admin
admin's Latest Posts
முனைவர்
“பழங்காநத்தம் ஸ்டாப்பிங்கெல்லாம் இறங்கிக்கங்க !” என்று நடத்துனர் அறிவித்ததும், வேகம் குறைந்து வந்து நின்ற அந்த அரசுப்பேருந்திலிருந்து நிவேதிதா வெகு ஜாக்கிரதையாகச் சாலையில் இறங்கிக்கொண்டாள். “அம்மா, நீங்க சொல்ற இடம் , ரெயில்வே கேட்டைத் தாண்டி போனா வரும்னு நினைக்கிறேன். விசாரிச்சுப் போயிக்கங்கம்மா !” என்றார் நடத்துனர். “ரொம்ப தேங்க்ஸ் சார்! ” என்றாள் நிவேதிதா. ‘இது தான் பழங்காநத்தத்துக்கு முந்தின ஸ்டாப்பிங். முதல்லயே கண்டக்டர் கிட்ட சொல்லி வெச்சது நல்லதாப்போச்சு’ என்று நினைத்துக்கொண்டாள். மதுரை வெயில் […]
மனக்குப்பை
பீரோவுக்கு அடில, கட்டிலுக்கு அடிலன்னு விட்டுப் பெருக்கணும்னு எத்தனை தடவை சொன்னாலும் தெரியறதில்ல….! தன் கணவரிடம் அந்தம்மாள் சொல்லியதே காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தது சம்பங்கிக்கு. சாலையில் போய்க் கொண்டிருந்த லாரியின் பேரிரைச்சலை மீறி அந்தக்குரல் இவள் காதில் அசரீரியாய் ஒலித்தது. யதார்த்தமாய்ப் பேசிய பேச்சாய் அதை எப்படிக் கொள்வது? வழக்கத்திற்கு மாறாய் சற்றுச் சத்தமாகத்தானே அந்தக் குரல் ஒலித்தது. அருகில் நின்று பல் துலக்கிக் கொண்டிருந்த கணவரிடம் அப்படிச் சத்தமாய்ச் சொல்ல வேண்டிய அவசியம்தான் என்ன? […]
நெஞ்சு பொறுக்குதில்லை
நெஞ்சு பொறுக்குதில்லை துஞ்ச விடுவதுமில்லை வெஞ்சினம் மிகுந்து கிஞ்சித்தும் இரக்கமின்றி வஞ்சித்துக் கொன்றவர்க்கு அஞ்சி நடுங்குவமோ கெஞ்சிக் குழைவமோ எஞ்சியிருக்கும் நாளெல்லாம் மிஞ்சிநிற்குமே இவ்வடுவும் வனத்து விலங்கதுவும் மனவொழுக்கம் கொண்டிருக்கும் இனத்துச் சோதரரை சினத்துக் கொல்லாதடா! அனத்திக் கெஞ்சியவரை கனத்தக் கழியாலடித்து பிணமாக்கி மகிழ்ந்தாயே தினவெடுத்த கல்நெஞ்சனே நனவுடன்தான் இருந்தாயா? அதிகாரம் எவர்தந்தார் சதிகாரச் செயலதற்கு? விதிபோற்றவே காவலர் விதிமுடிக்கும் காலனல்ல உதிரஞ்சொட்டக் கதறியவரை சிதிலமாக்கித் தின்றாயே! மதியிழந்து போனீரே! உதிர்ந்தவை இருஉயிரென்றாலும் அதிர்ந்தது அகிலமன்றோ? […]
கொலைக் குற்றம்
கண்களைக் குத்திக் கிழித்திடும் இமைகள்! நாவினைக் குத்தி நறுக்கிடும் பற்கள்! விரல்களில் புகுந்து வெளிவரும் நகங்கள்! பயிரினை மேய்ந்து பிரித்திடும் வேலிகள்!!! சட்டங்கள் இயற்றிடத் துறையொன்று உண்டு! இயற்றியதைக் காத்திட காவலென்ற ஒன்று! காத்திடும் வேலையை அழித்தலாக்கியது என்று? வேலையைக் கொலையாய் மாற்றியது இன்று!!! கால்வயிற்றுக் கஞ்சிக்குக் கால்கடுக்க உழைத்தவர்! காலையில் தொடங்கி காரிருளில் முடிப்பவர்! காலம்பல உழைத்தாலும் காசுபணம் காணாதவர்! காவல்துறை வன்முறைக்குக் காவாகிப் போனவரவர்!!! அப்பாவைக் கண்முன்னே அடித்து நொறுக்குகையில் […]
அவன் போராளி
வெடித்து முழங்கிய துப்பாக்கிச் சின்னங்களால் துளையுண்டு உயிர்த்தெழுந்த வெள்ளைப் பூக்களுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தக்கூடப் பிரக்யை அற்றுத் தொலைவில் தன் பார்வையைப் பதித்தவாறே வருகிறான் அவன் நிற்கக்கூட நாதியற்றுத் தளர்ந்துவிட்ட வயோதிப மாதுபோல அவன் சுமந்து வந்த AK-47… பசித்திருக்கிறது… “பையில் பாணும் தண்ணீரும் இருக்கிறது இரவு விடிகிறபோது அதிகாலையில் பார்த்துக்கொள்ளலாம்” என முணுமுணுக்கிறது அவன்வாய் இறந்துபோன தன் சகாக்கள் பற்றிய நினைவுகளோடு -தூக்கிப்போகிறான். அரையிருட்டில் சரசரவெனத் தூறிய மழைக்குள் சல்லடை போடுவதற்குப் […]
அபியும்..அம்மாவும்..
