Archive for May, 2013
நான் நாத்திகன்

“சொர்க்கத்திற்கு முகவரி என்ன?”… எனது ஏழு வயது மகள் தன் தாய்க்கு அன்னையர் தின வாழ்த்தட்டை மும்மரமாகத் தேடிக் கொண்டிருக்கையில், பின்னால் நின்று வெறுமையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எனக்குச் சட்டென மனதில் எழுந்தது இந்தக் கேள்வி. வாழ்த்தட்டை அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தைச் சுற்றிப் பல ஆண்கள். குழந்தைகளுடன் வந்தவர்கள் – என்னைப் போல – மனைவிமார்களுக்குக் குழந்தைகள் சார்பாக ஒரு வாழ்த்தட்டை வாங்க வந்ததாக ஊகித்துக் கொண்டேன். தனியாக வந்திருக்கும் ஆண்களை அவரவர்களின் அன்னையருக்காக வந்திருப்பதாக […]
மாந்தை தமிழ்க் குடியேற்றம் – பகுதி 2

ஈழநாட்டின் வடமேற்குப்பகுதியில் மாந்தையில் காணப்படும் பழைய தமிழ்க்குடியேற்றமானது, அவ்விடம் வாழ்க்கையைத் தொடர பல்வேறு உவர் நில இயற்கை அம்சங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக நிலை கொண்டிருந்ததைக் காணலாம். குடியேற்ற அமைப்பு இவ்விடத்தில் காணப்படும் மிகவும் பாரிய குடியேற்றமானது கி.பி. 5 ம் ஆண்டில் சுமார் 6000 நிரந்தர வாசிகளை கொண்டிருந்திருக்கலாமென அகழ்வாராய்ச்சிச் சான்றுகள் மூலம் நம்பப்படுகிறது. மாந்தைக் குடியேற்ற நிலப்பரப்புகளில் 30 ஹெக்ரயர் சுற்றளவில், 12 மீட்டர் ஆழம் வரை மனித நடமாட்ட சுவடுகளைக் காணக்கூடியதாக உள்ளது. மேலும் […]
காய்கறித் தோட்டம்

பக்கத்தில் படுத்திருந்த, முன்தூங்கி பின் எழும் பத்தினி இடுப்பில் குத்தினாள். “ஏண்டி உயிர வாங்கற.. கொஞ்ச நேரம் தூங்க விடு …” “இன்னைக்கு என்ன நாள் தெரியுமா? ஹோம் டிப்போவில கார்டனிங் வொர்க் ஷாப் .. மறந்துட்டேளா?” என்றவாறு வசதியாகத் திரும்பிப் படுத்து கொண்டாள். ஓ… அந்த நாள் வந்து விட்டதா? மினசோட்டாவில் ஏன் பன்னிரண்டு மாதங்களும் பனிக்காலமாகவே இருக்கக் கூடாது என்று தோன்றியது எனக்கு. “காப்பின்னு ஏதோ ஒண்ணு குடுப்பியே, அதையாவது கலந்து குடேண்டி” “ஏன்? […]
உலகின் முதன்மொழி
உலகின் முதன்மொழி தமிழ் மொழியாக இருக்குமோ? சமீபத்திய செய்தியில் 15,000 ஆண்டுகளாகச் சில சொற்கள் மாறவில்லை என்ற செய்தியைத் தொடர்பு படுத்திப் பார்க்கும் போது, மொழிக்குடும்பங்களின் வீச்சும் அவற்றின் படர்த்தியும் காண முடிந்தது. ஆசிய ஐரோப்பா மொழிக்குடும்பங்களைப் பற்றிய இந்தச் செய்தியில் புதைந்து கிடக்கும் பிற உண்மைகளையும் நாம் இங்கே பார்ப்போம். கீழ்க்கண்ட உலக வரைபடத்தைப் பாருங்கள், திராவிட மொழிக்குடும்பத்தின் ஆதி மொழி தமிழ் என்பது நாம் அறிந்தது, இதைத் தென் இந்தியா முழுவதும் பயன்படுத்தினார்கள் (நீல […]
இருவேறு படங்கள், ஒரே தாக்கம்…

மனித இனத்தில், அன்றாட வாழ்வில், தான் உண்டு தன் சொந்த வாழ்க்கையுண்டு என்று வாழ்பவர்கள் அதிகம். இவர்களின் கவனம் அசாதாரணச் சூழ்நிலைகளைச் சற்றேனும் உற்று நோக்குவதில் சிறிதளவேனும் திளைப்பதில்லை. இவர்களின் கவனத்தையும் கவர்ந்திழுக்கும் சக்தி சில படங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் உண்டு. அவற்றில் இரண்டு படங்களையும் நிகழ்வுகளையும் ஒப்பு நோக்குவதுதான் இந்தச் சிறிய கட்டுரை. வியட்நாம் போரின் உச்சத்தில் 1972ஆம் ஆண்டு புகைப்பட நிபுணர் நிக் உட் அவர்கள் எடுத்த இந்தக் கருப்பு/வெள்ளை படம் ஒரு பெரும் தாக்கத்தை […]