Archive for August, 2013
லம்பேர்ட்டனில் பண்டைய இரும்புத்தொழில்

இரும்புத் தாதுப் பொருள் பண்டையத் தமிழர் நாகரீகத்தில் இடம்பெற்ற முக்கியமானதொரு உலோகம். மினசோட்டா மாநிலமும் சென்ற இரண்டு நூற்றாண்டுகளில் மிகப்பெரிய இரும்புத்தாதுப் பொருள் அகழ்வுப் பிரதேசமாக இருந்து வருகிறது. தமிழ் வரலாற்றிலும் பாண்டிய தொன்மை காலத்தை இரும்பு காலமாக அகழ்வாராய்ச்சியாளர்கள் வகுத்து எமது தமிழ் நாகரீகத்தை படிக்கிறார்கள். இயந்திரமயமாக்கபட்ட நகர வாழ்க்கையில் நம்மில் பலருக்கு இரும்பினால் ஆன தளவாடங்களை வாங்கத் தெரியுமே தவிர அவை எவ்வாறு உருவாக்கப் பட்டன என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என்னதான் யூடியூப்பிலே கானொளியாகப் […]
வள்ளுவர் குடும்பம் கடிதம்

ஐயா அவர்களுக்கு வணக்கம்! பனிப்பூவானது சூரியனைக் கண்டால் உதிரும் பூக்கள் அல்ல! தமிழுக்கும் தமிழ் தாய்க்கும் உயிர்ப்பூட்டும் உறவுப்பூக்கள்! உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முடியாது! இதனை அனுபவித்தால் மட்டுமே உணரமுடியும்! தாயின் மடிமீது தலை வைத்து படுக்கும்போது எத்தனை சுகத்தினை அனுபவிப்போமோ அத்தகைய சுகத்தினை இந்த பனிப்பூக்கலின் படைப்புகள் மனதிற்கு இதமான இதழ்களாக உள்ளது. “ஒரு தாமரை மலரில் எது முதல் இதழ் எது கடைசி இதழ் என்று சொல்ல முடியாது அது போல பனிப்பூக்களின் ஒவ்வொரு […]
அன்னை மண்ணே…

அன்னை மண்ணே. அன்னை மண்ணே! சோகம் தீர்ப்பாயா எம் சோகம் தீர்ப்பாயா? கண்ணில் சிந்தும் பூக்கள் தூவி பாதம் பணிகின்றோம் – உன் பாதம் பணிகின்றோம் துடுப்பை இழந்த படகாய் எங்கள் வாழ்க்கை போனதம்மா வலிகள் சுமந்து புது வழிகள் தேடி விழிகள் அலைவதேனோ – எங்கள் மொழிகள் இழந்து மௌனியாகி வாயும் மூடியதேன்? யுத்தம் விளைந்த பூமியில் நாங்கள் செத்துப் பிழைக்கின்றோம் – தினம் ரத்தம் சிந்தி கொட்டும் போர் மழையில் செத்து மடிகின்றோம்! உண்ண […]
கடவுள்

கடவுள் என்றுண்டோ கற்பனை அதுதானோ கருத்துத் தெளிவதோ கலங்கிய குளமதோ கனவினில் உறைபவனோ கருத்தினை உரைத்தவனோ கதிரவனாய் ஒளிர்பவனோ கருஇரவில் கரைந்தவனோ கருணைக் கண்களோ கரம்மீது வாட்களோ கன்னியின் வடிவமோ கட்டிளங் காளையோ கருப்பு வண்ணமோ களைமிகு நல்லுருவமோ கங்கைத் தலையனோ கயலவள் மறுபாதியோ கன்னிகள் கேள்வனோ கற்பினுக் கரசனோ கனகத்தின் அதிபனோ கந்தலுடை யாசகனோ கள்வனின் காதலனோ களம்கண்ட காவலனோ கதைபல கொண்டவனோ கதைக்கவொண்ணா நிஜமவனோ கடவுள் ஒன்றுண்டோ கண்டவர் எவருளரோ கண்டிலாப் பொருளன்றோ கருத்தினில் […]
வைனோனா மினசோட்டா

