admin
admin's Latest Posts
இந்திரா காந்தி
ஆணாதிக்க மனப்பாங்கு கொண்டஇந்தியாவில் வலுவான அதிகார பலத்துடன் மிகவும் உயர்ந்த பதவியிலமர்ந்து நாட்டை ஆண்ட முதல் இந்தியப் பெண்மணி இந்திரா காந்தி. 1917ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள், ஜவஹர்லால் நேருவுக்கும் , கமலா நேருவுக்கும் மகளாகப் பிறந்தவர் இந்திரா பிரியதர்சினி நேரு. அவர் பிறந்த கட்டத்தில் அவரது தாத்தாவும், தந்தையும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். தனது நோயுற்ற தாயின் பராமரிப்பிலேயே வளர்ந்தார் இந்திரா. காவலதிகாரிகள் நேரு சிறையிலிருந்த காலத்தில் அவரது வீட்டுக்குள் நுழைந்து […]
சமுதாயத்தில் பெண்களின் நிலை
ஒரு நாட்டினுடைய வளர்ச்சியை, அந்த நாட்டினுடைய பொருளாதார முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் கல்வி அறிவு இவைகளே நிர்ணயிக்கின்றன. இவற்றில் பெரும்பங்கு பெண்களையே சாரும். ஏனெனில் பெண்களின் கல்வியறிவு அவர்தம் குடும்பத்தின் வளர்ச்சி மட்டுமல்லாமல் நாட்டின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். பெண்களுக்கு என்று பாதுகாப்பின்மை, மற்றும் கல்வியறிவு இல்லாத நிலை மட்டுமே அவர்களின் வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும் காரணிகள். இந்தியாவில் மட்டும் பெண்களின் கல்வியறிவு என்பது கைக்கு எட்டாத கனியாகவே இருக்கிறது. ஏனென்றால் நம் இந்திய தேசம் பெரும்பாலும் கிராமப்புறங்களால் […]
ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி 2
புலம்பெயர்ந்தோர் கவிதைகளின் வடிவம் (பகுதி 1) கற்பனையாலும் உணர்ச்சியாலும் உந்தப்பட்டுக் கவிதைகள் பிறக்கின்றன. உலக மொழிகள் எல்லாவற்றிலும் கவிதைகள் உண்டு. கவிதைக்கு மூல காரணமாகக் கற்பனை அமைகின்றது. கற்பனை பொங்கிப் பிரவாகித்து முட்டி மோதுகின்ற போது அதனை வடிவமாக வெளிக்காட்டி கவிதை என்ற பெயர் சூட்டி அழகு பார்க்க மொழி துணை செய்கின்றது. மனிதர்கள் எல்லோருமே கற்பனையில் சிறந்தவர்கள். ஆனால் எல்லோரும் கவிதை எழுதுவோரல்லர். அதேபோல் கற்பனையுடன் எழுதப்படுபவை எல்லாமே கவிதை ஆகிவிடுவதுமில்லை. கவிதைக்கு உடல், உள்ளம், […]
காதலும் காமமும்
காதல்
கட்டிய சேலை சற்றே விலகினால்
காதில் சொல்லித் திருத்தச் செய்யும்!
காமம்
கண்ணில் கண்ட பெண்களை எல்லாம்
காந்தர்வமாய் துகில் உரிந்து மெல்லும்!
ஆதிவாசி அமெரிக்க வாச்சீப்பி ஒன்றுகூடல்
மினசோட்டா மாநிலத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழும் ஆதிவாசிகள் தாம் லக்கோட்டா மக்கள். எமது மாநிலத்தில் பல ஆதி மக்கள் ஒன்று கூடல்கள் நடைபெறுகின்றன. எனினும் வருடா வருடம் எமக்குப் பக்கத்தில் வைச்சிப்பி நடன ஒன்று கூடல் ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் வரும் வெள்ளி தொடங்கி சனி மற்றும் ஞாயிறுகளில் நடைபெறுகிறது. இம்முறை சாக்கப்பீ மிடேவாக்கட்டன் சூ ஆதிவாசிகள் சமூகம் ஆகஸ்ட் 16,17 மற்றும் 18 ஆம் திகதிகளில் தமது மைதானத்தில் வாசீப்பியைக் கொண்டாடியது. வாச்சீப்பி என்றால் என்ன? […]
மினியா போலிசு குளிர் – ஈரோடு தமிழன்பன்
சூரியன் ஈரத்தில் சொதசொதத்து
ஊருக்குள் நுழைகிறான்
பறவைகளின் கனவுகளுக்குள்ளோ
பாடல்களுக்குள்ளோ
வெப்பமான ஓரிடம் கிடைக்குமோ?







