\n"; } ?>
Top Ad
banner ad

admin

rss feed

admin's Latest Posts

இங்கேயும் … இப்போதும் ….

இங்கேயும் … இப்போதும் ….

“டேய்… உங்க பாண்டிச்சேரியில தெருவுக்கு நாலு ஆஸ்பிட்டல் கூட இருக்கலாம். ஆனா… அங்க எத்தன  ஆஸ்பிட்டல் இருந்தாலும், பெரியப் பெரிய சர்ஜெரிக்கெல்லாம் அங்க இருந்து பெரும்பாலானவங்க  சென்னைக்குத்தாண்டா  வராங்க. மாஸ்டர் செக்-அப் செஞ்சிக்கப்போறேன்னு சொல்ற…. பேசாம கெளம்பி இங்க வாடா. ஒரே நாள் தான். எட்டு ரூவால இருந்து பத்து ரூவாக்குள்ள முடிஞ்சிடும். ” குமரேசன், சந்தானத்திடம் வம்படித்தான். “குமரேசா… நீ சொல்றதெல்லாம் சரிதான். இங்கியே கூட எனக்கு தெரிஞ்ச நர்ஸ் ஒருத்தவங்க, சென்னைல போய் செய்துக்கிட்டா… […]

Continue Reading »

நிழல் படங்களும்….  நிஜ  ஜடங்களும்….!

நிழல் படங்களும்….  நிஜ  ஜடங்களும்….!

இந்தச்  சிறுகதையானது, தமிழர்  வாழ்வியலில், வசதி – வாய்ப்புக்களின்  அடிப்படையால், தோன்றும்  போலித்தனமான  ஏற்றத்தாழ்வு  மனப்பான்மையானது,  ஆங்கே  கீழ்மட்ட நிலை  சார்ந்தோரை, உண்மையிலேயே  எப்படியெல்லாம்  பாதிக்கிறது  என்பதையும்….. ஆங்காங்கே, பரவலாகப்  பட்டுக்கொண்ட – கேள்விப்பட்ட – சொரியலான  அனுபவங்கள்,  ஆகியன  உள்ளத்தில்  தோற்றுவித்த  வலிகளின்  உந்துதலாலும், பிறந்த  கற்பனையாகும்.   “பாரும்மா…. இன்னைக்கு  நாங்க  உமேசுவீட்டுக்கு  வெளையாடப் போனோமா, அப்போ என்னையும் தம்பிப் பயலையும் பாத்து பசங்க  எல்லாரும் , “கிழிஞ்ச சட்டை…. கிழிஞ்ச சட்டை”ன்னு  சொன்னாங்கம்மா….” ஏழுவயசுக் […]

Continue Reading »

அப்பா…

அப்பா…

டெஸ்பாட்ச் சுந்தரம் தான் அப்பா ரிசப்ஷனில் வந்து காத்திருக்கிற விஷயம் சொன்னான். அப்பா எப்போதாவது இப்படி ரிசப்ஷனில் வந்து  உட்காருபவர் தான். பெரும்பாலும் அம்மாவோடு சண்டை போட்ட நாட்களாக அவை இருக்கும். சண்டை என்றால்,  அம்மா பாட்டுக்கு பேசிக்கொண்டே போவாள். அப்பா மௌனமாக கேட்டுக் கொண்டிருப்பார். பொறுக்க முடியாது போகிற சில நாட்களில் மட்டும் சட்டையை மாட்டிக்கொண்டு இப்படி ரிசப்ஷனில் வந்து உட்கார்ந்து கொள்வார்.  அதைப் போன்ற சமயங்களில் அப்பாவைப் பார்ப்பதற்கு ரொம்பப் பாவமாக இருக்கும். அவன் […]

Continue Reading »

பேரிடர் காலத்தில் தமிழால் இணையும் அட்லாண்டாத் தமிழர்கள்

பேரிடர் காலத்தில் தமிழால் இணையும் அட்லாண்டாத்  தமிழர்கள்

படுப்பினும் படாது, தீயர் பன்னாளும் முன்னேற்றத்தைத் தடுப்பினும், தமிழர் தங்கள் தலைமுறை தலைமுறைவந்து அடுக்கின்ற தமிழே! பின்னர் அகத்தியர் காப்பியர்கள் கெடுப்பினும் கெடாமல் நெஞ்சக் கிளைதொத்தும் கிளியே வாழி!                                                            -பாரதிதாசன்   மேற்கூறிய பாரதிதாசனாரின் பாடலுக்கிணங்க  அட்லாண்டா மாநகரத் தமிழ் சங்கம்  இனி வரும்  தலைமுறைக்கும் தமிழைக்  கொண்டு சேர்க்கும் வகையில் பாடுபடுகின்றது என்று சொன்னால் அது மிகையாகாது! ஆமாம்,தமிழே! அமுதே! என்ற நிகழ்ச்சியின் வாயிலாக வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஒருவர் படித்த புத்தகத்தின் […]

Continue Reading »

சுவடி கூறும் தமிழ் மருத்துவ முறைகள் நூல் ஓர் ஆய்வு

சுவடி கூறும் தமிழ் மருத்துவ முறைகள் நூல் ஓர் ஆய்வு

நூற்றாண்டைக் கடந்து உலகளாவிய நிலையில் சரித்திரம் படைத்த நூலகங்களுள் தஞ்சை சரசுவதி மகால் நூலகமும் ஒன்றாகும். இந்நூலகமானது பல்துறை சார்ந்த ஓலைச்சுவடிகளின் கருவூலமாகத் திகழ்கிறது. எண்ணற்ற மருத்துவச் சுவடிகளைக் கொண்டுள்ளது. அவை நம் பழந்தமிழரின் இயற்கை மருத்துவ அறிவையும் நோய் தீர்க்கும் மகத்துவத்தையும் வெளிப்படுத்துகின்றன. அவ்வகையில் சுவடியிலிருந்து பதிப்பிக்கப்பெற்ற தமிழ் மருத்துவ முறைகள் எனும் நூலினை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது. நூல் உருவாக்கம்  ஒவ்வொரு ஆண்டும் தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மராத்தி, […]

Continue Reading »

என்னால் சுவாசிக்க முடியவில்லை

என்னால் சுவாசிக்க முடியவில்லை

“அம்மா .. என்னால் சுவாசிக்க முடியவில்லை .. ” அமெரிக்க நாட்டுப் போர் வீரர் நினைவு நாளான மே மாதம் 25 ஆம் நாள், மினியாபொலிஸ் நகரின், நிழற் சாலையில் ஒலித்த ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் ஓலக் குரல் பலரது மனங்களில் ஆழப் பதிந்து அமெரிக்கா முழுதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. செய்தித் தாள், சமூக ஊடகங்கள் முழுதும் இந்த மனிதரின் முகம் வியாபித்து உலக மக்கள் பலருக்கும் இந்த மனிதரின் முகம் பரிச்சயமாகிப் போனது. இந்தளவுக்குப் பிரபலமடைய ஜார்ஜ் […]

Continue Reading »

கம்பனடிப்பொடி

கம்பனடிப்பொடி

கம்பன்ன்ன்ன்ன் வாஆஆஆஆஆஅழ்க………. கம்பன்ன்ன்ன்ன் புகழ் வாஆஆஆஆஆஆழ்க…… கன்னித் தமிழ் வாஆஆஆஆஆஆழ்ழ்க……… தென் தமிழகத்தில், குறிப்பாகச் செட்டிநாட்டு ஊர்களில், பிறந்த நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மேற்சொன்ன பாட்டும், அது பாடப்படும் ராகமும் காதுக்குள் உடனடியாக ரீங்காரமிடத் தொடங்கும். அந்த ரீங்காரத்துடன் கூடவே, சட்டையணியாத மார்புடன் ஸ்படிக மணிமாலை, மூக்குக் கண்ணாடி, நெற்றி நிறைய விபூதி அணிந்த வழுக்கைத் தலையுடன் சாமுத்ரிகா லக்‌ஷணம் நிரம்பப் பெற்ற அந்தக் கண்டிப்பு முகம் கண்களுக்குள் தோன்றும். அந்த முகத்துக்குச் சொந்தக்காரர் கம்பனடிப்பொடி என […]

Continue Reading »

தண்டனை

தண்டனை

இந்திய பீனல் கோடுகள் வளைந்து நெளிகின்றன!!   நீதி தேவதை காதுக்கும் கவசம் கேட்கிறாள்!   சட்டங்கள் தடுமாறுகின்றன புதிதாய்க் குற்றங்கள் !!   யார் கொடுத்தச் சுதந்திரம்? அன்னாசியில் அணுகுண்டு வைத்து – அப்பாவி யானைக்குக் கொடுக்க!   கருவறைக்குள்ளும் கை குண்டு வைப்பார்களோ?   அரஜாகத்தின் உச்சகட்டம் – இந்த நரகாசுரர்கள் தண்டிக்கப்படுவார்கள்!!   எடுக்கட்டும்  கடவுளவன் இன்னொரு அவதாரம் தீபாவளிப் போல்- இன்னொரு பண்டிகை வரட்டும்!!   கடவுளின் சொந்த நாட்டில் இவ்வரக்கர்கள் […]

Continue Reading »

இசைஞானி பிறந்தநாள் சிறப்பு உரையாடல்

இசைஞானி பிறந்தநாள் சிறப்பு உரையாடல்

ஜூன் 2 அன்று 77வது பிறந்தநாள் கொண்டாடும் இசைஞானி இளையராஜா அவர்களின் சிறப்பைப் பற்றி, மினசோட்டாவைச் சேர்ந்த இசை கலைஞர்கள் திருமதி. லக்ஷ்மி, திரு. செந்தில், திரு. சதீஷ், திரு. சரவணன் மோகன் அவர்களுடன் ஒரு இசை சார்ந்த உரையாடல். நல்ல கேட்பனுபவத்திற்கு ஹெட்போனில் கேட்கவும். உரையாடியவர் – சரவணகுமரன்.

Continue Reading »

அமெரிக்கத் தேர்தலில் என்ன நடக்கிறது?

அமெரிக்கத் தேர்தலில் என்ன நடக்கிறது?

கடந்த பகுதியில் அமெரிக்கத் தேர்தல் நடைமுறைகள் குறித்துப் பார்த்தோம். இப்பகுதியில் அமெரிக்கத் தேர்தல் நடைமுறையில் இருக்கும் சிக்கல்கள் குறித்தும், தற்போதைய 2020 ஆம் ஆண்டின் தேர்தல் நிலவரம் குறித்தும் நம்மிடம் தகவல்களைப் பகிர்கிறார், திரு. ரவிக்குமார் சண்முகம் அவர்கள். வாருங்கள்.. கேளுங்கள்.. பகிருங்கள்.. உரையாடியவர் – சரவணகுமரன்.

Continue Reading »

ad banner
Bottom Sml Ad