Archive for October, 2013
அமெரிக்காவிலும் சாதி…

2007ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றில் இந்தியாவின் சாதி சமுதாயம் ‘இன வெறுப்பை” ஒட்டியது என்று பிரகடனப் படுத்தியது. இதற்கான குறிப்பை இந்த இணையதளத்தில் காணலாம்: https://www.cbc.ca/news/world/story/2007/03/02/india-dalits.html இந்திய அரசாங்கம் இந்தியாவின் சாதிகள் முறை இன வெறுப்பு அல்ல என்றும் சாதிகளையே அழித்து விட்டோம் என்று மறுத்துரைத்தது ஒரு தனிக்கூத்து. ஐ.நா.வின் மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு அறிக்கை https://www.hrw.org/reports/2001/globalcaste/ அதைச் சற்றுத் தள்ளி வைத்து நடப்புச் செய்திக்கு வருவோம். அமெரிக்காவிலும் சாதி உள்ளதா? என்று […]
மாதத்தின் மாமனிதர் – பெரியார்

சமுதாயத் தொண்டு செய்பவருக்கு, கடவுள் பக்தி இருக்கக்கூடாது, மத பக்தி இருக்கக்கூடாது, தேசபக்தி இருக்கக்கூடாது, ஏன் மொழிபக்தி கூட இருக்கக்கூடாது, சமுதாய பக்தி ஒன்றுதான் இருக்க வேண்டும் அவனால் தான் ஏதாவது செய்ய முடியும். எவன் ஒருவன் கடவுளையோ, மதத்தையோ, சாஸ்திரத்தையோ, இலக்கியத்தையோ, மொழியையோ கைல வச்சுக்கிட்டு சமுதாயத் தொண்டுச் செய்யுரான்னா, அவன் சோறுண்பவன் அல்ல. இதைப்போன்று தெளிவாகவும் தைரியமாகவும் ஒருவரால் பேச முடியும் என்றால் அது பெரியார் என்றழைக்கப் படுகிற ஈ.வே.இராமசாமியால் மட்டுமே முடியும். மேற்கூறிய […]
தலையங்கம்

சரியாக நூற்றி நாற்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் உலகின் மொத்த நம்பிக்கைகளையும், கலாச்சாரத்தையும் வழி நடத்த ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒளி ஒன்று பிறந்தது. அதன் பெயர் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி. அஹிம்சையின் பலம் என்னவென்பதை உலகம் முழுதும் உணர்த்திய மகா சக்தி அது.
நயாக்கிரா பெருங்குகை

அமெரிக்காவின் பெருங்குகைகளில் ஒன்றான நயாக்கிரா எமது மாநிலத்தில் அமெரிக்க நாட்டின் பிரபலமான பத்துக் குகைகளில் ஒன்று, இரட்டை நகரங்களிலிருந்து மூன்று மணி நேரக் கார் பயணத் தொலைவில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? இயற்கையில் குகைகள் என்பது உயர்ந்த மலைகளிலும், மலை அத்திவாரத்திலும், மேலும் நிலத்திலே துளையாக உள்ள பாதாளம் போன்றும் பலவகைப்பட்டது. பொதுவாக எல்லாக் குகைகளும் இவற்றின் ப்ரதான அம்சமான ஒன்றில் வகைப்படுத்தப்படும். ஆயினும் மினசோட்டா மாநிலத்தின் நயாக்கிரா குகையோ பல்வேறு குணாதிசயங்களையும் உட்கொண்டது. அமெரிக்கக் கண்டங்களில் […]
பயற்றம் பணியாரம்

துருவிய தேங்காய்ப்பூவை பொன்னிறமாக வாணலியில் வறுத்து, மாவாக இடித்துக்கொள்ளவும். பின்னர் பயிற்றமாவில், சிறிது தேங்காய், சர்க்கரை, சீனி, சேர்த்து இடித்துக் கலந்து கொள்ளவும். பின்னர் பொடித்த ஏலக்காய்ப்பொடி, உப்பு சேர்த்து சிறிது கொதிநீரில் குழைத்து சிறிய உருண்டைகளாக செய்துக் கொள்ளவும்.