admin
admin's Latest Posts
காஞ்சிபுரம்
தமிழ் கூறும் நல்லுலகில் காஞ்சி ஒரு பழமையான நகரம். கல்வியில் சிறந்ததோர் காஞ்சி என்னும் வழக்குச் சொல்லிலிருந்தே இந்நகரின் பெருமை புரியும். காஞ்சி என்ற சொல்லிற்கு அணிகலன் என்று பொருள் கொள்வர். முற்காலத்தில் இவ்வூர் கச்சி அல்லது கச்சிப்பேடு என்று அழைக்கப்பட்டுள்ளது. இதற்கு ”பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே !” போன்ற வரிகளே சாட்சி. நகர நாகரிகங்கள் எப்பொழுதுமே ஆற்றங்கரையிலேயே அமையும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, இந்நகரும் பாலாற்றங்கரையில் செழிப்பான பகுதியில் அமைந்துள்ளது. காஞ்சி மரங்கள் மிகுதியாக இருந்த […]
வலி சுமந்த பயணம்
விழியிரண்டும் குழிவிழுந்து மொழியிழந்து முகம்வாடி
உடல் மெலிந்து தள்ளாடி நடைபோகும் பயணமிது…
ஊரிழந்து உறவிழந்து ஊணுறக்கம் தானிழந்து
உண்ணவழி ஏதுமின்றி கொடியதொரு பயணமிது…
தமிழ் இனி
நம் தாய்மொழி தமிழாகும்.
உலகின் பன்மொழி ஆய்வாளர்களினால் முதலில் தோன்றிய மொழி என்ற சிறப்புப் பெற்ற மொழி.
அமிழ்தினும் இனியதெனப் புகழப்படுகின்ற மொழி.
9 கோடி தமிழர்களின் தனித்துவமான மொழி.
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” எனப் பாரதியாரால் போற்றப்பட்ட மொழி.
கல்வெட்டிலிருந்து கணிணி வரை பரந்த மொழி.
புறநானூறுக்காக ஒரு புனிதப் பயணம்
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் ‘இலக்கிய வட்டம்’ என்ற பெயரில் தமிழார்வலர்கள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஒன்று கூடியும், பல்வழி அழைப்பிலும் திருக்குறள், புறநானூறு, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களைப் படித்து, பொருளறிந்து, விவரித்து, விவாதித்து, ரசிக்கிறார்கள். இவர்கள் புறநானூற்றுப் பாடல்களைப் படித்து முடித்தமையைக் கொண்டாட ஒரு விழா எடுத்தனர். ஆம்! வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கமும், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் இணைந்து “புறநானூறு பன்னாட்டு மாநாடு” ஒன்றை ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 தேதிகளில், மேரிலாந்து மாநிலம் […]
மதுவின் இரு பக்கம்
அச்சம் நீக்கும் நம்மில் உறவாடும் கவிதை
ஆழ்ந்த துயரை துரத்தும் அருமை அன்னை
இன்பம் தரும் பாதகம் இல்லாக் கணிகை
ஈதல் வளரச் செய்யும் பண்பான தாதை
உளரல் தந்து மழலை ஆக்கும் தாய்மை
உலகச் செம்மொழி – அத்தியாயம் 6
போன அத்தியாயத்த படிச்ச என் நண்பர் ஒருத்தர் நீங்க பல நாடுகளின் பெயர்கள் தமிழ் மூலத்தை கொண்டு இருப்பதை எழுதியிருந்தீங்க .
ஆனா தமிழர்களின் பெரும் நிலப்பரப்பான தமிழகம் இணைந்திருக்கும் இந்தியாவின் பெயர் எந்த மொழி மூலத்திலிருந்து வந்ததுன்னு சொல்ல முடியுமானு கேட்டிருந்தாங்க. இந்தியா என்ற சொல்லுக்கு சிந்து என்ற தமிழ்ச் சொல்தான் மூலச் சொல்னு சொல்லுறாங்க.
சிந்து என்ற அழைத்தற்கு பல்வேறு காரணங்கள் சொல்லுறாங்க.
சிமை என்ற சொல் பனியை குறிக்கும் மற்றுமொறு செந்தமிழ் சொல். இந்த சிமை உருகி தண்ணீராக சிந்தியதால் உருவான நதி சிந்து நதி.
ஆசை
உறங்கிடா உள்ளத்தில் எண்ணிலா ஆசை
உறவன்றி உருவின்றி உயிர்பெற்ற ஆசை.
உருக்குலையுமுன் உயர்வுடனே உரைத்திட ஆசை
உயிரோயுமுன் அத்தனையும் அடைந்திட ஆசை
மனப் போராட்டம்
“உன் புக்கைக் கொஞ்சம் தரியா?”
வலப்புறம் திரும்பி வனப்புடன் அமர்ந்திருந்த மாணவிகளின் மத்தியில் அன்றலர்ந்த மலர்போல வீற்றிருக்கும் பாரதியைப் பார்த்துக் கேட்டான் கணேஷ்.
இளங்கலை மூன்றாம் ஆண்டில் பயிலும் மாணவ மாணவியர்கள் ஆசிரியருக்காகக் காத்திருக்கும் இடைவெளியில் பேசிக் கொண்டிருந்தனர்.
பணிதற்குரிய பணி
”கரணம் தப்பினால் மரணம்” கேள்விப்பட்டதுண்டு. உணர்ந்ததில்லை. நாம் செய்யும் வேலைகளில் ஏதேனும் பிழை நேருமானால், ஏற்படும் சேதமென்ன? பிழை திருத்தக் கிடைக்கும் இரண்டாவது, மூன்றாவது சந்தர்ப்பங்கள் எத்தனை? பெரும்பாலான நேரங்களில் நம்மில் பலரின் பிழைகள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மேலும், பிழைகளைத் திருத்திக் கொள்ளப் பல வாய்ப்புக்களும் கிடைக்கின்றன. உலகில் மிகவும் வணக்கத்திற்குறிய பணிகள் என மிகச்சில பணிகளை மட்டுமே குறிப்பிட முடியுமென நினைக்கிறேன். தான் எட்டி பார்த்திராத உயரங்களைத் தங்கள் மாணவர்கள் முயற்சித்துப் பிடிக்கத் […]
ஏன் கடவுளே?
கடவுள் ஒருநாள் கருணையுடன் முன்தோன்ற
கண்கள் குளமாகிக் கனவிதோ, குழப்பமுற
கணம்பல கடந்ததும் கருத்தது தெளிந்திட
கலக்கம் துறந்து களிப்புடனே நான்கேட்க…