இது மினசோட்டா மாநிலத்தில் தென்கிழக்குப் பகுதியில், மினியாபொலிஸ் நகரிலிருந்து ஏறத்தாழ 135 மைல்கள் தொலைவில், மிசிசிப்பி பேராற்றின் மேற்புற மடைக்கரை பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் ஆற்றங்கரை நகரம். இயற்கையாகவே பல மில்லியன் வருடங்களுக்கு முன்னால் செதுக்கப்பட்டப் பள்ளத்தாக்கில் பழமையும், நவீன நகர வசதிகளையும் ஓரிடத்தில் கொண்ட இடமாக அமைந்துள்ளது. இவ்விடம் இரண்டு பல்கலைக்கழகங்களும் ஒரு தொழில் நுட்பக் கல்லூரியும் உண்டு. பார்க்க வருபவர்கள் குறைந்த நேரத்தில் பார்ப்பதானால் Gavin Heights எனப்படும் மலைக்குன்றிலிருந்து இயற்கை அன்னையின் எழிலான நீள்கூந்தல் […]
வெப்பகால யாழ்ப்பாண உணவு

சென்ற பனிப்பூக்கள் இதழில் சமையல் குறிப்பில் யாழ்ப்பாணக் கூழ் பற்றிப் பார்த்தோம். வெட்பதட்பம் அதிகரித்த மினசோட்டாவில் நாம் எமது ஈழத்து, தமிழகக் கிராமிய வாழ்க்கை முறைகளைப் பற்றி ஆராய்ந்தால் உடலுக்கும் உளத்திற்கும் மிகுந்த அனுகூலமான விடயங்களை தெரிந்து கொள்ளலாம். Mid June, July இல்லை தமிழில்ஆனி, ஆடி மாதங்கள் எம் ஊரைப் பொறுத்தளவில் முதுவேனிற் காலம் என்பார்கள். இந்த வெப்பம் கூடிய காலத்தில் பித்தம், கபம், தலை சுற்றுதல் போன்றவை ஆரம்பிக்கலாம். இதே சமயம் வாதங்களும் சில சமயம் […]
Ceylon – “இனம்” திரைப்படம் ஒரு முன்னோட்டம்

ஈழத்தமிழர்களின் வாழ்வியலை வலிகளை அவர்கள் பட்ட.. பட்டுக்கொண்டிருக்கின்ற துன்பங்களைப் பலர் பல கோணங்களில் இன்று படமாக்கி வருகின்றனர். அந்தவகையில் தனது வித்தியாசமான கேமிரா கோணங்கள் மூலம் புகழ் பெற்ற பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் சிறிது கால இடைவெளிக்குப் பின்னர் “இனம்” என்ற படம் மூலம் மீண்டும் இயக்குனராக களமிறங்கி இருக்கிறார். “அசோகா”, “உறுமி” போன்ற ஒருசில படங்களை ஏற்கனவே இயக்கிப் புகழ் பெற்ற இவர் ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் “Ceylon” எனவும் தமிழில் […]
உலகச் செம்மொழி – அத்தியாயம் 5

ஆஸ்திரேலியா என்ற நாட்டின் பெயருக்கான தமிழ் மூலத்தை போன அத்தியாயத்தில் பார்த்தோம். ஆங்கில மூலச்சொல்லகராதியில் ஆஸ்திரேலியா என்ற சொல் லத்தினிய மொழியில் இருந்து வந்ததாக இருக்கின்றது.
தமிழ்ப் பயிற்சிப் பட்டறை

வட அமெரிக்காவில் எண்ணற்ற சங்கங்களைப் பார்த்திருப்பீர்கள், பல தமிழ்ச் சங்கங்களாவும் இருக்கக் கூடும். பெரும்பாலான சங்கங்கள், ஜனரஞ்சகம் என்ற போர்வையில் திரைப்படம் சார்ந்த ஆட்டத்துக்கும், பாட்டுக்கும் மட்டுமே முதன்மையளித்து செயலாற்றுவதையும் கண்டிருப்பீர்கள். கேளிக்கை நடவடிக்கைகளிலும் நல்ல கருத்துக்களையும், கலைகளையும் கற்றுத் தரும் நோக்கமுள்ள அமைப்புகள் கிடைப்பது அரிதாக உள்ள இக்காலத்தில், மினசோட்டா தமிழ்ச் சங்கத்தின் அமைப்பான மினசோட்டாத் தமிழ்ச்சங்கப் பள்ளி செய்து வரும் சேவையைப் பொதுமக்களிடம் கொண்டு செல்வதில் பெருமை கொள்கிறோம். கடந்த ஜுன் மாதம் 22 […]