Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

அன்றாடம்

IAMன் வன்முறை இல்லாத வாரம் 2022

IAMன் வன்முறை இல்லாத வாரம் 2022

வட அமெரிக்காவில் உள்ள மின்சோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள IAM (Indian Association of Minnesota) என்ற தொண்டு நிறுவனம் மற்றும் உள்ளூரில் உள்ள அமைந்துள்ள மற்ற தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து அக்டோபர் இரண்டாம் தேதியை அகிம்சை வாரத்தின் கடைசி நாளாகக் கொண்டாடியது.  இந்த விழா  மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள  செயின்ட் பால்  நகரில் அமைந்துள்ள மினசோட்டா வரலாற்று மையத்தில் (Minnesota History Center) நடைபெற்றது. அக்டோபர் இரண்டாம் தேதி என்றால் நினைவுக்கு வருவது மகாத்மா காந்தி அவர்களது […]

Continue Reading »

அமெரிக்க கொலு 2022

அமெரிக்க கொலு 2022

இந்தியாவில் இருந்து பல ஆயிரம் மைல்கள் தள்ளி இருந்தாலும், நமது கலாச்சாரம் நம்முடன் இன்றும் நெருக்கமாகத் தான் இருக்கிறது. கொரோனா என்ற காலகட்டத்தைத் தாண்டி இப்பொழுது  வழக்கமான வாழ்க்கைக்கு வந்து கொண்டிருக்கையில், நவராத்திரி கொலு இந்த ஆண்டு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கொலு வைக்கும் வழக்கம் உள்ள குடும்பத்தினர், அந்த வழக்கத்தைக் கைவிடாமல் மினசோட்டாவிலும் மற்ற வட அமெரிக்க மாநிலங்களிலும்  உள்ள குடும்பத்தினர், நண்பர்களுடன் இணைந்து கொலு வைத்து நவராத்திரியைக் கொண்டாடினர். தங்கள் வீட்டு கொலு பொம்மைகளின் […]

Continue Reading »

பொன்னியின் செல்வன் பாகம் 1

பொன்னியின் செல்வன் பாகம் 1

தமிழனின் நீண்ட நாள் கனவு, பொன்னியின் செல்வனைத் திரையரங்கில் சென்று பார்ப்பது. 1950களில் தொடர்கதையாக வெளிவந்த பொன்னியின் செல்வனை, முதலில் எம்.ஜி.ஆர் 70களில் திரைப்படமாக உருவாக்க முனைந்தார். பிறகு, கமலஹாசனும் முயன்றார். அந்த வரிசையில் மணிரத்னமும் பல ஆண்டுகளாக முயற்சித்து வந்தார். அதற்கான காலம் தற்போது தான் வந்துள்ளது என்று கூற வேண்டும். பொன்னியின் செல்வன் நாவலின் சிறப்பு என்று சொல்ல பல விஷயங்கள் உள்ளன. அந்த நாவலுக்கான வரவேற்பு, கதை எழுதப்பட்ட காலத்தில் மட்டுமல்ல, தற்போதும் […]

Continue Reading »

இலகுவான ஆப்பிள் பை (Apple Pie)

இலகுவான ஆப்பிள் பை (Apple Pie)

இந்த எளிதான ஆப்பிள் பை விஸ்கொன்சின் மாநில பல்கலைக்கழக தோழியின் தாய் அளித்த சமையற்குறிப்பு. ஆப்பிள் அறுவடை ஆரம்பிக்கும் செப்டெம்பர் மாதத்தில், இந்த இலகு முறை ஆப்பிள் பையை செய்ய விரும்புவதுண்டு. நான் பெரும்பாலும் நறுமணத்திற்கு ஜாதிக்காய் (nutmeg) சிறிதளவு சேர்க்கிறேன்; நீங்கள் விரும்பினால் சேர்த்துக்கொள்ளலாம். தேவையானவை       9 அங்குல இரட்டை மேலோடு ஆப்பிள் பைக்கு, 1  தொகுப்பு (14.1 அவுன்ஸ்) பேஸ்ட்ரி தேவை.            உள்ளூர் மளிகைக் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்.   […]

Continue Reading »

உட்பெரி டேஸ் 2022 (Woodbury Days)

உட்பெரி டேஸ் 2022 (Woodbury Days)

வட அமெரிக்காவில் கோடை காலம் வந்து விட்டால் போதும் மக்கள் தங்களுக்கும் சிறப்பான கொண்டாட்டங்கள், விழாக்கள் என பலவிதமான  விழாக்களை சிறப்பாக கொண்டாடுவார்கள். வடஅமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள உட்பரி நகரில் ஆண்டு தோறும் உட்பெரி டேஸ் என்ற பெயரில் பெரிய திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தத் திருவிழாவில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளுக்கு மத்தியில், பொழுதுபோக்கு விளையாட்டுக்கள், […]

Continue Reading »

