வார வெளியீடு
தேசம் தெரிந்து கொள்ள விழைகிறது
“பதினெட்டாம்நூற்றாண்டில் வேண்டுமானால் பத்திரிகை மக்களாட்சியின் நான்காம் எஸ்டேட்டாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று அது மற்ற மூன்றையும் விழுங்கிவிட்டது. இன்று பத்திரிக்கை ஜனநாயகத்தை முழுமையாக ஆட்கொண்டுவிட்டது.” –பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த கவிஞரான ஆஸ்கார் ஒயில்ட் ஊடகத்துறையைப் பற்றிச் சொன்னது இது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. மக்கள் உரிமைகளைக் கண்காணித்துக் காக்கும் காவல் நாயாக (Watch dog)இருக்க வேண்டிய ஊடகத்துறை நிறுவனங்களில் சில, ஆள்பவர்களின் மடியில் அமரும் செல்ல நாயாக (Godi […]
இதயத்தில் முள் தோட்டம் (தொடர் கதை – பகுதி 3)
(பாகம் 2) மூன்று மாதங்கள் மிக வேகமாக ஓடிவிட்டது. டி.எஸ்.பி ராஜீவுக்கு எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. எந்தப் பக்கம் சென்றாலும் ஒரு முட்டுச் சுவர்! அவருக்கு மேலிடத்திலிருந்தும், பத்திரிக்கை மற்றும் ஊடகங்களிலிருந்தும் நிறைய பிரஷர் வர ஆரம்பித்தது. அதனால் சந்தேக நபர்களில் சிலரை மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருந்தது. எந்த ஆதாயமும் இல்லை, அவர்கள் அவரை மேலும் குழப்பும் விதமாகப் புதிய “லீட்ஸ்” கொடுத்தனர். அவரது நேரத்தை மேலும் அது வீணடித்தது. அன்று புதன்கிழமை. […]
பெருந்தொற்றுக்கால இந்தியப் பயணம் – 2
(பாகம் 1) அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்த பிறகு, சாதாரணமாக நிகழும் பல விஷயங்கள் முதல் பார்வையில் வித்தியாசமாகத் தெரிந்தன. அனைத்துக் கடைகளும் திறந்து இருக்க, கடைக்காரர்களும் சரி, வாடிக்கையாளர்களும் சரி, மாஸ்க் இல்லாமல், பயம் இல்லாமல் சென்று வந்து கொண்டிருந்தனர். கொரோனா லாக் டவுன் தொடங்கிய காலத்தில், மாஸ்க் போடாத மக்களைப் போலீஸ்காரர்கள் விரட்டி பிடித்து அபராதம் வசூலித்ததை டிவியில் பார்த்திருக்கிறேன். இப்போது போலீஸ்காரர்களே மாஸ்க் போடாமல் கேஷுவலாகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது, கொரோனாவிற்கு […]
சந்தைப் பெறுமதி: உங்கள் பெறுமதி என்ன?
அது சரி நீங்கள் சம்பள வேலை செய்கிறீர்களா, அல்லது ஓய்வு பெற்று விட்டீர்களா? உங்கள் பெறுமதி என்ன? மேலும் நீங்கள் அமெரிக்காவில் வாழுகிறீர்களா? அப்போ நீங்கள் பொருளாதாரச் சந்தையில் பரிமாறப்படும் பண்டமா? இதென்ன கேள்வி அப்படியெல்லாம் கிடையாது என்று சொன்னீர்களானால் வாருங்கள் உங்கள் சனநாயக சுதந்திரம் பற்றி அலசுவோம். உலகின் பணக்கார நாடு என்று கருதப்படும் அமெரிக்க நாட்டில், சாதாரண மக்கள் வாழ்வு பொதுவாக நலமாக இல்லை என்பது அனைவரும் அறிந்த விடயமே. இது 245 ஆண்டுகள் […]
கவிக் காதல்
“ஏன்னா… என்ன பண்ணிண்ட்ருக்கேள்?” .. கேட்டுக் கொண்டே அடுக்களையிலிருந்து வெளியே வந்தாள் லக்ஷ்மி. இரவு உணவு முடித்து, டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டு, ஆர்ட் புக்கில் எதையோ வரைந்து கொண்டிருந்த கணேஷ், “ஒண்ணுமில்லடி, ஏதோ படம் போட்டிண்டிருக்கேன்…” என்றான். அருகே வந்து என்னவென்று பார்க்க எத்தனித்தாள் லக்ஷ்மி. உடனடியாகப் புத்தகத்தை எடுத்து நெஞ்சோடு அணைத்து, அவளுக்குத் தெரியாமல் மறைத்துக் கொண்டான். “என்ன.. என்ன அப்டி….. நேக்குக் காட்டக் கூடாதோ?” “இல்லடி… சர்ப்ரைஸ்…” கணேஷ். “சர்ப்ரைஸ் … ஓ… […]
ஒரு குப்பை சமாச்சாரம் ..
உங்கள் வீட்டு முகவரிக்கு வரும் தபால்களில், வாரத்தின் சில நாட்களில் கட்டுக் கட்டாகத் தபால்கள் வருவதை உணர்ந்திருப்பீர்கள். ‘நேரடித் தபால்’, ‘ மொத்தத் தபால்’ போன்ற முத்திரைகளைத் தாங்கி வரும் இத்தபால்கள் நமக்கு அறிமுகமில்லாத, கேள்விப்பட்டிராத தனி நபர் அல்லது நிறுவனங்களிலிருந்து அனுப்பப்பட்டிருக்கும். சில சமயங்களில் உங்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்தும், உங்களுடைய வாகனத்தின் தயாரிப்பு ஆண்டு மற்றும் மாடலைக் குறிப்பிட்டு வாகனக் காப்பீடு வாங்கச் சொல்லியும் கடிதங்கள் வரும். கிரெடிட் கார்டு சலுகைகள், காப்பீட்டுச் […]
சூப்பர் போல் எப்படி இருந்தது?
கடந்த ஞாயிறன்று (பிப்ரவரி 7ஆம் தேதி) நடைபெற்ற சூப்பர் போல் கால்பந்து விளையாட்டு இறுதிப்போட்டியைப் பற்றி மதுசூதனன் அவர்களும், சரவணகுமரன் அவர்களும் பேசிய அரட்டை.
சூப்பர் போல் (Super Bowl) அரட்டை
அமெரிக்காவில் நடந்து வரும் NFL விளையாட்டு தொடரின் இறுதி போட்டியான சூப்பர் போல் (Super Bowl) குறித்து மதுசூதனன் அவர்களும், சரவணகுமரன் அவர்களும் நடத்திய அரட்டை.
மாஸ்டர்
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகத் திட்டமிட்டப்பட்டு, பிறகு கொரோனா லாக்டவுனில் திரையரங்குகள் மூடப்பட, மாஸ்டர் படத்தின் ரிலீஸும் தடைப்பட்டு நின்றது. அதன் பிறகு, திரையரங்குகள் எப்போது திறக்கப்படுமோ, படம் எப்போது வெளியாகுமோ என்பது தான் கடந்த ஆண்டுக் கொரோனா தடுப்பூசியை விட விஜய் ரசிகர்களது பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. நடுவில் ஒரு பக்கம் ஓ.டி.டி பேச்சுவார்த்தைகள் நடக்க, இப்படத்தை வீட்டிலிருந்தே பார்க்க வேண்டி வருமோ, வழக்கமான திரையரங்கு கொண்டாட்டத்தை அனுபவிக்க முடியாதோ என்ற வருத்தம் ரசிகர்களைத் […]
பெருந்தொற்றுக்கால இந்தியப் பயணம்
2020 எல்லோருக்குமே மறக்க முடியாத வருடமாகி போனது. அதில் நானும் விதிவிலக்கு இல்லை. 2020 டிசம்பர் மத்தியில் எனது தந்தை இறந்த செய்தி ஒரு இரவில் என்னை வந்தடைய, பயணம் என்பது கேள்விக்குரியதாக இருக்கும் அந்த நேரத்தில், பயணத்தைச் சாத்தியத்திற்குரியதாக்குவதற்கான கேள்விகளை எழுப்பினேன். கோவிட் காரணமாகப் பயணங்களைத் திட்டமிடுவது முற்றிலும் வேறாக மாறியிருந்தது. எந்தெந்த விமானச் சேவைகள் பயன்பாட்டில் உள்ளன, எவ்வித கோவிட் பரிசோதனை எடுக்க வேண்டும், இந்தியாவில் அமெரிக்கத் தூதரகங்கள் மூடிக்கிடப்பதால், இந்தியா சென்று திரும்பும் […]






