admin
admin's Latest Posts
வாங்க ப்ரீயா பேசலாம் !!
என்னா ஊருங்க இது? ஒன்னு பேஞ்சு கெடுக்குது.. இல்ல காஞ்சு கெடுக்குது.. அதுவிமில்லீன்னா குளிரித் தொலைக்குது .. பொறக்காலப் போயி ஒக்காரதுக்குள்ளாற பொடனி எல்லாம் வெறச்சுப் போச்சுது.. பெருசா இல்லாட்டியும், ஊருக்கு அந்தாப்பல ஒரு சின்ன வூட்ட வாங்கிப் போட்டேனுங்க.. (நீங்க நெனக்கிற மாதரயெல்லாம் ஒன்னுமில்லீங்க .. சின்ன சைஸ் வூடுங்க ..) அது என்றான்னா நமுக்கு சோலி சாஸ்தியாப் போனது தான் மிச்சமுங்… எதையும் அனுபவிக்க முடிலீங்க.. ”காப்பி கீப்பி குடிக்கிறாங்களா மாமோவ்?” எங்கூட்டம்மணி. “காப்பி […]
இந்தியப் பயணம்
உணர்வுகள் – கடவுள் மனிதனுக்கு அளித்த வரம். உறவுகள் – அந்த வரத்தை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்ளும் பாலங்கள். காலையிலெழுகையில் வீட்டின் வாசலில் காகம் கரைந்தால் உறவுகள் வீட்டிற்கு வரப்போவதற்கான அறிகுறி என்பது என் கிராமத்தின் நம்பிக்கை, உணர்வு. இதில் அறிவியல் இருக்கிறதாவென்று நானறியேன், ஆனால் மனது உறவினர் கொண்டு வரப்போகும் தின்பண்டங்களை எதிர்பார்க்கத் தொடங்கிவிடும். அழகிய மாலைப் பொழுதில் சாவதானமாக அமர்ந்து உணவு உட்கொள்ளும்பொழுது வரும் விக்கல் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வாழும் உடன்பிறந்தவளின் […]
பயணங்கள் முடிவதில்லை!
“ம்மா … என்னோட பர்ப்பிள் கலர் நெயில் பாலிஷ் எங்க?” மாடியிலிருந்து சுமதியின் குரல். “ஏண்டி இப்படிக் கத்தற.. தொண்டை வத்தி போற மாதிரி .. இரு வர்றேன்” அவளை விட அதிகமாகக் கத்தினாள் ராஜி – சுமதியின் அம்மா. “ஏங்க… இந்த குக்கர்ல பருப்பு வெச்சிருக்கேன் .. மூணாவது விசில் வந்தா ஆஃப் பண்ணிடுங்க .. அவ எதோ கேக்கறா .. நான் எடுத்து கொடுத்துட்டு வந்திடறேன் ..” என்று ஈரக் கையை நைட்டியில் துடைத்து […]
கவித்துளிகள் சில…
அமாவாசை
சிதறிய நட்சத்திரங்களுக்குள்
செத்துக் கிடக்கிறது ஒரு நிலா.
கையடக்கத் தொலைபேசி
சட்டைப் பையில் பதுங்கியிருந்து
பணம் பறிக்கும் இரகசியக் கொள்ளைக்காரன்…
மூவர் தேவாரம்
ஓம் நம்ச்சிவாய!
தேவாரம் எனப்படுவது சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமான் மீது கிபி 6ம் 7ம் 8ம் நூற்றாண்டை சேர்ந்த அப்பர் என்ற திருநாவுக்கரசர், ஆளுடைய பிள்ளை என்னும் திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார் இம்மூவரும் சிவாலயங்கள் தோறும் எழுந்து பாடிய இசைத்தோகுப்பே ஆகும். இவர்கள் மொத்தமாகப் பாடியது ஒரு லட்சத்தி இருபதினாயிரம் பாடல்கள் என்பது செவிவழிச்செய்தி.
கவிஞர் ஈரோடு தமிழன்பன்
” எதற்கப்பா எதுகை மோனை மின்னலைப் பிடித்து வைக்கவா சட்டி பானை? “ என்று எதுகை மோனையுடன் எழுதுவதை, எதுகை மோனையுடன் கிண்டல் செய்பவரைத் தெரியுமா? கிட்டத்தட்ட 120 வருடங்கள் பழமையான கவிதை வடிவமாக இருந்தாலும் இன்னமும் புதுக் கவிதை என்ற பெயருடன் உலா வரும் கவிதை வடிவமாக இருந்தாலும் , ஆயிரக்கணக்கான வருடங்களாகத் தமிழின் பெருமையெனக் கருதப்படும் மரபுக் கவிதைகளாக இருந்தாலும் சரி, ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தமிழில் புகழுடன் விளங்கும் ஹைக்கூ எனப்படும் கவிதை […]
கோமடீஸ்வரர்
1980 களில், பாரதப் பிரதமர் இந்திரா காந்தி ஆகாயத்தில் பறந்து கொண்டே மலர் தூவி வணங்கியது பெருமளவு விவாதத்திற்குள்ளானது நினைவிலிருக்கலாம். அந்தக் கோமடீஸ்வரர் சிலை அமைந்திருக்கும் ஷ்ரவணபெளகொளா (Shravanabelagola) செல்லும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. மதச் சம்பந்தமான காரணமெதுவுமில்லாமல், சாதாரணச் சுற்றுலாவாகத் தொடங்கிய இந்தப் பயணம் பாதித்த ஒரு சில குறிப்புக்களைப் பகிர்ந்து கொள்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம். கர்நாடக மாநிலத்தில், பெங்களூர் நகரிலிருந்து சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் […]
மினசோட்டா ஆமிஷ் சமூகம்
மினசோட்டா ஆமிஷ் சமூகம் (Amish Community in Minnesota) மினசோட்டா மாநிலத்தின் தென்கிழக்கு மூலையில் மாநில நெடுஞ்சாலை 52 யில், பிரஸ்டன் (Preston) நகரத்துக்கும், புரொஸ்பர் (Prosper) நகரத்துக்கும் குதிரை வண்டிகளுக்கென அகன்ற பாதை அமைக்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். இந்தப் பகுதியில் அமைதியான எளிமையான, இயற்கையான விவசாயக் கிராமிய வாழ்க்கையை ஒற்றி வாழ்கிறது ஐரோப்பியாவில் இருந்து குடியேறிய ஆமிஷ் சமூகம். ஹார்மனி (Harmony), மற்றும் காண்டன் (Canton) பகுதிகளில், ஆமிஷ் சமூகத்தை சேர்ந்த ஏறத்தாழ 100 குடும்பங்கள் வாழ்கின்றனர். இவர்கள் 1970 […]
அமெரிக்காவிலும் சாதி…
2007ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றில் இந்தியாவின் சாதி சமுதாயம் ‘இன வெறுப்பை” ஒட்டியது என்று பிரகடனப் படுத்தியது. இதற்கான குறிப்பை இந்த இணையதளத்தில் காணலாம்: https://www.cbc.ca/news/world/story/2007/03/02/india-dalits.html இந்திய அரசாங்கம் இந்தியாவின் சாதிகள் முறை இன வெறுப்பு அல்ல என்றும் சாதிகளையே அழித்து விட்டோம் என்று மறுத்துரைத்தது ஒரு தனிக்கூத்து. ஐ.நா.வின் மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு அறிக்கை https://www.hrw.org/reports/2001/globalcaste/ அதைச் சற்றுத் தள்ளி வைத்து நடப்புச் செய்திக்கு வருவோம். அமெரிக்காவிலும் சாதி உள்ளதா? என்று […]
மாதத்தின் மாமனிதர் – பெரியார்
சமுதாயத் தொண்டு செய்பவருக்கு, கடவுள் பக்தி இருக்கக்கூடாது, மத பக்தி இருக்கக்கூடாது, தேசபக்தி இருக்கக்கூடாது, ஏன் மொழிபக்தி கூட இருக்கக்கூடாது, சமுதாய பக்தி ஒன்றுதான் இருக்க வேண்டும் அவனால் தான் ஏதாவது செய்ய முடியும். எவன் ஒருவன் கடவுளையோ, மதத்தையோ, சாஸ்திரத்தையோ, இலக்கியத்தையோ, மொழியையோ கைல வச்சுக்கிட்டு சமுதாயத் தொண்டுச் செய்யுரான்னா, அவன் சோறுண்பவன் அல்ல. இதைப்போன்று தெளிவாகவும் தைரியமாகவும் ஒருவரால் பேச முடியும் என்றால் அது பெரியார் என்றழைக்கப் படுகிற ஈ.வே.இராமசாமியால் மட்டுமே முடியும். மேற்கூறிய […]







