admin
admin's Latest Posts
திரைப்படத் திறனாய்வு – வன யுத்தம்
பனிப்பூக்களில் திரைப்படத் திறனாய்வுகள் குறிஞ்சி நிலப் படங்களாகவே எழுதுவது (இதற்கு முன்பு கும்கி) ஒரு சாதாரண நிகழ்வே, எல்லோரும் காட்டுவாசிகள் எண்ணி விடாதீர்கள்! ”குப்பி” என்றொரு படத்தை எடுத்த ரமேஷ் என்பவர் இந்தப் படத்தின் இயக்குநர், சாண்டல்வுட்டை (அதாங்க கன்னடச் சினிமாத்துறையின் பெயர்) சார்ந்தவர். குப்பி படத்தில் விடுதலைப்புலிகள் என்று சொல்லப்படும் சிவராசன்/தானு பெங்களூருவில் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட கதையைப் படமாக்கினார். ”வனயுத்தம்”, “குப்பி” இரண்டுக்கும் பல ஒற்றுமைகள், 1. காவல்துறையின் பார்வையில் இருந்தே கதை சொல்லப்பட்டிருக்கிறது. 2. […]
சிட்டுக்குருவி
நான் அமெரிக்காவிற்கு வந்த புதிதில் வீட்டு நினைவுகளில் சிக்குண்டு பெரிதும் கலங்கியதுண்டு. உறவினர், நண்பர் இவர்களை விட்டு விட்டு வந்து இங்கே என்ன சாதிக்கப் போகிறோம் எனத் தோன்றியது உண்டு. நண்பர், உறவினர் மட்டுமில்லை, எனது வாழ்க்கை முறையையே தொலைத்து விட்டதாக நினைத்தேன். எங்கள் வீட்டுக்கு பெடல் இல்லாத சைக்கிளை ஓட்டி வந்து பேப்பர் போடும் பெரியவர், ‘எளன்’ என்று கூவி இளநீர் விற்பவர், காலை ஆறரை மணி சமீபத்தில் சாவியை மூன்று முறை கதவில் தட்டி […]
மருவிய மாமொழிகள்
பழ மொழிகள் நம் மொழியின் மிகச் சிறந்த பொக்கிஷமென்பது நாமறிந்ததே. பெரிய காப்பியங்களாகவோ அல்லது கவிதைகளாகவோ இயற்றப்பட்டவையல்ல. புகழ் பெற்ற கவிஞர்களால் பாடப்பட்டவையுமல்ல. பல பழமொழிகள் எழுதியவர் யாரென்றே தெரியாதவை. ஆனால் மிகவும் சுவையாகவும், சுருக்கமாகவும், கவித்துவத்துடனும் விளங்கும் பல பழமொழிகளை நாமறிவோம்.
காலத்தைக் கடந்து நிற்கின்றன பல பழமொழிகள். அவற்றில் சில, கால மாற்றத்தாலே மருவி அர்த்தம் மாறியுமுள்ளன. அந்த இடைச்செருகலை நீக்கி, சரியான கருத்தை விளக்கும் ஒரு சிறு முயற்சி இது.
இரையைத் தேடி
விமானம் சிகாகோ ஓஹேர் எர்ப்போர்ட்டில் இறங்கிய போது மணி சரியாக 6.20 ஆகியிருந்தது. சிறிய, டி.சி. 9 வகை விமானம் என்பதால் பயணிகள் அதிகமில்லை. கிட்டத்தட்ட பத்து நிமிடங்களில் விமானத்தை விட்டு வெளியில் வந்தான் ராகவ். துபாய்க்குச் செல்லும் விமானம் இரவு பத்து பத்துக்குத் தான். நிறைய நேரமிருக்கிறது. லேசாகப் பசிப்பது போல் உணர்ந்தான் ராகவ். மினியாபொலிஸில் விமானத்தைப் பிடிக்க ஓடி வர வேண்டியதாகிவிட்டது. சாப்பிடக் கூட நேரமில்லை. அவசர அவசரமாகத் துணிகளை அள்ளிப் போட்டுக் கொண்டு […]
பகுத்தறிவு
பகலிரவு கண்விழித்துப் பலகாலம் தவமிருந்தேன்
சகம்முழுதும் காத்தருளும் சர்வேசன் வரவுநோக்கி!!
தகதகக்கும் பிரகாசமாய்த் தன்னிகரிலாக் கருணையுடன்
அகமுவந்து முன்னுதித்து அன்புடனே வினவிட்டான்
பெண்
விடியலின் கதிராய், வெள்ளியின் குளிராய்
விளக்கின் ஒளியாய், வெண்சங்கின் ஒலியாய்
விருட்சத்தின் விதையாய் வேள்வியின் பயனாய்
வினையிருக்கும் அவளிடத்தில் வீச்சிருக்கும்!
உலகச் செம்மொழி – அத்தியாயம் 2
நாம் தமிழகத்து சாலைகளில் செல்லும் போது இரு பக்கமும் உள்ள சுவற்றில் ”வீரபாண்டியார் அழைக்கிறார்”, ”நெல்லையார் அழைக்கிறார்” அப்படீன்னு பலப்பல ”ஆர்” அழைக்கிறதைப் பாத்து இருப்பீங்க. பாத்ததோட இல்லாம அவங்களை நினைச்சி சிரிச்சிட்டும் போய் இருப்பீங்க. தமிழில் “ஆர்” என்ற விகுதி ஒருவரை உயர்த்திக் குறிப்பிட பயன்படுகிறது. அது சரி sir. இப்ப எதுக்கு என்கிட்ட தமிழ் இலக்கணம் சொல்லுறீங்கனு கேக்கறீங்களா? இந்த “ஆர்” க்கு முன்னாடி ஒரு “ஸ்” சேத்துப் பாருங்க….
ஸ் + ஆர் =ஸ்ஆர் = sir
உலகத் தாய்மொழி தினக் கொண்டாட்டங்கள்
இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை “உலகத் தாய்மொழி தினம்” என்று ஒன்று கொண்டாடப்படுகிறது என்பது நானறிந்திராத ஒரு செய்தி. தமிழன்பர் ஒருவர் இந்த தினத்தைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல, இதன் மீது ஒரு ஆர்வம் வர ஆரம்பித்தது. வழக்கமாக எல்லா விடயங்களையும் அறிந்து கொள்ள உறுதுணையாக இருக்கும் இணைய தளத்தைப் புரட்டத் துவங்கினேன். வழக்கமாக இணைய தளத்தில் கிடைக்கும் உண்மை மற்றும் அவரவர்களின் சொந்த அபிப்பிராயமென பல விபரங்கள் அறியப் பெற்றேன். அவற்றையெல்லாம் அறிவுக் கொள்முதலாக வைத்துக் […]







