இலக்கியம்
ஹலோ, நான் சுந்தர் பேசறேன் – பகுதி 1
பின்னணி தகவல் : டி.எஸ்.பி ராஜீவ், அவரது சைடு கிக் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் டிரைவர் மாணிக்கம் சென்னை நகரத்தில் நடக்கும் குழப்பமான குற்ற வழக்குகளைத் தனது கூர்மையான துப்பறியும் திறன் மூலம் தீர்ப்பதில் வல்லவர்கள். அவர்களால் தீர்க்கப்பட்ட பிற குற்ற வழக்குகளை படிக்க இந்த பனிப்பூக்கள் இணைப்பைச் சொடுக்கவும். ***** திருவான்மியூரில் உள்ள துணைக் காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) ராஜீவின் குடியிருப்பில் டிரைவர் மாணிக்கம் போலீஸ் ஜீப்பை நிறுத்தினான். அந்தச் சத்தத்தைக் கேட்டு உள்ளிருந்து வெளியே […]
திருமதி. ‘ஆகாச’ வேணி
2021 சிறுகதை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை “ஒரே தலையிடியா இருக்கே, புரூ காபி குடிச்சா தான் ஆகும்” என்றபடி துயில் கலைந்து எழுந்தாள் வேணி சுற்றும் முற்றும் பார்த்து குழம்பியவள், “நா எங்கிருக்கேன்? இது எந்தூரு? எங்கிருக்கீங்க மாமா?” என பதறியபடி எழுந்தமர்ந்தாள் “பெண்ணே” என்றபடி ஒரு வெண்தாடி உருவம் அருகே வர .. “யாருங்க நீங்க? வள்ளுவர் தாத்தா மாதிரி இருக்கீங்க” “நான் வள்ளுவனல்ல பெண்ணே, வல்லவன்” “அது சிம்பு நடிச்ச படமாச்சே” “யாரவன் சிம்பு?” “டி.ஆர் புள்ள” “டி.ஆரா?” “என்னங் […]
முதிர்காதல்
புத்தாடை அணிந்து புறப்பட்டுச் செல்கையில் புழுதி பறந்திடும் புல்லட்டின் வேகத்தால்! புரவியில் விரைந்திடும் புருஷோத்தமன் என புன்னகை மத்தியில் புருஷனாய் வரித்திட்டாள்! நடைபாதை போகையிலே நளினமாய்த் தொடர்ந்திடுவான்! நகைத்துத் திரும்பிடிலோ நயமாய் மறைந்திடுவான்! நமுட்டுச் சிரிப்புடனே நயனமிவன் மீதிருக்க நம்பிக்கை ஒளிதந்து நட்பாய் இதழ்குவித்தான்!! காலையில் எழுகையில் காளையின் நினைப்பு! கால்வண்டிப் பயணத்தில் காதலனைத் தேடல்! காலம் முழுக்கக் காதலாய் வாழ்வோமென காரிகை அவளும் காந்தர்வமாய் மணந்திட்டாள்! வழிபாட்டுத் தலங்களிலும் வழிபடும் வேளையிலும் […]
பசைமனிதன்
“நீ புடுங்குனது பூராவுமே தேவையில்லாத ஆணிதான்” அப்படி’ன்னு சொன்னா அது எப்போதும் உண்மையாக இருப்பதில்லை. இப்படித் தான் 1968 ஆம் ஆண்டு மினசோட்டாவின் 3M நிறுவனத்தில் பணியாற்றிய ஸ்பென்சர் சில்வர் (Spencer Silver) என்ற ஆராய்ச்சியாளர், விமானப் பாகங்களில் பயன்படுத்துவதற்கான, நன்றாக வலிமையாக ஒட்டும் தன்மையில் ஒரு பசையைக் கண்டுபிடிக்க முயற்சிக்க, அந்த நோக்கத்தை அடைய முடியாமல், மிகவும் இலேசாக ஒட்டும் பசையைத் தான் அவரால் உருவாக்க முடிந்தது. இந்த மிதமான பசையை ‘தேவையில்லாத ஆணி’ என்று […]
நான் ஒரு தடவை முடிவு செஞ்சிட்டா….
