Archive for May, 2013
சித்திரை சிறுவர்கள் நிறந்தீ்ட்டல்

நினைவிருக்கிறதா? ஏப்ரல் மாதத்தில் மேப்பிள் குரோவ் நகர் இந்து தேவாலயத்தில் நடந்த தமிழ்ப் புத்தாண்டு தினக் கொண்டாட்டத்தில் முகாமிட்டிருந்த பனிப்பூக்கள் குழுவினர் அங்கே திரளாக வந்திருந்த குழந்தைகளுக்கு வண்ணம் தீட்டும் போட்டி நடத்தினர் என்பது நினைவிருக்கிறதா? அந்தப் போட்டிகளின் வெற்றி பெற்ற படைப்புகள் இதோ:
சமூக வலைத்தளங்களும் அதன் பயன்பாடுகளும்

இந்த நூற்றாண்டில் உலகளாவிய முறையில் எங்கெல்லாம் மனித சஞ்சாரம் இருக்குமோ அங்கெல்லாம் இலத்திரனியல் / மின்னனுவியல் (electronics) தகவல் சாதனங்கள் காணப்படுகின்றன. தகவல் உச்சமமான தற்போதைய தசாப்தத்தில் தொழிநுட்ப முன்னேற்றங்கள் எவ்வாறு எமது அன்றாட வாழ்க்கையில் பலனையும், பாதகங்களையும் உண்டாக்கலாம் என ஒரு சில நிமிடங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது எமது குடும்பத்திற்கும் உடல் மற்றும் உள நலத்திற்குப் பயனாகவும், மன நிம்மதியைத் தரவும் வழிவகுக்கும். எம்மில்லங்களில் வளரும் பிள்ளைகளில் பெரும்பாலானோர் பாலகர்களாக இருக்கையிலேயே ஓடுபட […]
தலையங்கம்

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி வேறொன்றறியோம் பராபரமே!! – தாயுமானவர் “மினசோட்டா வாழ்த் தமிழர்களுக்கும் மற்றும் உலகின் அனைத்து மூலைகளிலும் இருந்து எங்களின் இணைய தளத்திற்கு ஆதரவு அளித்து வரும் அனைத்துத் தமிழ் நெஞ்சங்களுக்கும் எங்களின் வணக்கம். ஒரு வழியாகப் பனிக்காலம் முடிந்து, மினசோட்டாவில் வசந்தக் காலம் என்றோ கோடைக் காலம் என்றோ அழைக்க இயலாத ஒரு மாதிரியான குழப்பக் காலத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். மனிதர்களைப் போலவே புள்ளினங்களும், புல்லினங்களும் குழப்பமடைந்துள்ளன போலத் தெரிகிறது. வழக்கமாக இந்த நாட்களில் […]
வந்த காலம் இது வசந்த காலம்

சித்திரை தாண்டி வைகாசி வந்ததும் – நம்மூர்
கத்திரி வெயில் தான்
பட்டென மனதில் தோன்றி மறைகிறது
இது இப்போது இனிய வசந்த காலம்
புல்வெளி மூடிய பனிப்புயல் போய்
புல்நுனி தூங்கும் பனித்துளி பார்க்கிறேன்
கொட்டும் மழையில் வட்டக் குடைபிடித்து
வசந்தத்தை நான் வரவேற்புச் செய்கிறேன்
இசையுதிர் மாதம்

ஏப்ரல் மாதம், தமிழ் இசைத்துறை மூன்று பெரும் மேதைகளை இழந்து விட்டது. பி.பி. ஸ்ரீனிவாஸ் தோற்றம்: 09/22/1930 மறைவு: 04/14/2013 பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் – பெயர் அச்சுறுத்தும் வகையில் அமைந்தாலும் இனிமையான, அமைதியான குரலும், மனமும் கொண்டவர் பி.பி.எஸ். PBS (P.B.Sreenivos) is the best PBS (Play Back Singer) எனச் சொல்வார் திரையிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ். விசுவநாதன். தன் தந்தையின் நண்பர் திரு. சங்கர சாஸ்திரியின் இசையில் மிஸ்டர், சம்பத் இந்தித் திரைப்படத்தில் […]
மூளைவளர்ச்சியும் மொழி கற்றலும்

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்கிறது நம் முதுமொழி. இது மூளை வளர்ச்சியிலும் மொழிகற்றலிலும் தகுமான அறிவுரை என்பது தற்போதைய மொழியியல் கல்வி ஆராய்ச்சிகளில் இருந்து தெரிய வருகிறது. மொழி தெரிந்து கொள்ளல் மனித இனத்தின் பிரதான குணாதிசயங்களில் ஒன்று. மொழி கற்றல் மூளை வளர்ச்சியில் பிரதான மாற்றங்களை உண்டு பண்ணுகிறது என தற்பொழுது பரீட்சார்த்த ஆராய்ச்சி மூளைப் படங்கள் மூலம் தெளிவாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியின் பிரதான அவதானிப்பு என்ன வென்றால், மனித மூளை […]
உலகச் செம்மொழி – அத்தியாயம் 4

அத்தியாயம் 3 செல்ல இங்கே சொடுக்கவும் வணக்கம்! மனிதகுலம் தோன்றி வளர்ந்து பரவிய விதத்தை இருவிதக் கொள்கைகளில் விளக்குகின்றனர். 1.மேல்நாட்டவர் சொல்கின்றபடி மனித இனம் ஆப்பிரிக்கா பகுதியில் தோன்றி உலகம் முழுதும் பரவியது. 2.தென்னாட்டு அறிஞர்களின் கருத்தான மாந்த இனம் முதலில் கடல் கொண்ட தென்னாடான குமரிக்கண்டம் என்ற இலமுரியா கண்டத்திலேயே தோன்றி உலகம் முழுதும் பரவியது. இந்த இரண்டு கருத்துக்களுக்கும் முறையான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டாலும், அவற்றை ஆராய்வது நம் நோக்கமில்லை. தமிழ் அறிஞர்களின் கூற்றுப்படியும் நம் […]
இது குற்றமில்லை! வெறும் பருவமாற்றம்!

பட்டமரங்கள் துளிர்த்திடக் கண்டேன்!
கலி முற்றிட வில்லை!
காய்ந்த புல்வெளி பிழைத்திடக் கண்டேன்!
இது அதிசய மில்லை!
வெண்ணிறச் சாலைகளவை கறுத்திடக் கண்டேன்!
மதுரை

சில நகரங்கள் தோன்றும் மறையும் அது உலக இயல்பு. ஆனால் ஒரு சில நகரங்கள் மட்டுமே தொடர்ந்து மக்கள் வாழத் தகுதி உள்ளதாகவும் அதன் பெருமை குறையாமலும் இருக்கும். அத்தகைய ஒரு மாநகரம் மதுரை. கடைச்சங்கம் வளர்த்தப் பாண்டியத் தலைநகர், மல்லிகை நகரம், தூங்கா நகரம் என மக்களால் புகழப்படும் மாநகரம் மதுரை. எந்தப் பக்கச் சார்புள்ள வரலாற்று ஆசிரியர்களாலும் இதன் இருப்பைக் குறைந்தது 2500 ஆண்டுகளுக்குக் கீழ் சொல்ல இயலாது. மதுரையின் வரலாற்றைச் சொல்லக் கி.மு,கி.பி […]