\n"; } ?>
Top Ad
banner ad

வார வெளியீடு

எறிகணை புத்தக அறிமுக விழா

எறிகணை புத்தக அறிமுக விழா

எழுத்தாளர் திரு. தியா காண்டீபன் அவர்கள் சமீபத்தில் எழுதிய ‘எறிகணை’ நூலின் அறிமுக விழா டிசம்பர் 11ஆம் தேதி அன்று பேஸ்புக் நேரலை வாயிலாக நடைபெற்றது. இவ்விழாவில் இப்புத்தகத்தைப் பதிப்பித்த டிஸ்கவரி புக் பேலஸ் திரு. வேடியப்பன், ஈழ எழுத்தாளர் கவிஞர் திரு. தீபச்செல்வன், பனிப்பூக்கள் பதிப்பாளர் திரு. யோகி அருமைநாயகம், முதன்மை ஆசிரியர் திரு. ரவிக்குமார் சண்முகம், பொறுப்பாசிரியர் திரு. மதுசூதனன் ஆகியோர் கலந்துக்கொண்டு நூலாசிரியரை வாழ்த்திப் பேசினர். சாகித்திய விருது பெற்ற மூத்த ஈழ […]

Continue Reading »

நிறம் தீட்டுக

நிறம் தீட்டுக

Continue Reading »

மாநாடு

மாநாடு

அப்துல் காலிக் ஊட்டியில் நடக்கும் தனது தோழியின் திருமணத்திற்குத் துபாயிலிருந்து கோவைக்கு விமானத்தில் வருகிறான். அந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லாத தோழியை அவளுடைய காதலனுடன் சேர்த்து வைக்க, அங்கிருந்து கடத்தி வரும்போது, அவனும் நண்பர்களும் போலிஸ் அதிகாரி தனுஷ்கோடியிடம் மாட்டிக்கொள்கிறார்கள். கோவையில் நடக்கும் ஒரு மாநாட்டில் வைத்து, முதலமைச்சரைக் கொல்லும் திட்டத்தில் அப்துலை பலிகடாவாக்க முயலுகிறார் அந்தப் போலிஸ் அதிகாரி. அதன் மூலம் மதக்கலவரத்தையும் உருவாக்க சில அரசியல்வாதிகளுடன் இணைந்து திட்டமிடுகிறார் அவர். இதுவரை இது ஒரு […]

Continue Reading »

(பேச்சு) சுதந்திர இந்தியா

(பேச்சு) சுதந்திர இந்தியா

இந்தியா எந்த ஆண்டு சுதந்திரம் பெற்றது என்ற கேள்விக்கு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள் என்று சொல்வீர்களானால் உங்கள் வரலாற்றைத் திருத்திக் கொள்வது நலம். 2014ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் நாள், அதாவது திரு. நரேந்திர மோதி பிரதமராகப் பதவியேற்ற தினத்தன்று தான், இந்தியா சுதந்திரம் பெற்றது.  தாதாபாய் நெளரோஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, ராமசாமி முதலியார், ரோமேஷ் சந்தர் பட் , மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், அனி பெசண்ட், […]

Continue Reading »

தமிழ்நாட்டில் சிறார்கள் மீதான பாலியல் வன்முறை

தமிழ்நாட்டில் சிறார்கள் மீதான பாலியல் வன்முறை

குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. நாடு முழுவதும் ஏறத்தாழ 40,000 குழந்தைகள் மீது பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றுள்ளது. இவற்றில் 142 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இந்தாண்டு இதுவரையில் 2,000 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது இந்த அறிக்கை. சில நாட்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில், உயர் பள்ளி மாணவிகள் 2 பேரின் தற்கொலைக்குப் பிறகு பள்ளிகளில் நடக்கும் பாலியல் தொடர்பான விவாதங்கள் மீண்டும் […]

Continue Reading »

இலங்கையில் அயல்நாடுகளின் ஆதிக்கம்

இலங்கையில் அயல்நாடுகளின் ஆதிக்கம்

கோவிட் பெருந்தொற்று ஏற்பட்ட நாளிலிருந்து உலகெங்கும் பல உயிர்கள் இந்த நோய்க்குப் பலியாகின. உயிர்ச் சேதங்கள் மட்டுமின்றி பல நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாயின. குறிப்பாக அன்னியச் செலாவணி, சுற்றுலா வருவாய்களைப் பிரதானமாகக் கொண்ட நாடுகளின் பொருளாதார நிலை முற்றிலுமாக நசிந்து விட்டது என்பதே உண்மை. அத்தகைய நாடுகளில் ஒன்றாக இலங்கையும் இடம் பெற்றிருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஏற்கனவே உள்நாட்டுப் போர், ஸ்திரமற்ற அரசுகள் என பல இன்னல்களைச் சந்திந்து மெதுவாக மீண்டு வந்து கொண்டிருந்த நாடு, […]

Continue Reading »

சங்கீத கலா வித்தகர் டி.என். பாலமுரளி பேட்டி

சங்கீத கலா வித்தகர் டி.என். பாலமுரளி பேட்டி

கனடாவில் வசிக்கும் பன்முக இசை கலைஞர், ஆசிரியர், சங்கீத கலா வித்தகர் திரு. டி.என். பாலமுரளி அவர்கள் பனிப்பூக்களுக்கு வழங்கிய இப்பேட்டியில் அவர் தனது இசை பின்னணி குறித்தும், இசை அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.   உரையாடியவர் – திருமதி. லக்ஷ்மி சுப்ரமணியன் ஒளிப்பதிவு – ராஜேஷ் கோவிந்தராஜ் படத்தொகுப்பு – சரவணகுமரன்

Continue Reading »

மனிதத்தை மறைக்கும் மா’மத’ யானை

மனிதத்தை மறைக்கும் மா’மத’ யானை

மதம் எனும் கட்டமைப்பு அல்லது முறைமை எப்போது தோன்றியது என்பது புதிராகவே உள்ளது. வரலாற்றைப் பார்க்கும் பொழுது ஞானிகள், குருமார்கள் ஒரு குறிப்பிட்ட மதக் கோட்பாட்டை, இலக்கணத்தை வரையறுத்தார்கள் என்பதை அறிய முடிகிறதே தவிர, மதம் எனும் மூல நம்பிக்கை உருவானது எப்போது என்பது தெரியவில்லை. மனிதன் தோன்றிய நாள் முதலே மதமும் தோன்றியது என்று புதைபொருள் ஆய்வாளர்களும் மானிடவியல் ஆய்வாளர்களும் சொல்கின்றனர். இக்கருத்துக்கு ஆதரவாகவோ, முரணாகவோ அழுத்தமான ஆதாரங்களை இவர்களால் தர முடியவில்லை என்பதால் இன்றும் […]

Continue Reading »

வெள்ளை நிறத்தொரு பூனை

Filed in கதை, வார வெளியீடு by on November 9, 2021 0 Comments
வெள்ளை நிறத்தொரு பூனை

எப்பொழுதும் கடும் வெயிலில் வாடும் சென்னை மாநகரம் அன்று  மார்கழி மாதக்  குளிரில் சற்றே நடுங்கி  கொண்டிருந்தது . விடியற்காலை மணி 6:30. பல்லாவரம் பெருமாள் கோவில் வாசலில் ஆண்டாளின் திருப்பாவையை, சில பக்தர்கள் பாடிக் கொண்டிருந்தனர்.  மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்; நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! பெருமாள் கோவில் பொங்கலுக்காக ஒரு கும்பல் காத்திருந்தது.  பாடுபவர்கள் இப்போதைக்கு முடிப்பதாக தெரியவில்லை!!  பொங்கலுக்காக நிற்கும் கும்பல் அங்கிருந்து நகருவதாகவும் தெரியவில்லை!! மாரிமுத்து இதைக் கவனித்தவாறே, தனது […]

Continue Reading »

அண்ணாத்தே திரைப்படம் – ஒரு திறனாய்வு

அண்ணாத்தே திரைப்படம் – ஒரு திறனாய்வு

நவம்பர் 05, 2021 – உலகெங்கிலும் வசிக்கும் தமிழ் மக்களின் தீபத்தருநாளாம் தீபாவளி நாளான இன்று தங்கள் உற்றார் உறவினர் மற்றும் நெருங்கிய நண்பர்களின் இல்லங்களை விட அந்தந்த ஊர்களில் உள்ள திரையரங்குகளை நோக்கிப் படையெடுக்கும் ஒரு மகத்தான நாள். அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினி படம் வெளி வருகிறதென்றால் போதும் – வீடுகள் காலியாகவும் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலை மோதி கரை புரண்டோடுவதும் அதிசயமல்ல. அப்படிப்பட்ட ஒரு தீபாவளித் திருநாளில் நானும் என் தர்மபத்தினியும் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad