\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

admin

rss feed

admin's Latest Posts

ஜனவரி 2021 – தமிழ்ப் பாரம்பரிய மாதம்

ஜனவரி 2021 – தமிழ்ப் பாரம்பரிய மாதம்

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தமிழர் திருநாளாம் பொங்கல் விழா நடைபெறும் ஜனவரி மாதத்தை ‘தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாகப்’ பிரகடனப்படுத்தி தமிழ் மொழியின் தொன்மை, செழுமை, கலாச்சாரத்தைப் பெருமைப்படுத்தியுள்ளது மினசோட்டா மாநில அரசாங்கம்.   இதைப் பிரகடனப்படுத்தி, அறிவித்த ஆளுநர் திரு. டிம் வால்ட்ஸ் அவர்களுக்கு தமிழ்ச் சமூகம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறது பனிப்பூக்கள்.   ஆளுநரது அறிவிப்பின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது. உலகில் 2600 ஆண்டுகளை விஞ்சியிருக்கும் வரலாற்றைக் கொண்டிருக்கும் தொன்மையான செம்மொழியாகத் […]

Continue Reading »

வர்ணத்தில் கிறிஸ்துமஸ்

வர்ணத்தில் கிறிஸ்துமஸ்

இருண்ட பனிக்கால விடியலின் சூரியோதயம். சோகமாகவும் விசித்திரமாகவும் இருக்கிறது. அரை விழித்த பறவைகளின் ஆரவாரம், இன்னும் இரை தேடியபடி. இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் பாடசாலைகள் கூட வீட்டில் இருந்த படியே நடைபெறுவதால், கடந்த பத்து மாதங்களாகப் பிள்ளைகளுக்கு வீடு கிட்டத்தட்ட ஒரு சிறைச்சாலை போல மாறியிருந்தது. வீட்டுச் சிறையில் இருந்து அவர்களுக்கு ஒரு சிறிய விடுதலை கிடைப்பதையிட்டுப் பிள்ளைகள் இருவரும் காலையிலிருந்தே பெரும் ஆரவாரமாக இருந்தார்கள். எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் கொடுக்கக்கூடிய மிக மதிப்புமிக்க விஷயம் பணம் […]

Continue Reading »

கலாட்டா-11

கலாட்டா-11

Continue Reading »

எரிபொருள் குழாயும் எஞ்சிய துரோகமும்

எரிபொருள் குழாயும் எஞ்சிய துரோகமும்

மினியாபொலிஸ் நகரிலிருந்து இரண்டு மணித்தியாலம் வடக்கு நோக்கிப் பயணம் செய்தால் வரும் ஒரு சிறிய ஊர் பலிசேட் (pallisade). இதன் அருகில் உக்கிரமாக ஓடுகிறது இளம் மிஸிஸிப்பி ஆறு. இந்த ஊரில் தான் என்ப்ரிட்ஜ் லைன்3 (‘Enbridge line 3 pipeline’) எரிகுழாய் திட்டத்துக்கு எதிராகப் பூர்வீக வாசிகளும், சூழல் மாசுபடுவதைத் தவிர்க்க எதிர்ப்பாளர்களும் போராடுகிறார்கள். இந்த பலிசேட் ஊரில் ‘சாபொண்டவான்’ (Zhaabondawan எனும் பூர்வீக வாசிகளின் புனிதச்சாவடி மிஸிஸிப்பி ஆற்றோரமாக அமைந்திருக்கிறது. முதியோர்கள் அடக்கம் செய்யப்பட்ட […]

Continue Reading »

தார் மணலில் இருந்து எரிபொருள்

தார் மணலில் இருந்து எரிபொருள்

  தார் மணலில் இருந்து எரிபொருள் நாம் வாகனங்களில் உபயோகிக்கும் பெற்றோலியம், கனேடிய தார் மணலில் இருந்து எவ்வாறு வருகிறது என்று பார்க்கலாம். தார் மணலில் இருந்து எரிபொருள் பிரிப்பது நிலத்தடி எண்ணெய் எடுப்பதை விட அதிக செலவுள்ளது. சுற்றுச்சூழலிற்கும் அதிக மாசு படுத்தும் செயலாகும் இது. தார் மணல் அகழ்வு இரு வகையில் நடைபெறலாம். மேற்தரை மணல் அகழ்வு. இது பாரிய பிரதேசத்தைப் பெரும் குழிகாளாக விட்டுச் செல்லும். இரண்டாவது முறை ஆழ் கிணறுகள் துளைத்து […]

Continue Reading »

உடல் மாறிய உறவுகள்

Filed in கதை, வார வெளியீடு by on January 3, 2021 0 Comments
உடல் மாறிய உறவுகள்

நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த வாசுகியை, ஒலிப் பெட்டியில் இருந்து வந்த  பைலட்டின் குரல்  தட்டியெழுப்பியது.  இன்னும் ஒரு மணி நேரத்தில் சியாட்டில் டோகோமோ ஏர்போர்ட்டை அடையப் போவதாக அவர் அறிவித்தார். வாசுகி தன் பக்கத்தில் இருந்த கணவன் மனோகரைத் தட்டியெழுப்பி.  “மாமா,  இன்னும்  ஒரு மணி நேரத்துல  லேண்ட் ஆகும் போல இருக்கு.  நீங்க டாய்லெட் போகணும்னா போயிட்டு வாங்க” “ஐ அம் ஃபைன், நீ போகணுமா?”  “இல்ல மாமா,  இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும்”  […]

Continue Reading »

விடைபெறும் 2020 ஆம் ஆண்டு 

Filed in தலையங்கம், முகவுரை by on December 28, 2020 0 Comments
விடைபெறும் 2020 ஆம் ஆண்டு 

2020 ஆம் ஆண்டு முடிவடையப் போகிறது. முட்டி மோதி, தட்டுத் தடுமாறிக் கிட்டத்தட்ட அதனைக் கடந்து விட்டோம் நாம். ஆனால் நிறைய வடுக்கள், வலி, விரக்தி மற்றும் மனச்சோர்வு நம்மை ஆட்கொண்டுவிட்டன. இடையிடையே சின்னச் சின்னச் சந்தோஷங்கள். முந்தைய ஆண்டுகளை விட இந்தாண்டு  குடும்பத்தினருடன் கூடுதல்  நேரத்தைப் பகிர்ந்துகொண்டு, அவர்களை அதிகமாகப் புரிந்து கொண்டிருக்கிறோம் எனத் தோன்றுகிறது.   ஒவ்வொரு ஆண்டு முடியும் தறுவாயில் நடப்பாண்டின் நன்மைகள் – தீமைகள், ஆச்சரியங்கள் – ஏமாற்றங்கள் , ஆக்கங்கள் – […]

Continue Reading »

இந்திய சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் அரசியலில் உள்ளிடல்

இந்திய சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் அரசியலில் உள்ளிடல்

பல கால வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமுகமாகப் பெரும் தென்னிந்தியத் தமிழ் நடிகர் ரஜனிகாந்த் அரசியலில் இறுதியாக உள்ளிடவிருக்கிறார். இவர் சனவரி மாதம் புதியதொரு கட்சியை ஆரம்பிக்கவுள்ளார், என்று டிசம்பர் 2020 ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளார். இந்தியத் தென்மாநிலமான தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்காக இன்னும்  சில மாதங்களில் வாக்களிக்கவிருக்கும்  நிலையில், இப்போது நடக்காவிட்டால் எப்போதும் நடக்காது என்று அவர் கூறியுள்ளார்.   தமிழ்நாடு தற்பொழுது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்னும் கட்சியால் ஆளப்பட்டு வருகிறது. இந்தக் […]

Continue Reading »

பனிக்காலச் சுகங்கள்

பனிக்காலச் சுகங்கள்

 மீண்டும் மினசோட்டாவில் பனிக்காலம் வந்துவிட்டது. இந்த வருடம் பனி பிந்தினாலும், எம்மை குளிரும்,  இருளும் சூழ்ந்து வருகின்றன. இந்தக் குளிர் நாட்களில் சூரியன் பிந்தி உதித்து, முந்தி அத்தமிப்பது வழக்கம். எனவே முகில் கூடிய மந்தமான வானம், மங்கும் ஒளி இவ்விடத்தின் இயல்பான இயற்கை நிலையாகிப்போனது. இது சலிப்பான சூழலாக இருக்கும் என்று நாம் சிந்திக்கவும் செய்யலாம்  அதன் ஒரு காரணம் பூமியின் மத்திய கோட்டுக்கு அருகாமையில் வெயில் வெளிச்சத்துடன் வெப்ப வலயத்தில் (Tropics) இருந்து வந்த […]

Continue Reading »

வெள்ளத்தால் ஆசியாவின் அபாயம் $8.5 டிரில்லியன்

வெள்ளத்தால் ஆசியாவின் அபாயம் $8.5 டிரில்லியன்

சூழலியல் பேரிடர்களை இந்தியா, சீனா போன்ற பெரும் நாடுகளும் ஏனைய இதர நாடுகளும் ஆசியாவில் எதிர்நோக்குகின்றன. அதன் தாக்கத்தைக் குறைக்க பாரிய உள்நாட்டுக் கட்டமைப்பு முதலீடுகள் உடனே தேவைப்படுகின்றன. வளரும் பூகோள இயற்கை அழிவுகள் தொடர்ந்து ஆசியப் பொருளாதாரங்களுக்கு அபாயத்தை உண்டு செய்தவாறே உள்ளன. World Research Institute (WRI) தரவு தகவல்கள் படி 2030 இல் உலகளாவிய பொருளாதார உற்பத்தியில் ஆற்று வெள்ளப்பெருக்கு காரணமாக உருவாக உள்ள சேதம் $17 trillion என்று அனுமானிக்கப்படுகிறது. அதில் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad