admin
admin's Latest Posts
உலகச் செம்மொழி – அத்தியாயம் 7
அத்தியாயம் 6 செல்ல இங்கே சொடுக்கவும் உலகின் மிகப்பழமையான நாகரிகங்களான சிந்துச் சமவெளி நாகரிகம், சுமேரிய நாகரிகம், சீன நாகரிகம் மற்றும் மாயன் நாகரிகங்களில் தமிழ் மற்றும் தமிழரின் தொடர்புகளை உறுதிப்படுத்தப் பல சான்றுகள் உள்ளன. உலகில் ஒவ்வொரு நாளும் சூரியன் முதலில் உதிக்கும் ஜப்பான் நாட்டின் மொழியான யப்பான் மொழி முதல் ஒவ்வொரு நாளும் சூரியன் கடைசியாக மறையும் அமெரிக்க சுமோன் தீவின் ஆதி மொழியான சுமோன் மொழி வரை, கிட்டத்தட்ட எல்லா பிரதேசங்களிலுமுள்ள மொழிகளுக்கும் […]
ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு
ஈழத் தமிழர்கள் புவியியல், சமூகவியல், அரசியல், பொருளாதாரக் காரணங்களினால் உந்தப்பட்டுத் தாம் தொன்று தொட்டு வழிவழியாக வாழ்ந்த பாரம்பரிய மண்ணை விட்டு; முற்றிலும் வேறுப்பட்டப் பிறிதொருப் பிரதேசத்தில் வாழத்தலைப்படுவதைப் புலப்பெயர்வு என்றுக் கூறலாம். ‘புலம்’ என்ற சொல்லுக்குத் தமிழ் லெக்ஸிக்கன் அகராதியில் ‘திக்கு’1 எனப் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ள அதேவேளையில், ‘பெயர்தல்’ என்பதற்கு ‘இருப்பிடம் விட்டுப் பெயர்தல்’2 எனப் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் வரும் “கலந்தரு திருவின் புலம்பெயர்மாக்கள்”3 என்ற அடியும் இங்கு நோக்குதற்குரியது. புலியூர்க்கேசிகன் […]
காட்டரிசிக் கஞ்சி
மினசோட்டா ஆதிவாசிகளும் காட்டரிசியும் தெற்காசியக்கண்டத்தவராகியத் தமிழர்க்கு பண்டயக்காலத்தில் இருந்து இன்றுவரை உணவில் நெல் அரிசி பிரதானமான தானியம். இதே போன்று மினசோட்டா வாழ் ஆதிவாசி மக்களுக்கும் அத்தியாய தானியம் காட்டு அரிசியே. மினசோட்டா மாநிலப் பிரதான காட்டரிசி்ப்பிரதேசம். இதை தமது மொழியில் மனோமின் Manomin (Zizania aquatic L.) என்று அழைக்கின்றனர்.இம்மக்கள் ஏரி, குளக்கரைகளில் தாமாகவே விளையும் காட்டு அரிசியைக் கடவுள் பாக்கியம் என்று எடுத்துக்கொள்வர். இந்த புல்லு வகையைச்சேர்ந்த தாவரங்கள் மினசோட்டா, அயல் அமெரிக்க, கனேடிய […]
வாங்க ஃப்ரீயா பேசலாம்
“என்ன அண்ணாச்சி? சொகமா இருக்கீயளா?” “அடடே .. வாடே மாப்ளே .. நல்லா இருக்கம்டே. என்னடே விடியாலைல வேட்டியெல்லாம் கட்டி அசத்தறீரு? இங்கிட்டு என்ன வெய்யிலா அடிக்கி? வெறக்கீயில்லா?” “பண்டிக நாளல்லா.. வேட்டி கட்டியாகோணுமுன்னு ஊர்லேருந்து ஆத்தா தாக்கீது அனுப்பிருச்சு .. “ ”அப்படித்தாம்ல நடந்துகிடோனும்… கெடக்கட்டும் … ஏது இந்தா தூரம்?” “சும்மாதாம் … கனநாளாச்சுல்லா இந்தப் பக்கம் வந்து ..” “ஆமாம்லே.. கடையில கொள்ளச் சோலி கெடக்கும் ..அங்கன போய் வாறதுக்கே நேரம் வெருசா […]
பழங்கஞ்சி
