்னதற்காகப் பழிக்காதே!’ -கல்கி பிரான் டிசம்பர் மாத இறுதி. அடுத்தவாரம் கிறிஸ்துமஸ். நகரமே வண்ண வண்ண விளக்கு ஒளியில் திருவிழாக்கோலம் பூண்டிருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாகத் தீவிரமான உறைபனிப் பொழிவு. கூடை நிறையக் காகிதத் துணுக்குகளை மேலேயிருந்து கொட்டுவது போல நிதானமாக விழுந்து கொண்டிருக்கிறது. அமைதியாக, நிதானமாக வீட்டின் கூரை, மரங்கள், செடிகள், புல்தரைகள் என்று வேறுபாடில்லாத பனிப் பொழிவு. இலையுதிர் காலத்தில் இலைகள் அத்தனையும் உதிர்ந்து […]
நல் நுண்ணுயிர்களும் (Pro-Biotics) நாணயமான தமிழ் உணவுகளும்
பாக்டீரியா (Bacteria) எனப்படும் நுண்ணுயிரி என்ற சொல்லைக் கேட்டவுடனே சாதாரணமாக நமது மனதில் தோன்றுவது என்ன? அது ஒரு கிருமி, எனவே தொற்றாமல் உடன் விலக்கிக் கொள்ள வேண்டும் என்பதே. இதை வழிவகுத்தது சென்ற நூற்றாண்டுச் சுகாதாரக் கல்வி. சராசரி மக்களின் கண்ணோட்டத்தை அவதானித்தால் இது இலகுவில் தெளிவாகும். தமிழர் தாயகங்களில் வெளிவரும் விளம்பரத் தகவல்களை எடுத்துப் பார்த்தாலும் பொதுவாக இம்மனோநிலையே தொடர்ந்தும் பேணப்படுகிறது எனலாம். இன்றும் கிருமிகளை அழிக்க டெட்டால், ஃபினைல், லைசால் போன்ற விளம்பரங்கள் […]
எசப்பாட்டு – உயிர்
அன்னையின் தயவாலே அகிலத்தில் வந்துதித்து
முன்வினைப் பயனாலே முழுதான வாழ்வுபெற்று
தன்வினைச் செயலாலே தரைமீது இன்னலுற்று
நல்வினை எதுவென்றே நயமாக உணரமுனைந்து
முப்பரிமாண அச்சுக்கலை
“ஆண்ட்டி … ராகுல் இல்லையா?” “வாடா .. அவன் வீட்ல இல்லையே …” “எங்க போயிருக்கான்?” “அவனுக்குப் போன மாசம் மோட்டார் சைக்கிள் ஆக்சிடெண்ட்ல காது துண்டாகி விழுந்துடுச்சி இல்ல? அதுக்கு ரீப்ளேஸ்மெண்ட் ஆர்டர் செஞ்சிருந்தான் .. அது ரெடியாயிடுச்சின்னு இன்னைக்குக் காலைல ஃபோன் பண்ணியிருந்தாங்க … அதான் போய் ஃபிக்ஸ் பண்ணிட்டு வரப் போயிருக்கான் ..” “அப்படியா .. எங்க ஆர்டர் பண்ணியிருந்தான்? “ “இங்க தான் செயின்ட். பிரான்சிஸ்ல …” “அய்யோ அங்க ஏன் […]
முதுமை
காலையில் முன்னெழுந்து கடவுளரைத் துதிபாடி
கால்நடுங்க நடைநடந்தே கடைத்தெரு வந்தவரின்
காட்சியினை நான்காண கண்களது குளமாகும்
காரணம் தேடுகின்றேன், கணக்கெதுவும் விளங்கவில்லை!!
தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டாடை சுற்றி முத்தும் பவளமும் பூண்டோடி ஆடி முடிந்த பின்பு செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனிச் சாம் பிணங்கள் கத்தும் கணக்கென்ன காண் கயிலா புரிக் காளத்தியே!!! பொட்டிலடித்தாற் போன்றதொரு தத்துவ விளக்கம் நான்கு வரிகளிலே. செத்துக் கிடக்கும் இன்றைய பிணத்தருகே, நாளை சாகப் போகும் இன்னொரு பிணம் அழுகிறதாம். மனித வாழ்வு நிலையற்றது என்ற தத்துவத்தை இதைவிட அழகாகவும், எளிதாகவும், சுவையுடனும் கூறிய ஒப்புயர்வற்ற தமிழ்க் கவி, சித்தர் பட்டிணத்துப் […]