2021ஆம் ஆண்டு பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை ‘அய்யயோ என்னால முடியல. Zumba வும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்’ என்று அடுத்த வகுப்புக்கெல்லாம் போகாம இருக்கவில்லை. தொடர்ந்து போனேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அந்த ஒரு மணி நேரம் வியர்வை சொட்டச் சொட்ட உடற்பயிற்சி மாதிரி அதை செய்திட்டு வந்தது மனசுக்கு உற்சாகமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருந்தது. எனவே நாம ஏதாவது ஒன்னு புதுசா செய்யனும்னு ஆசைபட்டாலோ அல்லது ஏதாவது வகுப்புல சேரணும்னு ஆசைபட்டாலோ […]
ஓடிடியின் ஓட்டம்
பெருந்தொற்றுக் காலத்தில் லாக்டவுன் என்பது பலரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது. முக்கியப் பொழுதுபோக்கு துறையான திரையரங்கு வணிகத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. அதே சமயம், ஓடிடி என்ற பொழுதுபோக்கு துறைக்கு இது வசந்த காலமாகிவிட்டது. பல ஆண்டுகளாக இத்துறை இயங்கி வந்தாலும், கோவிட்-19 இத்துறையின் முன்னேற்றத்தைத் தூண்டி விட்டுக் கேம் சேஞ்சராக உதவியது. தெருக்கூத்து, நாடகம், திரைப்படம், தொலைகாட்சி, சிடி, டிவிடி என்று கலை படைப்புகள் நம்மை வந்து சேரும் முறைகள் காலத்துடன் மாறிக் கொண்டே தான் […]
நுண் நெகிழி
“எங்கும் நிறைந்திருப்பான் இறைவன்” என்பார்கள். இறைவனை ஓவர்டேக் செய்து கொண்டு இன்னொரு விஷயம் உலகம் முழுக்க நிறைந்து வருகிறது. அது தான் நுண் நெகிழி. ஆங்கிலத்தில், மைக்ரோ ப்ளாஸ்டிக் (Micro plastic). ப்ளாஸ்டிக் தெரியும். அது என்ன மைக்ரோ ப்ளாஸ்டிக்? அளவில் மிகவும் சிறியதாக, அதாவது 5 மில்லிமீட்டருக்கும் குறைவான அளவில் இருக்கும் ப்ளாஸ்டிக் துண்டுகளை மைக்ரோ ப்ளாஸ்டிக் என்கிறார்கள். நமக்குத் தெரிந்த ப்ளாஸ்டிக் அபாயங்களை விட, இந்த மைக்ரோ ப்ளாஸ்டிக் மூலம் உண்டாகும் அபாயங்கள் ரொம்பவும் […]
வேலைத் தளத்திற்கு போக முடியாத போது விடுபடுவது என்ன?
சென்ற 30 வருடங்களில் நான் பல தரப்பட்ட பதிப்பகங்களில் தொழில் பார்த்து வந்துள்ளேன். இவற்றில் பல நிறுவனங்கள் பல்லாயிரம் ஊழியர்களைக் கொண்டவை. தற்போது நான் பணிபுரியும் நிறுவனம் சமூகச் சேவை தாபனம் இதன் மினியாப்பொலிஸ் காரியாலயம் 80 ஊழியர்களைக் கொண்டது. கணினி மூலம் பணியாற்றும் சில ஊழியர்கள் போன்று நானும் கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக வீட்டிலிருந்தபடியே தொலைபேசி கணினி வழியே, ZOOM, MS Team போன்ற மென்பொருட்கள் மூலம் வேலை செய்து வருகிறேன். எனது […]
செம்மாணிக்க சிறு கழுத்து தேன் குருவி (Ruby-throated hummingbird (Archilochus colubris))
எமது மாநிலத்தில் மே மாதம் என்றால் தாவரங்கள் துளிர்த்துப் பூத்துக் குலுங்க, தேனீக்கள் ரீங்காரம், பாடும் பரவசப் பட்சிகள் கேட்க, விதம் விதமாகக் கூடு கட்டி முட்டைகள் இட்டு குஞ்சுகள் வெளிவரும் காலம் எனலாம். இதன் போது வெளியில் பொடிநடை போட்டு அயல் அருவிக் காடுகள், பூங்காக்கள், ஏன் உங்கள் வீட்டுப் பின் பகுதியில் பறவைகள் பலவற்றைப் பார்த்து அனுபவிக்கலாம். ஆம் இது இளவேனில் கால இன்பமயம். அமெரிக்கக் கண்ட வெப்ப வலயத்தில் பலநூறு தேன் குருவிக் […]