கிராமப் புறங்களில் தயாரிக்கப்படும் காலை உணவுகளில் பழஞ்சோறு முதியத் தலைமுறைகளில் முக்கியமானதொன்று. சோறு அல்லது சாதம் எனப்படும் பகல் நேர உணவுக்காக அவித்த அரிசியின் மீதியை இரவில் சிறிதளவுத் தண்ணீரை ஊற்றி உலைப்பானையில் வைக்கப்படும். இது சாதாரணச் சூழல் வெப்பநிலையில் குளிர்ச்சாதன ஒழுங்குகள் இல்லாமல் இரவு சற்றுப் புளிக்க விடப்படும். காலையில் சிலர் உப்பு, தயிர் மற்றும் ஊறுகாயுடன் சாப்பிடுவர். யாழ்ப்பாணக் கிராமப் புறங்களில் தேங்காய்ப்பால் விட்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் அரிந்துப் போட்டுச், சற்று […]
வறுமை
இளமையில் வறுமை இறப்பினும் கொடிது
இயம்புதல் அருமை ஔவையின் அமுது
இன்னலின் முதன்மை இல்லாததன் பொழுது
இரப்பவன் நிலைமை இருப்பவன் தொழுது
பெற்றதும் இழந்ததும்
உயர் வடையவே உறவினை இழந்தேன்
உடமை பெறவே உரிமை இழந்தேன்
பொருண்மை சேர்க்கப் பொறுமை யிழந்தேன்
பெறுமதி பெறவே பெருமை யிழந்தேன்.
தீபாவளித் திரைப்படங்கள்
பண்டிகைக் காலங்களில், பொங்கல்; தீபாவளி என எதுவாக இருந்தாலும், மக்கள் பூஜை புனஸ்காரம், புதிய உடைகள், பலமான சாப்பாடு என்பவை முடிந்ததும் அடுத்துச் செய்யத் துடிப்பது புதிய திரைப்படம் பார்ப்பது. தமிழர் கலாச்சாரத்தில் இவ்விஷயம் வெகு நாட்களாகவே ஒரு எழுதப்படாத சாங்கியமாகி விட்டது. இதை நன்கு புரிந்துக் கொண்ட தயாரிப்பாளர்களும், திரையரங்க உரிமையாளர்களும் இந்தச் சமயத்தில் போட்டியிட்டுச் சிறந்த படங்களைத் தர முயல்கின்றனர். இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவர இருக்கும் படங்களில் சிலவற்றைப் பற்றி இங்கே காணலாம்.
முத்தமிழ் விழா – பட்டிமன்றம்
தலைப்பு: குழந்தைகள் தமிழ் கற்பது பெரிதும் குறைந்ததற்குக் காரணம் சூழ் நிலையா அல்லது பெற்றோர்களா? அண்மையில் மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் இயல், இசை, நாடக நிகழ்ச்சிகள் நிரம்பிய முத்தமிழ் விழாவினை நடத்தினர். தமிழ்ப் பற்றும், ஆர்வமும் கொண்டு, குழந்தைகள், பெரியோரென நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த விழாவுக்கு தமிழ்ப் பேராசிரியை திருமதி புனிதா ஏகாம்பரம் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். விழாவினை தொடக்க முதலே ரசித்த அவர், தனது சிறப்புரையில் ஒவ்வொரு நிகழ்ச்சியின் பெருமைகளையும் கோடிட்டுக் காட்டினார். […]
நகரமும்! கிராமமும்!
அடுக்கு மாடி கட்டிடமாம் இடுக்கில் கூட குடித்தனமாம்! மடக்கு நீருக்கு வழியில்லையாம். மிடுக்கு மட்டும் குறையலையாம்! பஞ்சு மெத்தை வகைவகையாம் படுத் துறங்க நேரமில்லையாம்! பல்லு துலக்க பலபசையாம். பளிச்சினு சிரிக்க மனசில்லையாம்! உரசாம நடக்க முடியலையாம் உரையாடு வதற்குத் துணையில்லையாம் உதவிக் கொரு ஆளில்லையாம் உறவுக் கூட நிலைக்கலையாம்! அழகு ஏடிஎம் அணிவரிசையாம் அடகுக் கடைகட்கு அழிவில்லையாம்! அலைபேசி இருபதாயிரம் விலையாம். அடுத்தவேளை கஞ்சிக்கு வகையில்லையாம். அருகம் புல்லுக்கு இடமில்லையாம் அறிவியல் கல்லூரிக்கு குறைவில்லையாம்! […]







