\n"; } ?>
Top Ad
banner ad

Archive for October, 2013

பணிதற்குரிய பணி

பணிதற்குரிய பணி

”கரணம் தப்பினால் மரணம்” கேள்விப்பட்டதுண்டு. உணர்ந்ததில்லை. நாம் செய்யும் வேலைகளில் ஏதேனும் பிழை நேருமானால், ஏற்படும் சேதமென்ன? பிழை திருத்தக் கிடைக்கும் இரண்டாவது, மூன்றாவது சந்தர்ப்பங்கள் எத்தனை? பெரும்பாலான நேரங்களில் நம்மில் பலரின் பிழைகள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மேலும், பிழைகளைத் திருத்திக் கொள்ளப் பல வாய்ப்புக்களும் கிடைக்கின்றன. உலகில் மிகவும் வணக்கத்திற்குறிய பணிகள் என மிகச்சில பணிகளை மட்டுமே குறிப்பிட முடியுமென நினைக்கிறேன். தான் எட்டி பார்த்திராத உயரங்களைத் தங்கள் மாணவர்கள் முயற்சித்துப் பிடிக்கத் […]

Continue Reading »

ஏன் கடவுளே?

Filed in இலக்கியம், கவிதை by on October 6, 2013 2 Comments
ஏன் கடவுளே?

கடவுள் ஒருநாள் கருணையுடன் முன்தோன்ற
கண்கள் குளமாகிக் கனவிதோ, குழப்பமுற
கணம்பல கடந்ததும் கருத்தது தெளிந்திட
கலக்கம் துறந்து களிப்புடனே நான்கேட்க…

Continue Reading »

வாங்க ப்ரீயா பேசலாம் !!

Filed in இலக்கியம், கதை by on October 6, 2013 1 Comment
வாங்க ப்ரீயா பேசலாம் !!

என்னா ஊருங்க இது? ஒன்னு பேஞ்சு கெடுக்குது.. இல்ல காஞ்சு கெடுக்குது.. அதுவிமில்லீன்னா குளிரித் தொலைக்குது .. பொறக்காலப் போயி ஒக்காரதுக்குள்ளாற பொடனி எல்லாம் வெறச்சுப் போச்சுது.. பெருசா இல்லாட்டியும், ஊருக்கு அந்தாப்பல ஒரு சின்ன வூட்ட வாங்கிப் போட்டேனுங்க.. (நீங்க நெனக்கிற மாதரயெல்லாம் ஒன்னுமில்லீங்க .. சின்ன சைஸ் வூடுங்க ..) அது என்றான்னா நமுக்கு சோலி சாஸ்தியாப் போனது தான் மிச்சமுங்… எதையும் அனுபவிக்க முடிலீங்க.. ”காப்பி கீப்பி குடிக்கிறாங்களா மாமோவ்?” எங்கூட்டம்மணி. “காப்பி […]

Continue Reading »

இந்தியப் பயணம்

Filed in இலக்கியம், கதை by on October 6, 2013 1 Comment
இந்தியப் பயணம்

உணர்வுகள் – கடவுள் மனிதனுக்கு அளித்த வரம். உறவுகள் – அந்த வரத்தை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்ளும் பாலங்கள். காலையிலெழுகையில் வீட்டின் வாசலில் காகம் கரைந்தால் உறவுகள் வீட்டிற்கு வரப்போவதற்கான அறிகுறி என்பது என் கிராமத்தின் நம்பிக்கை, உணர்வு. இதில் அறிவியல் இருக்கிறதாவென்று நானறியேன், ஆனால் மனது உறவினர் கொண்டு வரப்போகும் தின்பண்டங்களை எதிர்பார்க்கத் தொடங்கிவிடும். அழகிய மாலைப் பொழுதில் சாவதானமாக அமர்ந்து உணவு உட்கொள்ளும்பொழுது வரும் விக்கல் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வாழும் உடன்பிறந்தவளின் […]

Continue Reading »

பயணங்கள் முடிவதில்லை!

Filed in இலக்கியம், கதை by on October 6, 2013 4 Comments
பயணங்கள் முடிவதில்லை!

