admin
admin's Latest Posts
அம்மாவின் அழுகை
அம்மாவின் அழுகுரல் எந்த மகனின், மகளின் காதுக்கும் எட்டவில்லை ; எட்டினாலும் எந்த மகனுக்கும் , மகளுக்கம் மெய்யறிவு இல்லாததனால் அம்மாவின் அழுகுரலுக்கு செவிமடுக்கும் திறன் இல்லாதவர்களாக பிள்ளைகள் இருந்தார்கள். பிள்ளைகளின் காது செவிடாக இருந்து , காது கேட்காமல் இருந்திருந்தாலாவது தாயின் மனம் அமைதி பெற்றிருக்கும் ; செவிட்டுப் பிள்ளைகளுக்குக் காது கேட்கவில்லை …….. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் என்ற இரக்க உணர்வாவது தாயிற்கு மேலிட்டிருக்கும். சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின் வகைதெரிவான் […]
தூரிகை
காரிகை ஒருத்தி கடைவிழி காட்டிக் காதலைச் சொன்னாள்! பேரிகை ஒலியெனப் பெரிதாய் மனத்துள் பூகம்பம் கிளம்பிற்று !! தூரிகை கொண்டு அவளெழில் செதுக்கக் கோரியது காதலுள்ளம் ! காரிகை அவளின் களைமுகம் நினைந்து கிறுக்கலைத் தொடங்கினேன்! பேரிகை முழக்கம் பூங்கொத்தாய் மலர்ந்திட பாவையழகு அசைபோட்டேன்!! தூரிகை எடுத்துத் துளிர்முகம் வடிக்க தூரத்து நிலவானாளவள் !!! காரிகை அவளின் களங்கமற்ற சிரிப்பு கவனமெங்கும் நிறைத்திட! பேரிகை இறைச்சலின்றி பெண்ணவள் […]
மினிமலிசம் – நியாண்டர் செல்வன் விளக்கம்
மினிமலிசம் (Minimalism) என்கிற சிக்கன வாழ்க்கை முறை குறித்து, அதனைப் பின்பற்றி வரும் திரு. நியாண்டர் செல்வன் அவர்கள் இந்த காணொளியில் பனிப்பூக்கள் வாசகர்களிடம் தனது கருத்தையும், அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார். அந்தக் காணொளியை வாசகர்கள் இங்கு காணலாம்.இதை வலையொலியிலும் கேட்கலாம்.
ஆயுள் காப்பீடு – பாஸ்டன் ஸ்ரீராம் விளக்கம்
ஆயுள் காப்பீடு குறித்து பலருக்கும் பலவிதக் கேள்விகள் இருக்கும். இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில்பெறும் வண்ணம் திரு. பாஸ்டன் ஸ்ரீராம் அவர்களுடனான இந்த உரையாடல் அமைந்தது. ஆயுள் காப்பீட்டின் அவசியம், யார் யாருக்கு காப்பீடு தேவை, எந்தளவு காப்பீடு தேவை, எங்கு காப்பீடு எடுப்பது போன்ற பல கேள்விகளுக்கு இந்த உரையாடலில் ஸ்ரீராம் அவர்கள் எளிமையாக விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களுக்கு பெரும் பயனளிக்கும் பல தகவல்கள் பொதிந்துள்ள இந்த காணொளியை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.
நான் மதுரை பொண்ணு – ஆனா சீஸ்ட்ராண்ட்
கலை வரலாற்றில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஆனா சீஸ்ட்ராண்ட் அவர்கள் யூனிவர்சிட்டி ஆஃப் மினசோட்டாவில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். தெற்காசிய மற்றும் தென்னிந்தியக் கோவில்களில் காணப்படும் கலையம்சம் பொருந்திய பழம்பெரும் சிற்பங்கள் மற்றும் ஓவியங்களைப் பற்றி ஆய்வுகள் செய்து கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியிட்டு இருக்கிறார். இந்த ஆய்வுகளுக்கென தொடர்ந்து தமிழ்நாடு சென்று வருபவர். ‘நான் மதுரை பொண்ணு’ என பெருமிதம் கொள்ளும் ஆனாவுடனான உரையாடலை இந்த காணொளியில் காணலாம்.
அமெரிக்கப் பொருளாதாரமும் கொரோனாக் கொடுவினையும்
கடந்த ஒரு தசாப்தத்திற்கு பொருளாதார வளர்வில் உச்சத்தில் அமெரிக்கா இருந்தது, 2018 கடைசி காலம் வரை. அமெரிக்காவின் பாரிய வருமானவரிக் குறைப்பினாலும், அரசின் செலவழிப்பினாலும் உள்ளூர் மற்றும் உலகச் சந்தைகளும் பயனடைந்தன. அன்று அமெரிக்கப் பொருளாதாரமே உலகின் பொருளாதாரத்தை உயர்த்த வரையறை செய்தது, இன்று அதே பொருளாதாரம் கொரோனாக் கொடுவினைகளைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பிழைகளைச் செய்து இன்று உலகப் பொருளாதாரத்தை உருக்குலைக்கும் அபாயத்திற்கும் வந்துள்ளது. இன்று பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து படிப்படியாக வெளி வந்த நாடுகள் பலவும் […]
புலம்பெயர் சிறுகதைகளில் பெண்களின் பிரச்சினைகள்
(“புது உலகம் எமை நோக்கி” என்னும் சிறுகதைத் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு) அறிமுகம் ஈழத்தில் 1980களில் ஏற்பட்ட இனக்கலவரத்தினால் பெரும்பாலானோர் மேற்கு ஐரோப்பாவிற்கும், வட அமெரிக்காவிற்கும், அவுஸ்திரேலியாவிற்கும் புலம் பெயர்ந்து சென்றுள்ளார்கள். இவ்வாறு புலம் பெயர்ந்து சென்றவர்களில் கணிசமானோர் தங்களுடைய துன்பங்கள் மற்றும் அனுபவங்களை எழுத்துக்களில் வெளிப்படுத்தியுள்ளார்கள். இதற்குப் புலம்பெயர் நாட்டில் இருந்து வெளிவந்துள்ள சஞ்சிகைகள் களமமைத்துக் கொடுத்துள்ளன. அந்தவகையில் புலம்பெயர் எழுத்தாளர்கள் மத்தியில் இருந்து பல சிறுகதைகள் வெளிவந்துள்ளன. இச்சிறுகதைகளில் புலம்பெயர்ந்து சென்றுள்ள பெண்களின் பிரச்சினைகள் […]
சுயநலம்
உதவி செய்வதே கடமையென்பான் உண்மையில் யாருக்கும் உதவமாட்டான் அதர்மம் செய்வது பாவமென்பான்– ஆனால் அதர்ம வழியில் சென்றிடுவான்! தாய் தந்தையே தன் கண் என்பான் தாய் என்றே கருத்திற் கொள்ளான் அன்பே வாழ்வின் உயர்வென்பான் அன்பின் இலக்கணமே அறிந்திடான்! பிறரில் குறைகாண்பது தவறென்பான்– ஆனால் பிறரில் குறையை மட்டுமே அவன் காண்பான் வாய்மை சொல்வதே உயர்வென்பான் வாய் திறந்து அதைச் சொல்லமாட்டான்! உத்தமனாய் வாழ்வதே உயர்வென்பான் உலகில் அதமனாய் வாழ்ந்திடுவான் கள்ளும் களவும் […]
பக்ரீத்
ஏக இறைவனின் திருப்பெயரால், முஸ்லீம்கள் உலகளவில் ஆண்டுதோறும் இரண்டு பண்டிகைகளைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். ஒன்று, இறை வேதமாகிய திருக்குரான் மனிதர்களுக்கு அருளப்பட்டதைக் கொண்டாடும் ஈகைத் திருநாளான “ரமலான்”. மற்றொன்று தியாகத் திருநாளான “பக்ரீத்” பண்டிகை. இந்தக் கட்டுரையில் பக்ரீத் பண்டிகையைப் பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம். பக்ரீத் பண்டிகை பன்னிரண்டாவது இஸ்லாமிய மாதமான “துல்-ஹிஜ்ஜாஹ்”வின் பத்தாவது நாள் ஆண்டுதோறும் முஸ்லிம்களால் கொண்டாடப்படுகின்றது. இந்த நாளை “ஹஜ்” பெருநாள் என்றும் கூறுவார்கள். “ஈத் உல் அத்ஹா” என்று அரபி மொழியிலும் […]