நாய் வளர்க்க வேண்டும் என்று திடீரென்று ஒரு நாள் அபிக்குத் தோன்றி விட்டது. ” அம்மா..நம்ம வீட்டுல நாய் வளர்க்கலாம்மா..” என்றாள் சமையலறையில் வந்து கொஞ்சிக் கொண்டு. ‘அதான் உன்னை வளர்க்கிறோமே..போதாதா..” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும் சொல்லவில்லை.. ” நாயெல்லாம் ரொம்பக் கஷ்டம் அபி..நம்மால் முடியாதும்மா.. ” “ஏன் முடியாது..என் ஃப்ரெண்ட்ஸ் எல்லார் வீட்டுலேயும் வளர்க்கிறா ? ஸ்கூல்ல அவங்கவங்க அவங்கவங்க நாயைப்பத்திச் சொல்லும்போது எனக்கு எத்தனை ஆசையா இருக்கு தெரியுமா..” ” நீ ஸ்கூலுக்கு […]
இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 1
இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 1 கவியரசர் கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் பிறந்தநாளை (ஜூன் 24) முன்னிட்டு அவர்கள் இருவரும் இணைந்து படைத்த பாடல்களின் சிறப்பைப் போற்றும் உரையாடல். வாருங்கள்… கேளுங்கள்… பகிருங்கள்… பங்கு கொண்டோர் – ரவிக்குமார், மதுசூதனன், ராம் ஒலித் தொகுப்பு – சரவணகுமரன்
வேற்றுமையைக் காட்டுவது ஏனோ?
சாம்பல் மேடுகள் சரிவரச் சமைக்கிறதா – இன்று போரில் உயிர்த்த வெண்புறாக்களுக்கு விடிவில்லை. மல்லுக்கட்டிப் புறநகர்ச் சமைந்த மாந்தர்க்கில்லை – சரிநிகர் வாழ்விங்கு செல்லரித்துப் போன மனப்புண்ணை ஆற்றுதல்தான் என்ன வகை? மந்திரி சகமாந்தர் என ஆரைத்தான் நம்புவது ஐயோ! வேற்று நாடுகள் தாமும் வேற்றுமையைக் காட்டுவது ஏனோ? தோலுக்கு ஒவ்வோர் நிறம் சதைத் தொகுப்பிற்கு ஒவ்வோர் நிறை மாந்தர் தம்முன் வேற்றுமைதான் எத்தனையோ! அண்டிப் பிழைக்க வந்து தாய்நாடு நாம் துறந்தோம் வந்துசேர் நாட்டிற்கூடப் பெண்டீர் […]
கடிதம்
“அம்மா இண்டைக்கு போஸ்மென் கெம்பஸ் செலக்சன் லெற்றர் கொண்டு வருவான், கொஞ்சம் கவனமா இருங்க“. “சுமன் மஞ்சுக்கிட்டயும் சொல்லப்பா”. மஞ்சுவை சுமன் அழைத்தபோது “அண்ணா நேற்றுப் புள்ளா அம்மாவும் நானும் கடப்பில காவல் இருந்தனாங்க, இண்டைக்கும் அப்பிடித்தான், அத நீ சொல்லயா வேணும்“. “அதுதானே வாயாடி” எனக்கூறி சுமன் கடைக்குப் புறப்பட்டுச் சென்றான். “அம்மா லெற்றர் வருதோ இல்லையோ றோட்டால போற எந்தப் போஸ்மெனயும் நான் விடுறதாயில்ல” எனக்கூறிக் கதிரை ஒன்றைத் தூக்கிக்கொண்டு வீதியில் உள்ள மரநிழலிற்குச் […]