மினியாபொலிஸில் ஏ.ஆர்.ரஹ்மான்

மினியாபொலிஸில் ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர். ரஹ்மான் கச்சேரியை நேரில் பார்க்க வேண்டும் என்பது ஒரு பெரும் ஆசையாக ஒரு காலத்தில் இருந்தது. 2015 ஆம் ஆண்டு, சிகாகோ சென்று அந்த ஆசையைப் பூர்த்திச் செய்தாகிவிட்டது. 2020 ஆம் ஆண்டுத் திட்டமிடப்பட்டிருந்த ஏ.ஆர். ரஹ்மானின் அமெரிக்கா இசை பயணத்தில் மினியாபொலிஸ் இடம்பெற்றிருந்தது மகிழ்ச்சியை அளித்தது. கச்சேரிக்கு என்று வேறு ஊருக்குப் பயணம் செல்ல வேண்டாம் என்பது இதிலுள்ள உபரி மகிழ்ச்சி செய்தி. கொரோனா காரணமாக அப்பயணம் ரத்துச் செய்யப்பட்டது. இப்போது கொரோனா நிலைமை […]

Continue Reading »

கருக்கலைப்புத் தடைச் சட்டம்

கருக்கலைப்புத் தடைச் சட்டம்

சில வாரங்களுக்கு முன்னர், கருக்கலைப்பு உரிமைகளுக்கான சட்டப் பாதுகாப்பை, அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ‘ரோ – வேட்’ வழக்கின் தீர்ப்பு அடிப்படையில், 1973ஆம் ஆண்டு மத்திய அரசு நிறுவியிருந்த கருக்கலைப்பு பாதுகாப்புச் சட்டம், தொடக்க நாள் முதலே பல சர்ச்சைகளைக் கிளப்பி வந்தாலும், கருத்தடைத் தொடர்பான பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்து வந்தது. மத்திய அரசமைப்பின் இச்சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து விட்டதால், கருக்கலைப்பு தொடர்பான சட்டங்களை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் […]

Continue Reading »

சாலைகளைத் தத்தெடுப்போம்

சாலைகளைத் தத்தெடுப்போம்

மினசோட்டாவின் சாலைகளில் பயணிக்கும் போது கவனித்திருப்பீர்கள்!! இந்தச் சாலையைத் தத்தெடுத்திருப்பது என்று ஒரு நபரின் பெயரோ, நிறுவனத்தின் பெயரோ அல்லது அமைப்பின் பெயரோ குறிப்பிடப்பட்டிருக்கும். சாலையைத் தத்து எடுப்பது என்றால் என்ன? பொதுவாக, சாலைகளை அமைப்பது, பழுது பார்ப்பது, சுத்தம் செய்வது போன்ற வேலைகளை அரசு எடுத்து செய்யும். இதில் சுத்தம் செய்து பராமரிக்கும் வேலையில் பொதுமக்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் வாய்ப்பு அளிப்பதே, இந்தத் திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தின்படி மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்ப் பள்ளி […]

Continue Reading »

மினசோட்டாவில் இந்திய சுதந்திர தின விழா 2022

மினசோட்டாவில் இந்திய சுதந்திர தின விழா 2022

இந்தியாவின் 75வது சுதந்திரத் தினத்தை மினசோட்டாவில் உள்ள ‘இந்தியன் அசோசியேஷன்   ஆஃப் மினசோட்டா’ (IAM) அமைப்பினர், செயின்ட் பாலில் உள்ள மாநில தலைமைக் கட்டிட மைதானத்தில் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி நடத்தினர். விழா மைதானத்தில் பல வகையான இந்திய உணவகங்கள், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு இடங்கள், குழந்தைகள் விளையாட பல்வேறு விளையாட்டுப் பகுதிகள், மெஹந்தி கூடங்கள் என நிரம்பி வழிந்தன. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக  இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் சங்கங்களும் […]

Continue Reading »

உட்பெரி கிரிக்கெட் கோப்பை 2022

உட்பெரி கிரிக்கெட்  கோப்பை 2022

இந்தியர்களுக்கு கிரிக்கெட் என்றாலே   பிடித்த விளையாட்டு என்றே கூறலாம். இந்தியாவில் அனைத்து கிராமம் முதல் நகரம் வரை, சிறுவர் முதல் பெரியவர் வரை இந்த விளையாட்டு சிறப்பாக விளையாடப்படுகிறது. இதேபோல் இப்பொழுது அமெரிக்காவிலும் இந்த விளையாட்டு மிகவும் பிரபலம் பெற்று வருகிறது. ஒவ்வொரு நகரிலும் அதற்கென்றே தனிப்பட்ட பயிற்சிப் பள்ளிகளும்  மற்றும் நகரின் ஒத்துழைப்பும் கூடி பயிற்சி அளிக்கப்படுகிறது. இன்னும் ஒரு சில நகரங்களில் கிரிக்கெட் விளையாடுவதற்கு, தனிப்பட்ட மைதானம் அமைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வடஅமெரிக்காவில் […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad