இலக்கியம்
2021 ஆஸ்கார் விருதுகள்
உலககெங்கிலும் இருக்கும் திரைப்படக் கலைஞர்களாலும், ரசிகர்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு, கவனிக்கப்படும் ஆஸ்கார் விருதுகளுக்கான விழா, கடந்த வாரயிறுதியில் ஏப்ரல் 25ஆம் தேதியன்று லாஸ் ஏஞ்சல்ஸில், யூனியன் ஸ்டேசன் மற்றும் டால்பி திரையரங்கில் நடைபெற்றது. பிப்ரவரி மாதம் நடைபெறவிருந்த 93 ஆம் ஆண்டிற்கான இந்த விழா, கோவிட் காரணமாக ஏப்ரலுக்குத் தள்ளி வைக்கப்பட்டது. திரையரங்கில் வெளியான படங்கள் மட்டுமின்றி, கடந்தாண்டும், இந்தாண்டும் கோவிட் காரணமாகத் திரையரங்கில் வெளியாகாமல், பல்வேறு ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் இந்தாண்டு ஆஸ்கார் தேர்வில் […]
தேர்தல் கூத்து 2021
தமிழ்நாட்டில் கொரோனாவை மிஞ்சியபடி தேர்தல் ஜூரம் அடிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகத்தின் 16வது சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஏப்ரல் 1 ஆம் தேதி கூட நடத்தி இருக்கலாம். அவ்வளவு வெளிப்படையாக இருக்கக் கூடாது என்பதற்காக 6ஆம் தேதி வைத்து இருப்பார்களோ, என்னமோ!!. அமெரிக்காவிலிருந்து கொண்டு இந்தியாவில் நடக்கும் தேர்தலைப் பற்றிக் கருத்து சொல்ல பயமாக இருக்கிறது. இந்திய இறையாண்மை என்று கடித்து வைத்து விடுவார்களோ என்று டெரராக இருக்கிறது. ஆளுங்கட்சியை ஒண்ணும் […]
ஒரு விசித்திரமான கனவு
அவள் கண்களால் அதை நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை ; அதை பார்த்த பின் நெஞ்சு படபடவென அடிக்க ஆரம்பித்து , மூச்சு வாங்கியது, ஆற்றில் வெள்ளம் பாய்ந்து ஓடுவது போல உடம்பிலுள்ள எல்லா நரம்புகளிலும் இரத்தம் ஓடியது , இரவு 10:00 மணியளவில் அந்த தூரத்து நடைபாதையில் ஒரு சிறு குழந்தை படுத்திருந்தது. தூத்துக்குடி – பேருக்குத்தான் மாநகரம் ஆனால் 10 மணிக்கு ஆள் நடமாட்டமே இல்லாத இந்தத் தெரு பகுதி . அவள் […]
உயரம்
“என்னை எதுக்கு காப்பி ஷாப்புக்கு வரச்சொன்ன.கௌதம் ……..” இருவருக்கென போடப்பட்ட நாற்காலியில் ப்ரீத்திக்கு நேர் எதிரில் அமர்ந்திருந்த கெளதம் காப்பியில் பறந்துகொண்டிருந்த ஆவியைப் பார்த்தவாறு இருந்தான். “வீட்டுல வேண்டான்னு சொல்றாங்க …..அ.. அதுதான் …” “ஓ…….. அப்ப பிரேக் அப்.. அப்படித்தானே …. நல்லாயிருக்கு கெளதம் “ ” ப்ரீத்தி……. புரிஞ்சுக்கோ அதுக்காக நான் உன்ன கூப்பிடுல ……..நம் இப்போ என்ன பண்றதுனு கேக்கத்தான் கூப்பிட்டேன் ………..” ” நீ ஆம்பள தான …….என்ன பண்ணறதுனு […]
ஒரு “டீ” பரிணாமம்
மாலை வெயில் இன்னும் குறையவில்லை. மினசோட்டாவில் கோடைக்கால வருகையைப் பறைசாற்றும் விதமாக ஆறு மணியாகிவிட்டிருந்தாலும் இன்னும் சுள்ளென்று முகத்தில் வெயில் அடித்து மணி மூன்று போல காட்டியது. வீட்டின் வாசலில் வண்டியை நிறுத்தி விட்டு, உள்ளே நுழைந்தாள் மது என்ற மதுரம். வழியில் பூத்துக் குலுங்கத் தொடங்கியிருந்த மலர்கள் இதமாக இருந்தது. கைப் பையை எடுத்துக் கொண்ட பொழுது, அதிலிருந்து அலைபேசி “கிர்ர்” என்று அடித்தது. எடுத்து கையில் பார்த்தாள். “ஹே கங்க்ராட்ஸ் பா ” […]
தமிழ் கவிதாயினிகள்
உலக மகளிர் தினத்தையொட்டி தமிழ் கவிதாயினிகள் குறித்து மதுசூதனனும், சரவணகுமரனும் பேசிய பனிப்பூக்கள் அரட்டை.
மீம் மியாவ் – Invitation for Meme creators
மீம் மியாவ் – உங்கள் கற்பனையை படத்தில் பதிவு செய்யுங்கள், சிறந்தவை நாங்கள் இணையத்தில் பப்லிஷ் செய்கிறோம். அனுப்பவேண்டிய முகவரி : vanakkam@panippookkal.com
தேசம் தெரிந்து கொள்ள விழைகிறது
“பதினெட்டாம்நூற்றாண்டில் வேண்டுமானால் பத்திரிகை மக்களாட்சியின் நான்காம் எஸ்டேட்டாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று அது மற்ற மூன்றையும் விழுங்கிவிட்டது. இன்று பத்திரிக்கை ஜனநாயகத்தை முழுமையாக ஆட்கொண்டுவிட்டது.” –பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த கவிஞரான ஆஸ்கார் ஒயில்ட் ஊடகத்துறையைப் பற்றிச் சொன்னது இது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. மக்கள் உரிமைகளைக் கண்காணித்துக் காக்கும் காவல் நாயாக (Watch dog)இருக்க வேண்டிய ஊடகத்துறை நிறுவனங்களில் சில, ஆள்பவர்களின் மடியில் அமரும் செல்ல நாயாக (Godi […]
இதயத்தில் முள் தோட்டம் (தொடர் கதை – பகுதி 3)
(பாகம் 2) மூன்று மாதங்கள் மிக வேகமாக ஓடிவிட்டது. டி.எஸ்.பி ராஜீவுக்கு எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. எந்தப் பக்கம் சென்றாலும் ஒரு முட்டுச் சுவர்! அவருக்கு மேலிடத்திலிருந்தும், பத்திரிக்கை மற்றும் ஊடகங்களிலிருந்தும் நிறைய பிரஷர் வர ஆரம்பித்தது. அதனால் சந்தேக நபர்களில் சிலரை மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருந்தது. எந்த ஆதாயமும் இல்லை, அவர்கள் அவரை மேலும் குழப்பும் விதமாகப் புதிய “லீட்ஸ்” கொடுத்தனர். அவரது நேரத்தை மேலும் அது வீணடித்தது. அன்று புதன்கிழமை. […]
பெருந்தொற்றுக்கால இந்தியப் பயணம் – 2
(பாகம் 1) அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்த பிறகு, சாதாரணமாக நிகழும் பல விஷயங்கள் முதல் பார்வையில் வித்தியாசமாகத் தெரிந்தன. அனைத்துக் கடைகளும் திறந்து இருக்க, கடைக்காரர்களும் சரி, வாடிக்கையாளர்களும் சரி, மாஸ்க் இல்லாமல், பயம் இல்லாமல் சென்று வந்து கொண்டிருந்தனர். கொரோனா லாக் டவுன் தொடங்கிய காலத்தில், மாஸ்க் போடாத மக்களைப் போலீஸ்காரர்கள் விரட்டி பிடித்து அபராதம் வசூலித்ததை டிவியில் பார்த்திருக்கிறேன். இப்போது போலீஸ்காரர்களே மாஸ்க் போடாமல் கேஷுவலாகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது, கொரோனாவிற்கு […]