“ம்மா … என்னோட பர்ப்பிள் கலர் நெயில் பாலிஷ் எங்க?” மாடியிலிருந்து சுமதியின் குரல். “ஏண்டி இப்படிக் கத்தற.. தொண்டை வத்தி போற மாதிரி .. இரு வர்றேன்” அவளை விட அதிகமாகக் கத்தினாள் ராஜி – சுமதியின் அம்மா. “ஏங்க… இந்த குக்கர்ல பருப்பு வெச்சிருக்கேன் .. மூணாவது விசில் வந்தா ஆஃப்  பண்ணிடுங்க .. அவ எதோ கேக்கறா .. நான் எடுத்து கொடுத்துட்டு வந்திடறேன் ..” என்று ஈரக் கையை நைட்டியில் துடைத்து […]

Continue Reading »

கவித்துளிகள் சில…

Filed in இலக்கியம், கவிதை by on October 6, 2013 0 Comments
கவித்துளிகள் சில…

அமாவாசை
சிதறிய நட்சத்திரங்களுக்குள்
செத்துக் கிடக்கிறது ஒரு நிலா.

கையடக்கத் தொலைபேசி
சட்டைப் பையில் பதுங்கியிருந்து
பணம் பறிக்கும் இரகசியக் கொள்ளைக்காரன்…

Continue Reading »

மூவர் தேவாரம்

மூவர் தேவாரம்

ஓம் நம்ச்சிவாய!

தேவாரம் எனப்படுவது சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமான் மீது கிபி 6ம் 7ம் 8ம் நூற்றாண்டை சேர்ந்த அப்பர் என்ற திருநாவுக்கரசர், ஆளுடைய பிள்ளை என்னும் திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார் இம்மூவரும் சிவாலயங்கள் தோறும் எழுந்து பாடிய இசைத்தோகுப்பே ஆகும். இவர்கள் மொத்தமாகப் பாடியது ஒரு லட்சத்தி இருபதினாயிரம் பாடல்கள் என்பது செவிவழிச்செய்தி.

Continue Reading »

கவிஞர் ஈரோடு தமிழன்பன்

கவிஞர் ஈரோடு தமிழன்பன்

” எதற்கப்பா எதுகை மோனை மின்னலைப் பிடித்து வைக்கவா சட்டி பானை? “ என்று எதுகை மோனையுடன் எழுதுவதை, எதுகை மோனையுடன் கிண்டல் செய்பவரைத் தெரியுமா? கிட்டத்தட்ட 120 வருடங்கள் பழமையான கவிதை வடிவமாக இருந்தாலும் இன்னமும் புதுக் கவிதை என்ற பெயருடன் உலா வரும் கவிதை வடிவமாக இருந்தாலும்  , ஆயிரக்கணக்கான வருடங்களாகத் தமிழின் பெருமையெனக் கருதப்படும் மரபுக் கவிதைகளாக இருந்தாலும் சரி, ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தமிழில் புகழுடன் விளங்கும் ஹைக்கூ எனப்படும் கவிதை […]

Continue Reading »

கோமடீஸ்வரர்

கோமடீஸ்வரர்

1980 களில், பாரதப் பிரதமர் இந்திரா காந்தி ஆகாயத்தில் பறந்து கொண்டே மலர் தூவி வணங்கியது பெருமளவு விவாதத்திற்குள்ளானது நினைவிலிருக்கலாம். அந்தக் கோமடீஸ்வரர் சிலை அமைந்திருக்கும் ஷ்ரவணபெளகொளா (Shravanabelagola) செல்லும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. மதச் சம்பந்தமான காரணமெதுவுமில்லாமல், சாதாரணச் சுற்றுலாவாகத் தொடங்கிய இந்தப் பயணம் பாதித்த ஒரு சில குறிப்புக்களைப் பகிர்ந்து கொள்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம். கர்நாடக மாநிலத்தில், பெங்களூர் நகரிலிருந்து சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் […]

Continue Reading »

மினசோட்டா ஆமிஷ் சமூகம்

மினசோட்டா ஆமிஷ் சமூகம்

மினசோட்டா ஆமிஷ் சமூகம் (Amish Community in Minnesota) மினசோட்டா மாநிலத்தின் தென்கிழக்கு  மூலையில் மாநில நெடுஞ்சாலை  52 யில், பிரஸ்டன்  (Preston) நகரத்துக்கும், புரொஸ்பர் (Prosper) நகரத்துக்கும்  குதிரை வண்டிகளுக்கென  அகன்ற பாதை அமைக்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். இந்தப் பகுதியில் அமைதியான எளிமையான, இயற்கையான விவசாயக் கிராமிய வாழ்க்கையை ஒற்றி வாழ்கிறது  ஐரோப்பியாவில் இருந்து குடியேறிய ஆமிஷ் சமூகம்.  ஹார்மனி (Harmony), மற்றும் காண்டன் (Canton) பகுதிகளில்,   ஆமிஷ்  சமூகத்தை சேர்ந்த ஏறத்தாழ 100 குடும்பங்கள் வாழ்கின்றனர். இவர்கள் 1970 […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad